தென் மாகாணத்தில் உள்ள 200இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் 15ஆம் திகதி மீள திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தென்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா இதை தெரிவித்துள்ளார்.
தென்மாகாணத்தில் 200இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 514 பாடசாலைகள் காணப்படுவதாகவும், தற்போது மேற்படி பாடசாலைகளில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலைகளை சுத்தம் செய்வதற்காக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்நடவடிக்கைகளுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments