Advertisement

Responsive Advertisement

ஊரடங்கை நீக்குவது தொடர்பான இறுதி முடிவு என்ன? அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

 


நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை நீக்குவதா அல்லது மேலும் நீடிப்பதா என்பது சம்பந்தமான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக் கிழமை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சரவை இணைப்பாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாட்டில் தற்போது கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதை தெளிவாக காணமுடிகின்றது.

விசேட மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு அமைய கொவிட் தடுப்பு செயலணிக்குழு எதிர்வரும் வெள்ளிக் கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தொடர்பாக மிகவும் பொருத்தமான தீர்மானத்தை எடுக்கும் என அமைச்சர் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நாட்டை திறப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை எனவும் எனினும் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments