ஒன்லைன் கற்கையில் ஈடுபடத் தவறிய மாணவன் தந்தையின் தாக்குதலில் பலி

Thursday, September 30, 2021

 


ஒன்லைன் கற்கையில் ஈடுபடவில்லை என்ற காரணத்தினால் தந்தையின் தாக்குதலுக்கு இலக்கான மகன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

காலி மஹாமோதர சிஹம்பலாகாஹவத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தும்புத்தடியொன்றினால் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார்.

தரம் 11ல் கல்வி கற்று வந்த மாணவரே தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதற்காக தந்தை மகனை தலையில் தாக்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தலைப் பகுதி உணர்வின்றியிருப்பதாக குறித்த சிறுவன் தாய்க்கு கூறியதனைத் தொடர்ந்து, காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் மாணவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த மாணவரின் 49 வயதான தந்தையை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

READ MORE | comments

தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் அறிவிப்பு

 


தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம் மற்றும் கிளைக் காரியாலங்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் 4ஆம் திகதி முதல் தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமைக் காரியாலயம் மற்றும் ஏனைய கிளைக் காரியாலயங்கள் திறக்கப்பட உள்ளன.

எவ்வாறெனினும், ஒருநாள் சேவை தற்போதைக்கு ஆரம்பிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக கிராம சேவகரிடம் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்கள் பிரதேச செயலகங்களில் நிறுவப்பட்டுள்ள ஆட்பதிவு திணைக்கள பிரதேச கிளைகளில் ஒப்படைக்க முடியும் என தேசிய ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

READ MORE | comments

ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள நிலையில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு


நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்த நிலையில் , பொது போக்குவரத்து தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கள் எதிர்வரும் சில வாரங்களுக்கு இடம்பெற மாட்டாது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம  (Dilum Amunugama )தெரிவித்துள்ளார்.

எனினும், பேருந்து சேவைகளை மாகாணங்களுக்கு இடையில் முன்னெடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவைகள் மாகாணங்களுக்கு இடையில் வழமை போன்று முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைய மாத்திரமே, பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும், இந்த நடைமுறையை மீறும் பேருந்துகளை தமது வசப்படுத்திக் கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், ரயில் போக்குவரத்துக்களை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்தும் நடத்தாதிருக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

READ MORE | comments

நாளை நாடு திறக்கப்படும்-ஆனால் தடை நீடிக்கும்!

 


நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (01) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ள நிலையில், பயணக் கட்டுப்பாட்டை தொடர்ந்தும் அமுலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, நாளை முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்
READ MORE | comments

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா தயாரித்துள்ள அறிக்கை

 


சிறிலங்காவில் சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் போன்ற முறைமை இருப்பதாகத் ஐ.நா தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் அறிக்கை ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், 

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்(antonio guterres), சிறிலங்கா உட்பட 45 நாடுகளிலுள்ள சுமார் 240 சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான பழிவாங்கும் செயற்பாடுகள் மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவங்களை ஆவணப்படுத்தும் அறிக்கை, ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையில் ஐ.நா. மனித உரிமைகளுக்கான உதவி பொதுச் செயலாளர் ஐல்ஸ் பிராண்ட்ஸ் கெஹ்ரிஸால் நேற்று வழங்கப்பட்டது.

சிறிலங்கா குறித்து கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதி  மனித உரிமைகள் சபைக்கு மனித உரிமைகள் ஆணையாளர், அளித்த அறிக்கையில், சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமைகள் பாதுகாப்பாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது தீவிர கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல் போன்ற செய்பாடுகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“இதேவேளை இந்த நிலைமை குடிமை மற்றும் ஜனநாயக இடத்தில் ஒரு குளிர் விளைவை உருவாக்குகிறது மற்றும் சுய தணிக்கைக்கு வழிவகுக்கிறது என உயர் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஆகவே அரசு முகவர்களின் மிரட்டல் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்களுக்கு எதிரான துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான கண்காணிப்புகளையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவருமாறு அதிகாரிகளை மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தினார்

READ MORE | comments

காலி போதனா மருத்துவமனையின் மருத்துவர்கள்,தாதியர்கள் உட்பட 195 பணியாளர்களுக்கு கொரோனா

 


காலி கராப்பிட்டிய போதனா மருத்துவமனையில் 195 ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களில் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்தார்.

ஓகஸ்ட் 01 முதல் செப்ரெம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் மருத்துவமனை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது இந்த குழு அடையாளம் காணப்பட்டதாக மருத்துவமனை பணிப்பாளர் கூறினார்.

கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும்சிற்றூழியர்களும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் 21 கொவிட் நோயாளிகள் கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 06 கொவிட் இறப்புகள் நிகழ்ந்துள்ளன

READ MORE | comments

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுமியின் பிரேத பரிசோதனையில் திருப்பம்

 


மண்டூர் ஷமி)


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள மட்டக்களப்பு அரசடி பொற்கொல்லர் வீதியில் வீடொன்றிலிருந்து நேற்று முன்தினம் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 கல்வி பயிலும் 13 வயது சிறுமியென பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த நிலையில்  பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் சகோதரிகள் இருவர் வீட்டில் இருந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுமி நிகழ்நிலையூடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையிலிருந்துள்ளதாகவும் குளியலறையிலிருந்து வந்தபோது நிகழ்நிலையூடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை உயிரிழந்த நிலையிலிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேலதிக விசாரணைக்காக உயிரிழந்த சிறுமியின் சகோதரி மற்றும் அந்த வீட்டுக்கு வந்து செல்லும் இளைஞன் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று குறித்த சிறுமியின் சடலத்தினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் அ.இளங்கோவன் தலமையிலான சட்ட வைத்திய அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மரணத்திற்காகான காரணம் கண்டறியப்படாத நிலையில் சிறுமியின் உடற்கூறுகள் பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் உடல் இறுதி நல்லடத்திற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

 


சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 30ம் திகதி வரையில் சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த மாதம் 30ம் திகதி வரையிலான காலப் பகுதியில் கலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் ஒராண்டு காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி வரையிலான காலப் பகுதியில் கலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்வதில் நிலவி வரும் சிக்கல்களை கருத்திற் கொண்டு இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

இலங்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய குழுவின் நிலைப்பாடு வெளியானது

 


இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் திருப்தி அடைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில் வழங்கக் கூடிய நிவாரணம் தொடர்பில் சாதகமாக செயற்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஜீ. எஸ்.பி.சலுகையை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரியுடனான சந்திப்பில் இலங்கைக்கு வருகை தந்திருந்த பிரதிநிதிகள் குழு இதனைத் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் நீதி அமைச்சருடன் கலந்துரையாடினார்கள்.

இந்த சலுகையை நீடிப்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக இலங்கையின் முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்வதே இந்த பேச்சுவார்த்தையின் பிரதான நோக்கமாகும். இலங்கை தொடர்பான தமது மனப்பாங்கு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

நீதித்துறையின் தற்போதைய முன்னேற்றம் குறித்து இந்தக் குழு நீதி அமைச்சரிடம் வினவியதோடு நீதித்துறையில் சட்ட சீர்திருத்தம், நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்குதல், வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் நீதிமன்ற அறைகளை மேம்படுத்துதல் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரித்தல் ,அரசியலமைப்பு மறுசீரமைப்பு முதலியன தொடர்பில் நீதி அமைச்சர் தெளிவுபடுத்தினார்

READ MORE | comments

வரலாறு தெரியாமல் சிறுபிள்ளைத் தனமாகக் கருத்திடக் கூடாது- பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்

Wednesday, September 29, 2021

 


துதிமோகன்)


தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது. இந்த விடயங்கள் தெரியாமல் தமிழ்த் தேசியத்தின் குழந்தைப் பிள்ளைகள் கருத்துக்கள் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தொடர்பில் அண்மைக் காலங்களில் வெளிவந்த கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆரம்பிப்பதற்கு முயற்சி எடுத்த அமைப்பு முதலாவதாகச் சந்தித்த கட்சி தமிழீழ விடுதலை இயக்கம் தான். அதனைத் தொடர்ந்து தான் ஏனைய கட்சிகளை அந்த அமைப்பு சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு பெரிய நீணட வரலாறு இருக்கின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஆயுதப் போராட்ட இயக்கங்களிலே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். இதில் சில காலம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கூட இருந்ததாக வரலாறுகள் உண்டு.

தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஒரு பாதுகாப்புப் படையினரின் அறணை முற்றுமுழுதாக அழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு அதனைக் காணொளியாகப் படைத்தது. 1984ம் ஆண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை முற்றுமுழுதாக நிர்மூலமாக்கிய வரலாறு டெலோவுக்கே உண்டு.

ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்குள் பல முரண்பாடுகள் ஏற்பட்டது வெளிப்படையான உண்மை. 2001லே கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து நாங்கள் எல்லோரும் ஒன்றாகினோம். இன்னுமொரு உண்மையும் இருக்கின்றது, ஆயுதப் போராட்ட இயக்கங்களாக இருந்து அரசியற் கட்சிகளாக போராட்ட இயக்கங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்பு 1989ம் ஆண்டில் இருந்து இன்றுவரைக்கும் தொடர்ச்சியாக நடைபெற்ற ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் தமிழீழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் பாராளுன்ற உறுப்புரிமையை வகித்திருந்தது.

ஆனால் வரலாறு தெரியாத சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியத்தின் குழந்தைப் பிள்ளைகள், 2009 ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியத்துக்குள் வந்தவர்கள் கூறுகின்றார்கள் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் ஒரு கட்சி என்று மக்களுக்குக் காண்பிப்பதற்காக ஜெனீவாவுக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பம் வைத்துள்ளது என்று.

தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது. எமது கட்சியின் 50வது ஆண்டு பூர்த்தியை நாங்கள் 2019ம் ஆண்டு கொண்டாடியுள்ளோம். 52வது ஆண்டிலே தமிழீழ விடுதலை இயக்கம் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த விடயங்கள் தெரியாமல் கருத்துக்கள் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.

கட்சியிலே தேசியத்துடன் நீண்ட காலம் இருக்க வேண்டும், வளர வேண்டும், பக்குவம் அடைய வேண்டும், அதற்குப் பின்பு இந்த வரலாறுகளைச் சரியாகப் படிக்க வேண்டும். எம்மைப் பொருத்தமட்டில் சுமார் 39 வருடங்களாக போராட்டம், அரசியல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ற வரலாற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு கடந்த கால வரலாற்றினை யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. ஆனால் சிலருக்கு இந்த வரலாறுகளை யாராவது சொல்லிக் கொடுக்க வேண்டும் அல்லது ஏதாவது புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வரலாறுகளைப் பற்றி அறிய வேண்டுமாக இருந்தால் அவற்றைச் சரியானவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்
READ MORE | comments

ஒக்டோபர் 15இல் பாடசாலை ஆரம்பம்- வந்தது அறிவிப்பு!

 


தென் மாகாணத்தில் உள்ள 200இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் 15ஆம் திகதி மீள திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தென்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா இதை தெரிவித்துள்ளார்.

தென்மாகாணத்தில் 200இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 514 பாடசாலைகள் காணப்படுவதாகவும், தற்போது மேற்படி பாடசாலைகளில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலைகளை சுத்தம் செய்வதற்காக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்நடவடிக்கைகளுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

விண்வெளியில் தோன்றியது கடவுளின் கரமா?

 


நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது.


அந்தப்படத்தில் தங்கத்தால் ஆன கை போன்ற ஒரு மூட்டம் இருந்தது.
அது ‘கடவுளின் கை’ (Hand of God) என்று சமூக ஊடகத்தில் பலரும் கூறி வருகின்றனர்.

கை போன்ற உருவத்தில் உள்ள அந்த ஒளி மூட்டம் என்ன என்பது குறித்து நாசா அந்த இன்ஸ்டாகிராம் பதிவிலேயே விளக்கமும் அளித்துள்ளது.

விண்மீன் ஒன்று வெடித்து சிதறிய பின்பு உண்டான பல்சர் (துடிப்பு விண்மீன்) ஒன்றால் உருவான ஆற்றல் மற்றும் துகள்களின் மூட்டமே தங்க நிறத்தில் கை போன்ற உருவமாக தெரிகிறது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

PSR B1509-58 என்று பெயரிடப்பட்ட இந்த துடிப்பு விண்மீன் பின் மூலம் சுமார் 19 கிலோ மீட்டர் குறுக்களவு (விட்டம்) கொண்டது என்றும் அது நொடிக்கு சுமார் ஏழு முறை சுழல்கிறது என்றும் நாசாவின் சந்திரா வானாய்வகம் தெரிவிக்கிறது.
READ MORE | comments

தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

 


நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளது.

இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதற்கான அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,  புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்

READ MORE | comments

பல்கலைக்கழகங்கள் நவம்பரில் திறக்கப்படும்

 


நவம்பரில் பல்கலைக்கழகங்களை மீள திறக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.


