அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி காண்பித்து முழந்தாளிட வைத்து மிரட்டிய சம்பவம் தொடர்பாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தவை (Lohan Ratwatte) இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைக்காக அழைந்திருந்தது.
இவரை நேற்றைய தினம் விசாரணைக்காக அழைத்திருந்தது.
எனினும் அவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகவில்லை என தெரியவருகிறது.
வேறொரு தினத்தில் தனக்கு அனுமதி அளிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலைகள் முன்னாள் சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சராக இருந்த லொகான் ரதவத்த (Lohan Ratwatte) அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் சென்று தமிழ் கைதிகளை முழந்தாளிட வைத்து தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டிய சம்பவம் அரசியலில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தயிருந்தது.
அதன் பின்னர் அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்க சிறைச்சாலைகள புனர்வாழ்வு இராஜங்க அமைச்சர் பதவியினை விலகியிருநதார்.
இத்தாலிக்கு பயணமாகியிருந்த சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நாட்டிற்கு திரும்பியதும் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிறிலங்கா பொதுசன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.
0 Comments