நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது.
அந்தப்படத்தில் தங்கத்தால் ஆன கை போன்ற ஒரு மூட்டம் இருந்தது.
அது ‘கடவுளின் கை’ (Hand of God) என்று சமூக ஊடகத்தில் பலரும் கூறி வருகின்றனர்.
கை போன்ற உருவத்தில் உள்ள அந்த ஒளி மூட்டம் என்ன என்பது குறித்து நாசா அந்த இன்ஸ்டாகிராம் பதிவிலேயே விளக்கமும் அளித்துள்ளது.
விண்மீன் ஒன்று வெடித்து சிதறிய பின்பு உண்டான பல்சர் (துடிப்பு விண்மீன்) ஒன்றால் உருவான ஆற்றல் மற்றும் துகள்களின் மூட்டமே தங்க நிறத்தில் கை போன்ற உருவமாக தெரிகிறது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
PSR B1509-58 என்று பெயரிடப்பட்ட இந்த துடிப்பு விண்மீன் பின் மூலம் சுமார் 19 கிலோ மீட்டர் குறுக்களவு (விட்டம்) கொண்டது என்றும் அது நொடிக்கு சுமார் ஏழு முறை சுழல்கிறது என்றும் நாசாவின் சந்திரா வானாய்வகம் தெரிவிக்கிறது.
0 Comments