ஆனந்தி எழிலன் தொடர்பாகவும் செய்தி வெளியிட்ட அவுஸ்திரேலிய தொலைக்காட்சி மறைந்து வாழவேண்டிய நிலை. (வீடியோ இணைப்பு)
நடந்த தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற ஆனந்தி எழிலன் தொடர்பாகவும், மற்றும் யாழில் உள்ள பெண்கள் தொடர்பாகவும் அவுஸ்திரேலிய தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் மைக்கேல் எட்வாட் என்னும் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியின் நிருபர் யாழ் சென்றிருந்தார். அவர் அங்குள்ள நிலையை ஆராய்ந்து 4.00 நிமிடமாக ஒரு வீடியோவை தொகுத்து வழங்கியுள்ளார். அதில் வெள்ளை வான் கடத்தல், ஆனந்தி எழிலன் பேட்டி மற்றும் மறைந்து வாழும் சில யாழ் பெண்கள் தொடர்பாக அவர் விரிவாக ஆராய்ந்துள்ளார்.
இதனையே நேற்றைய தின ஏ.பி.சி தொலைக்காட்சி செய்தியாக வெளியிட்டுள்ளது. அதனை வன்னிமீடியா வாசகர்களுக்காக நாம் இங்கே இணைத்துள்ளோம்.
0 Comments