அடுத்த மாதம் முடிவுக்குள் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி போட அரசு ஏற்பாடு செய்துள்ளதால், நவம்பர் முதல் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்க முடியும் என்றார்.

இதற்கிடையில், நான்கு கட்டங்களாக பாடசாலைகளை, ஒக்டோபர் மாத இறுதிக்குள் திறக்க எதிர்பார்த்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த கூறியுள்ளார்.
READ MORE | comments

அழைத்தது மனித உரிமை ஆணைக்குழு! ஓடி ஒளிந்த அடாவடி “லொகான் ரத்வத்த”

 அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி காண்பித்து முழந்தாளிட வைத்து மிரட்டிய சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவை (Lohan Ratwatte) இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைக்காக அழைந்திருந்தது.

இவரை நேற்றைய தினம் விசாரணைக்காக அழைத்திருந்தது.

எனினும் அவர் மனித உரிமை ஆணைக்குழுவில்  முன்னிலையாகவில்லை என தெரியவருகிறது.


வேறொரு தினத்தில் தனக்கு அனுமதி அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகள் முன்னாள் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த லொகான் ரதவத்த (Lohan Ratwatte) அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்று தமிழ் கைதிகளை முழந்தாளிட வைத்து தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம் அரசியலில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தயிருந்தது.

அதன் பின்னர் அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்க சிறைச்சாலைகள புனர்வாழ்வு இராஜங்க அமைச்சர் பதவியினை விலகியிருநதார்.

இத்தாலிக்கு பயணமாகியிருந்த சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நாட்டிற்கு திரும்பியதும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா பொதுசன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.

READ MORE | comments

யானை மற்றும் மனித மோதலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்- இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க (photoes)

 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் நீண்ட காலமாக நிலவி வரும் யானை-மனித மோதலுக்கான தீர்வு விரைவில் பெற்றுக் கொடுக்கபடும் என வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார் .

இதற்கமைய அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் குறைக்க உடனடி நடவடிக்கை தொடர்பில்  மகாஓயா சிவில் பாதுகாப்பு படை முகாம் கேட்போர் கூடத்தில்  செவ்வாய்க்கிழமை(28) மாலை  உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது .






இதன் போது என் கொல்லப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, நாளை முதல் அனைத்து மின்சார யானை வேலிகளிலும் இரவு நேர ரோந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது..

மேலும் மின்சார யானை வேலியின் 01 கி. மீ. தொலைவில் ஒரு காவல் நிலையம் அமைக்கப்படும், இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் 04 காவலர்கள் நியமிக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் இதற்கென 5000 புதிய பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிவில் பாதுகாப்பு படையினர் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்பட்டு தீர்வுகளும் எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது
READ MORE | comments

207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த நடவடிக்கை

 


க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த, பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


பரீட்சை எழுதும் போது, முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உண்மையான பரீட்சார்த்திக்கு பதிலாக இன்னொருவர் ஆள்மாறாட்டத்தில் பரீட்சைக்கு தோற்றியமை, கையெழுத்து மாற்றம், விடைத்தாள் பரிமாற்றம், அலைபேசி வைத்திருத்தல் உள்ளிட்ட ஆறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்துக்கு இவ்வாறாஈன முறைகேடுகள் தொடர்பாக 4,174 புகார்கள் கிடைத்துள்ளன. இந்த முறைப்பாடுகளை ஆராய்ந்ததில், அவற்றில் 3,967 பேரினது பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட விண்ணப்பதாரர்கள் குறித்து தனி விசாரணைகள் நடத்தப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்தார்.

மேலும், மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்களை அழைப்பதற்கான திகதி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும், அவர் கூறினார்.
READ MORE | comments

நாடு திறந்ததும் மீண்டும் போராட்டத்தில் குதிக்க அதிபர்,ஆசிரியர்கள் முடிவு

Tuesday, September 28, 2021

 


வருகின்ற முலதாம் திகதி நாடு முழுமையாகத் திறக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.


இந்நிலையில் நாடு முற்றாகத் திறக்கப்பட்டதன் பிறகு மீண்டும் வீதிப் போராட்டங்களை நடத்த உத்தேசித்திருப்பதாக ஆசிரியர், அதிபர்கள் தொழிங்சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

இம்முறைப் போராட்டத்திற்கு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களினதும் ஆதரவு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
READ MORE | comments

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட வேண்டாம்” பெற்றோர்களுக்கு அவசர அறிவித்தல்


 12 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான பிள்ளைகளை தடுப்பூசி பெற்றுக்கொள்ள அனுப்ப வேண்டாம் என்றும்,  இது போன்ற ஒரு முடிவு இதுவரை எடுக்கவில்லை எனவும் சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை கூறினார். மேலும் தெரிவிக்கையில்,

12 - 19 வயதிற்குட்பட்ட குறைபாடுகள் உள்ள பிள்ளைகளுக்கே தடுப்பூசி போடும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும், ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஆரோக்கியமான குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை போடும் போது, நாங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதனால்தான் இது குறித்து நிபுணர்கள் தங்கள் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை.

எனவே, ஆரோக்கியமான குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசி மையங்களுக்கு விரைந்து செல்ல வேண்டாம் என்று டாக்டர் ஹேரத் கேட்டுக் கொண்டார்.

நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம், சரியான நேரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து நிபுணர்கள் பொருத்தமான பரிந்துரைகளை வெளியிடுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளைப் பின்பற்றத் தவறினால், கட்டுப்பாடுகளை தளர்த்துவது COVID-19 நிலைமையை மோசமாக்கும் என்றும் டாக்டர் ஹேரத் கூறினார்

READ MORE | comments

மட்டக்களப்பு நகர் பகுதியில் Zoom இல் இணைந்து கல்வி கற்ற சிறுமி சடலமாக மீட்பு

 


மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மட்டக்களப்பு அரசடி பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடொன்றில் சிறுமியின் சடலம் கிடப்பதாக நேற்றிரவு கிடைத்த தகவல்களை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.


சடலமாக மீட்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 கல்வி பயிலும் 13 வயது சிறுமியென பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் சகோதரிகள் இருவர் வீட்டிர் இருந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுமி Zoom ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையிலிருந்துள்ளதாகவும் குளியலறையிலிருந்து வந்தபோது Zoomகற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை தனது உயிரிழந்த நிலையிலிருந்ததாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.



READ MORE | comments

ஊரடங்கை நீக்குவது தொடர்பான இறுதி முடிவு என்ன? அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

 


நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை நீக்குவதா அல்லது மேலும் நீடிப்பதா என்பது சம்பந்தமான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக் கிழமை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாட்டில் தற்போது கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை தெளிவாக காணமுடிகின்றது.

விசேட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய கொவிட் தடுப்பு செயலணிக்குழு எதிர்வரும் வெள்ளிக் கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்பாக மிகவும் பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் என அமைச்சர் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நாட்டை திறப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் எனினும் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


READ MORE | comments

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்

 


பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக, வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வௌியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இந்த வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 42,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

கொரோனாவில் இருந்து பாதுகாப்பு பெற ஒரே வழி இதுதான்!

 


கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றில் இருந்து பாதுகாப்பு பெற தடுப்பூசியே தீர்க்கமான வழி என்றும், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் ஊடாகவே இந்த நோயிலிருந்து பாதுகாப்பு பெற முடியும் என்றும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமூக மருத்துவப் பேராசிரியர் மஞ்சு வீரசிங்க கூறியுள்ளார்.


தடுப்பூசி ஏற்றலுக்கு எதிராக ஒரு சிலர் வர்த்தக நோக்கங்களுக்காக பரப்பி வரும் மூடநம்பிக்கைகளுக்கு ஏமாறாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இன்னும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத இளைஞர்கள் முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் மஞ்சு வீரசிங்க வேண்டிக்கொள்கின்றார்.

தடுப்பூசி ஏற்றுவதால் பாலியல் பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஒருசிலர் கூறும் கருத்துக்களுக்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லையெனச் சுட்டிக்காட்டும் பேராசிரியர், விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாத அவ்வாறான தவறான கதைகளுக்கு ஏமாறாமல் புத்திசாதுரியமாக நடந்து கொள்வதன் மூலம் நபர்களையும் அதேபோல் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்பதையும் தெரிவிக்கின்றார்.

கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் நோக்குடன் பல்வேறு தளங்கள் மூலமாக பரப்பப்பட்டு வரும் தவறான கருத்துக்களை விஞ்ஞான ரீதியாக பரிசீலனை செய்வதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊடகக் கலந்துரையாடலில் பேராசிரியர் இதனைக் குறிப்பிட்டுக் கூறினார்.

நேற்றைய (27) கலந்துரையாடல் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதால் கொவிட் 19 உயிரிழப்பு வீதத்தைக் குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. அதனால் இளைஞர்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் வேலைத் திட்டத்தை சீர்குலைக்க வேண்டாம் எனவும், மருத்துவ முறைகளைப் பரப்புகின்ற போர்வையில் தவறான கருத்துக்களைப் பரப்புவர்களிடம் வீரசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

26 ஆம் திகதி வரைக்கும் 12 மில்லியன் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி இரண்டு கட்டங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில் 2.2 மில்லியன் பேருக்கு மாத்திரமே இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்க வேண்டியும் உள்ளது. இலங்கையில் மட்டுமன்றி முழு உலகிலுமே கொவிட் 19 கட்டுப்பாட்டுக்குள்ள சிறந்த தீர்வு தடுப்பூசியாகும்.

பேராசிரியர் சுட்டிக்காட்டிய வகையில், தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசி தொடர்பான சட்டம் முதன்முதலாக 1853 ஆம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றத்தால் கொண்டு வரப்பட்டது. அது சின்னமுத்து நோய்க்கானதாகும். மேலும் 170 வருடகாலமாக தடுப்பூசி ஏற்றலுக்கு எதிரான தரப்பினர்கள் ஒரே விதமான தர்க்கங்களையே முன்வைக்கின்றனர். குறித்த தடுப்பூசியால் பயனில்லை எனவும், ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பதார்த்தங்கள் இருக்கலாம் எனவும் மற்றும் மேற்கத்தேய மருத்துவ விஞ்ஞானத்தின் ஏகபோகவாதத்தை நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது போன்ற கருத்துக்கள் அவற்றில் சிலவாகும்.

1885 ஆம் ஆண்டில் நீர்வெறுப்பு நோய்க்கும், 1920 ஆம் ஆண்டில் தொண்டை அழற்சி நோய்க்கும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், மேலும் 1949 - 1955 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்குவதால் பல்வேறு நோய்களை குறைந்த மட்டத்திற்குக் கொண்டு வருவதற்கு முடிந்தமையால் தொற்று நோய்களுக்கு முக்கிய சிகிச்சையாகவும், தீர்மானம் மிக்க காரணியாகவும் காணப்படுவது தடுப்பூசியே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு வீதம் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கும் தடுப்பூசி ஏதுவாக அமைந்தமையை கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஹோமாகம மூன்றாம் நிலை கொவிட் 19 சிகிச்சை மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் எரங்க நாரங்கொட குறிப்பிட்டுக் கூறினார்.

இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு, ஒருமாத காலத்தின் பின்னரே நோய் எதிர்ப்புச்சக்தி முழுமையாக ஏற்படுமெனவும் கூறினார். குறித்த காலத்தை பூர்த்தி செய்யாவிட்டால் தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும், சிகிச்சை பலனளிக்காமல் மோசமான நிலைமைக்கோ அல்லது உயிரிழப்போ ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. தடுப்பூசி வகைகளுக்கு ஏற்ப அதிக நோய் எதிர்ப்புக் கிடைப்பதாக, பொதுமக்கள் மத்தியில் காணப்படும் எண்ணங்கள் பொய்யானவை எனவும், உலக சுகாதார தாபனம் அங்கீகரித்துள்ள 8 தடுப்பூசி வகைகளும் ஒரே சமமான நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதாகவும் மருத்துவர் தெளிவுபடுத்திக் கூறினார்.

பைசர் தடுப்பூசி 12 வயது தொடக்கம் 18 வயது வரையான பிள்ளைகளுக்கு மாத்திரமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எந்தவொரு தடுப்பூசியின் மூலமும் ஒரே சமமான நோய் எதிர்ப்பு சக்தியே கிடைக்கின்றது.

இலங்கை தெற்காசிய நாடுகளில் சிசுமரணம் குறைவான நாடாக காணப்படுவதற்கான காரணமாக அமைவது, குறிப்பிட்ட காலங்களில் பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்குவதாலேயாகும் என குடும்ப சுகாதாரப் பணியகத்தின் பணிப்பாளர், சமுதாய மருத்து விசேட நிபுணர் திருமதி. சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டுக் கூறினார்.

1961 ஆம் ஆண்டில் பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் ஆரம்பித்தாலும், நாடுபூராகவும் 1978 ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டது. பிள்ளைகளுக்குக் காலத்திற்குக் காலம் நோய்த்தொற்று ஏற்படுவதற்குள்ள சந்தர்ப்பங்களை ஆராய்ந்து அவற்றுக்குக் குறித்த காலத்தில் தடுப்பூசி வழங்குகின்றமையால், சிசு மரணத்தைக் குறைத்துக் கொள்வதற்கு இயலுமை கிட்டியுள்ளமையாலும், கொவிட் 19 தடுப்பூசி 12 வயதுக்குக் குறைவான பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு உலக சுகாதார தாபனம் அங்கீகரிக்கவில்லை எனவும் விசேட நிபுணத்துவ மருத்துவர் சுட்டிக்காட்டினார்
READ MORE | comments

நாடு அதிரும் அறிவிப்பை வெளிட தயாராகும் ஞானசார தேரர்!

 


முழு நாடும் அதிரும் வகையிலான முக்கிய எச்சரிக்கை அடங்கிய தகவல் ஒன்றை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிட உள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


சமூக வலைத்தள ஊடகம் ஒன்றுக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர் தற்போது முஸ்லிம் உறுப்பினர்கள் அமைப்புகள் என பலரும் தனக்கு எதிராக முறையிட்டு வருவதாகவும், அந்த செயற்பாடுகள் முடித்த பின் தாம் மேற்படி தகவல்களை வெளியிட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
READ MORE | comments

இலங்கையில் வாகனங்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்படும் அபாயம்

 


அமெரிக்க டொலர்களில் வரி செலுத்த ஒப்புக்கொள்ளும் நபர்களுக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதற்கான யோசனையை தங்கள் சங்கமே முன்வைத்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதிக்கு அமெரிக்க டொலரில் வரி செலுத்த ஒப்புக்கொண்டவர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் நேற்று தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் அந்த யோசனை ஆராயப்படும் என்ற போதிலும் அது செயற்படுத்தப்படாதென இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரென்சிகே தெரிவித்துள்ளார்.

மீண்டும் வாகன இறக்குமதியை ஆரம்பித்த பின்னர் வாகனத்தின் விலை 60 - 70 வீதம் அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

உலகின் 30-வது நாடாக ஓரினச்சேர்க்கைக்கு அனுமதி அளிக்கும் சுவிட்சர்லாந்து

 


ஒரே பாலினத்தவர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்க சுவிட்சர்லாந்து முடிவெடுத்துள்ளது.

இதை அடுத்து ஒருபால் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் உலகின் 30-வது நாடானது சுவிட்சர்லாந்து.

சுவிட்சர்லாந்து நாட்டில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றில் பங்கேற்ற சுமார் மூன்றில் இரண்டு பங்கினர் ஒருபால் திருமணத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ..

இந்த வாக்கெடுப்பில் பங்கேற்ற 64 சதவீதம் பேர் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்வதற்கு ஆதரவு அளித்துள்ளனர்.

இதனால் ஒரு பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும் இன்னொரு ஐரோப்பிய நாடாகிறது சுவிட்சர்லாந்து.

எல்ஜிபிடி உரிமைகளில் இந்த கருத்தறியும் வாக்கெடுப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒரு பாலின திருமணத்திற்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பது பாரம்பரிய குடும்ப அமைப்பை குறை மதிப்புக்கு உட்படுத்தும் என்று பழமைவாத அரசியல் கட்சியினரும், தேவாலயம் செல்லும் வழக்கம் உடையவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்

READ MORE | comments

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

 


நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி, காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, கொடபல பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல்ல மற்றும் எட்டியாந்தோட்டை பிரதேசங்களுக்கும் இவ்வாறு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ காரேலே, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, களவானஎஹலியகொட பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

அரச ஊழியர்களை பணிக்கு அழைக்க முடிவு! வெளியாகியுள்ள விசேட தகவல்

 


எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை திறந்தவுடன் அரச மற்றும் தனியார் ஊழியர்களை சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு பணிக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முதலாம் திகதி முதல் தனியார் துறை ஊழியர்களை வழக்கம் போல் அழைப்பதை அனுமதிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் நிதி அமைச்சில் இன்று மதியம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் அமைச்சகங்களின் செயலாளர்கள், காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பேருந்து சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

அதன்படி, முதலாம் திகதி முதல் காலை 9 மணிக்கு அரசு ஊழியர்களை அழைக்கவும், காலை 10 மணிக்கு தனியார் துறை ஊழியர்களை அழைக்க அனுமதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பயணிக்ககூடிய வகையில், சுகாதார அமைப்புக்கு ஏற்ப ரயில் மற்றும் பேருந்து சேவைகளை சமமாக இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கை பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரால் விரைவில் வெளியிடப்படும்.

இதனிடையே, நாட்டின் முழுமையாக திறப்பது குறித்து சுகாதார அமைச்சகம் விரைவில் ஒரு புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

READ MORE | comments

யார் பாடசாலைகளை திறந்தாலும் - கற்பித்தல் ஒருபோதும் நடக்காது - வெளியான உறுதியான அறிவிப்பு


யார் பாடசாலைகளை திறந்தாலும், ஆசிரியர்கள் சம்பள பிரச்சனை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் செயலாளர் ஆசிரியர்-அதிபர் பிரச்சனையை தீர்க்காமல் ஊடக சந்திப்புகளில் முரண்பாடான அறிக்கைகளை கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எந்த அடிப்படையில் கல்வி அமைச்சின் செயலாளர் மீண்டும் வேலை செய்யச் சொல்கிறார்? அவரது நகைச்சுவைகளை யார் ஏற்றுக்கொள்வார்கள்? உடனடியாக இந்த நகைச்சுவைகளை சொல்வதை நிறுத்துங்கள். பாடசாலைகளை திறந்து நடைமுறை ஆய்வுகளை நடத்துவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும்? முதலில் எமது பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொடுங்கள்.

அவர் ஒக்டோபரில் தனியாக பாடசாலையைத் தொடங்க முயற்சித்திருக்கலாம். இந்த வேலை நிறுத்தத்திற்கு இன்று (27 ம் திகதி) 78 நாட்கள் ஆகும். நாங்கள் குழந்தைகளைப் பற்றி சிந்திக்கிறோம்.

பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு கல்வி அதிகாரிகள் முறையான முடிவை எடுப்பார்கள் என்று நினைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்

READ MORE | comments

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

Monday, September 27, 2021

 


இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபர் தெரிவு செய்யப்படவுள்ளார்.

இலங்கை கல்வி அமைச்சு இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது.

இதுவரை காலமும்  குறித்த பதவிக்கு நீண்ட கால சேவை அனுபவத்தின் கீழ் கல்வி நிர்வாக சேவையின் முதல்தர அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.

எவ்வாறாயினும், தற்போது பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் பதவிக்காக பொருத்தமான தேர்ச்சி மட்டத்தை கொண்டிருப்பவர்கள் கல்வி அமைச்சரின் நிர்வாக சேவையில் இல்லையென்பதால் இவ்வாறு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தேர்ந்தெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விண்ணப்பங்களின் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

READ MORE | comments

48 மணிநேரத்தில் முக்கிய அறிவிப்பு

 


ஒக்டோபர் 1 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை மீண்டும் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, தேவையான வழிகாட்டுதல்கள் தற்போது இறுதி செய்யப்பட்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.


எதிர்வரும் வெள்ளிக்கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்கிய பின்னர், சுகாதாரம், பொதுப் போக்குவரத்து, விவசாயம், பொதுச் சேவை மற்றும் தனியார் துறையை எவ்வாறு பராமரிப்பது என்பது தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த சில நாட்களில் இது தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அடுத்த 48 மணி நேரத்தில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 53% பேருக்கு இப்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 30 வயதுக்கு மேற்பட்ட 98% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

20 முதல் 30 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தினர் ஒரு டோஸைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
READ MORE | comments

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் விடுமுறை வழங்கப்படமாட்டாது - கல்வி அமைச்சு அறிவிப்பு

 


ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அவ்வாறு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக வழங்கப்படும் டிசம்பர் மாத விடுமுறை இம்முறை வழங்கப்படமாட்டாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அதேவேளை, பாடசாலைகளை நான்கு கட்டங்களாக ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டிலே 200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் 5, 131 பாடசாலைகள் உள்ளதாகவும், அவற்றில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 3, 884 எனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்த வகையில் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகளை திறக்க முடியும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது

READ MORE | comments

ஊரடங்கு தளர்வு தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் கோட்டாபய விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!


 தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதுடன், அதனை மேலும் நீடிக்காமல் இருக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடு மீள திறக்கப்பட்டாலும் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கை ஒக்டோபர் முதலாம் திகதி தளர்த்துவதற்கு தேவையான உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அனைத்து பிரிவுகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதார, போக்குவரத்து மற்றும் ஏனைய பிரிவுகளினால் இந்த பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |