ஸ்ரீலங்காவை சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றினூடாக விசாரிக்க வேண்டும் : அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை

Wednesday, February 28, 2018

சிறிலங்காவில் நடைபெறும் இனப்படுகொலைகளைத் தடுக்க சிறிலங்காவில் தமிழ்ப் பிரதேசங்களில் நிரந்தர பணிமனைகளை ஐக்கிய நாடுகள் சபை நிறுவ வேண்டும் என்றும் ஸ்ரீலங்காவை சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றினூடாக விசாரிக்க வேண்டும் என்றும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழர்களுக்கான நீதியை தொடர்ச்சியாக மருத்துவரும் சிறிலங்காவை பொறுப்புக் கூறுவைப்பதற்காக மாற்று வழிகளை ஆராய வேண்டும், ஐநா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை இவ்வாறு தெரிவித்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதகவது,
• மனித உரிமைகள் சபையால் கொடுக்கப்பட்ட மூன்று வருட கால அவகாசத்தைத் தவறான முறையில் முன்னெடுத்துச் சென்றதற்காக சிறப்பு தீர்ப்பாயத்தை நிறுவி சிறிலங்கா விசாரிக்கப்பட வேண்டும் என ஐக்கி நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்.
• சிறிலங்காவைக் கட்டாயப்படுத்தி ரோம் சாசனத்தில் கையெழுத்திடச் செய்யவேண்டும்.
• போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் புரிந்த சிறிலங்காவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையூடாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தவேண்டும்.
• தமிழ்த் தேசத்தின் சுய நிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டால் மட்டுமே தமிழர்களுக்கான பரிகாரம் நீதி வழங்குவதற்கான ஒரே வழியாக அமையும்.
• 1948 ல் அறிவிக்கப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களின் தனித்தன்மை வாய்ந்த உரிமையை அடிப்படையாகக் கொண்ட, தமது சொந்த எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு சிறிலங்காவின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களிலும் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் மத்தியில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு ஐநா மேற்பார்வையில் நடாத்தப்பட வேண்டும்.
பெப்ரவரி 2018ல் வெளியான ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் படி சிறிலங்கா அரசு இன்னமும் தமிழ் மக்களுக்கு நீதி வழங்கத் தயாராக இல்லை என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பு நாடுகளை மாற்று வழிகளைத் தேடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் பெப்ரவரி 2018 UNHRC Report A/HRC/37/23 அறிக்கையின் படி சிறிலங்காவில் இனப்படுகொலைக்குத் தொடர்ந்து உள்ளாகி வருகின்ற தமிழர்களுக்கு நீதி வழங்குவதற்கான முன்னெடுப்புகள் நம்பகமற்ற தன்மையையே தொடர்ந்தும் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளது. இதையே கடந்த ஏழு தசாப்தங்களாக தமிழர்கள் உலகிற்கு அம்பலப்படுத்த முற்பட்டுள்ளார்கள். ஆகையால், சிறிலங்காத் தீவில் இருந்து தமிழர்களை இல்லாதொழிக்க முயற்சிக்கும் அடக்குமுறையாளர்களிடம் இருந்தே நீதி வழங்கப்பட வேண்டுமென உலக நாடுகள் தமிழர்களை தொடர்ந்தும் வற்புறுத்திக் கொண்டிருப்பது மிகவும் ஆச்சரியமளிக்கின்றது. இந்த அறிக்கையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ள விடயங்களை உற்றுநோக்கினால், ‘சுழற்சியாக ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் படுமோசமான வன்முறைகள், படுகொலைகள் என்பன தமிழர்களுக்கு நடைபெறும் அநீதியைகளைக் கோடிட்டுக் காட்டுகின்றன. குறிப்பாக, கபடத்தனமாக அரசியலைத் திறமையாகக்கையாளுதல், மற்றும் வெறுப்பூட்டும் இனவாதப் பேச்சுக்கள், சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான தகவல் பரிமாற்றங்கள் ஆகியவை,’ தமிழர்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும்.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ள விடயங்களாகிய, ‘தொடர்ச்சியாகக் கூறப்படும் முக்கிய குற்றச்சாட்டுக்களாக சித்திரவதை, இராணுவக் கண்காணிப்பு, நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்புவதில் உள்ள குறைபாடுகள் மற்றும் மந்தகதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவித்தல், பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்தல் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வைப் பெற எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் போதுமான முன்னேற்றமின்மை. சிறிலங்காவின் ஆறாவது திருத்தச்சட்டம் அரசாங்கத்தின் சீர்திருத்த முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான முக்கிய பகுதிகளை எதிர்மறையாகக் கொண்டிருக்கிறது.’இது சிறிலங்கா அரசாங்கத்தின் கொடூரமான முகத்தை வெளிப்படுத்துகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டனர். 2015 ம் ஆண்டு, இந்த மோசமான சட்டத்தை அகற்றுவதற்கான ஒரு தீர்மானத்தை சிறிலங்கா தானே வழிமொழிந்து ஐக்கிய நாடுகள் சபையில் உறுதி வழங்கி இருந்தது.
சிறிலங்கா அரசு உத்தரவாதம் அளித்தபடி இன்னும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அகற்றவில்லை. சிறிலங்கா அரசின் நல்லிணக்கச் செயற்பாடுகளில் முன்னேற்றம் இல்லாவிட்டாலும், 2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைச்சபை மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் சிறிலங்கா அரசிற்கு உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு வழங்கியது. மாறாக, சிறிலங்கா அரசு தான் அளித்த உத்தரவாதம் மற்றும் பொறுப்புக்களைப் புறக்கணித்து தொடர்ச்சியாத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கின்றது. 2009 ஆம் ஆண்டில் சிறிலங்கா இராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை சிறிலங்கா அரசு உறவினர்களுக்கும் சொந்தங்களுக்கும் வழங்க மறுத்து வருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோரின் சொந்தங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ச்சியாக இரவு பகலாக எந்தத் தீர்வும் இன்றி கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவத்தால் பலவந்தமாகப் பறிக்கப்பட்ட தமிழர்களின் சொந்த நிலங்கள் இன்றுவரை உரியவர்களிடம் கையளிக்கப்படவில்லை. ஐக்கிய நாடுகள் சபையையும் மற்றும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றுவதற்கு மிகச்சிறிய பகுதி காணிகளை மட்டும் விடுவித்திருந்தாலும், காணிகள் மீளளிக்கப்படு முன் மக்களின் வீடுகள் அனைத்தும் தரைமட்டமாக இடித்து அழித்ததுடன் குடிநீர்க் கிணறுகள் குப்பைகளால் நிரப்பப்பட்டுமிருந்தன. இத்தகைய செயற்பாடுகள் தமிழர்களின் மீதான இனவாத மற்றும் இனவெறிக்கு அடையாளமாகக் கூறலாம்.
சிறிலங்கா அரசின் கடந்தகால பதிவுகளை மனதில் வைத்து, அங்கத்துவ நாடுகளை நாங்கள் கோரும் விடயங்களாவன:
• சிறிலங்காவில் நடைபெறும் இனப்படுகொலைகளைத் தடுக்க சிறிலங்காவில் தமிழ்ப் பிரதேசங்களில் நிரந்தர பணிமனைகளை ஐக்கிய நாடுகள் சபை நிறுவ வேண்டும்.
• மனித உரிமைகள் சபையால் கொடுக்கப்பட்ட மூன்று வருட கால அவகாசத்தைத் தவறான முறையில் முன்னெடுத்துச் சென்றதற்காக சிறப்பு தீர்ப்பாயத்தை நிறுவி சிறிலங்கா விசாரிக்கப்பட வேண்டும் என ஐக்கி நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்.
• சிறிலங்காவைக் கட்டாயப்படுத்தி ரோம் சாசனத்தில் கையெழுத்திடச் செய்யவேண்டும்.
• போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றங்கள் புரிந்த சிறிலங்காவை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையூடாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தவேண்டும்.
• தமிழ்த் தேசத்தின் சுய நிர்ணய உரிமை அங்கிகரிக்கப்பட்டால் மட்டுமே தமிழர்களுக்கான பரிகாரம் நீதி வழங்குவதற்கான ஒரே வழியாக அமையும்.
• 1948 ல் அறிவிக்கப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களின் தனித்தன்மை வாய்ந்த உரிமையை அடிப்படையாகக் கொண்ட, தமது சொந்த எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு சிறிலங்காவின் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களிலும் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் மத்தியில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு ஐநா மேற்பார்வையில் நடாத்தப்பட வேண்டும்.
READ MORE | comments

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் மூவர் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை பகுதியில் உள்ளுர் சட்டவிரோதத் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பு – ஆயித்தமலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மீன்பிடி வலைகளும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் 35 மற்றும் 45 வயதுக்கு உட்பட்ட அம்பிளாந்துறை – மாவடி முன்மாரி பிரதேசப்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவரும் பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

ஓய்வு பெறுகின்றார் மோர்னே மோர்கல்

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் அவுஸ்திரேலிய அணியுடனான போட்டிகளின் பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்
ஒய்வு பெறுவது என்ற முடிவு கடினமானது என்றாலும் புதிய வாழ்க்கையை தொடங்க இதுவே சரியான தருணம் என நான் கருதுகின்றேன் எனக்கு இளமையான குடும்பமும் வெளிநாட்டு மனைவியும் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய கிரிக்கெட் அட்டவணை எங்களிற்கு பெரும் சிரமமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ள அவர் குடும்பத்தின் நலனே முக்கியம் அதனை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவிற்காக விளையாடுவது மிகச்சிறப்பான விடயம் ஆனால் குடும்பமே முக்கியமானது என தோன்றுகின்றது நான் கடந்த பத்து வாரங்களாக எனது குடும்பத்தை பிரிந்திருக்கின்றேன் இது மிகவும் கஸ்டமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுடன் கலந்துபேசினே; அவர்களுடன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிப்பது என தீர்மானித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் சிறப்பான நிலையில் உள்ளேன் நான் உலகநாடுகளில் இடம்பெறும் லீக்போட்டிகளில் கலந்துகொள்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

அரச நிறுவனங்களுக்கு 3000 மொழி உதவியாளர்கள்

இந்த நியமனங்களுக்கான அமைச்சரவை அங்கீகாரம் விரைவிர் கிடைக்கவிருப்பதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்துஇ பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இதற்காக விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான விண்ணப்பங்கள் விரைவில் கோரப்படவிருப்பதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு அறிவித்துள்ளது.
சாதாரண தரப் பரீட்சையில் சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் திறமை சித்தி பெற்றிருப்பது அவசியமாகும்.
முதற்கட்டமாக தெரிவு செய்யப்படும் 500 பேருக்கு ஆறு மாத பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்நோக்கும் மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இதன் நோக்கமாகும். தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் எமது செய்திப்பிரிவுக்கு தொவித்தார்.
இணைத்துக் கொள்ளப்படும் மொழி உதவியாளர்கள் அரச நிறுவனங்களில் இணைத்துக் கொள்ளப்படவிருக்கிறார்கள். வடக்குஇ கிழக்கு மாகாணங்களுக்கு இதன் போது முக்கியத்துவம் வழங்கப்படவிருக்கிறது. பொலிஸ் நிலையங்கள்இ மாகாண சபைகள்இ பிரதேச செயலகங்கள் என்பனவற்றிற்கு மொழி உதவியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
READ MORE | comments

மழை தொடரும்

நாட்டின் வான்பரப்பில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் அதிக மழைவீழ்ச்சி தொடருமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் ஓரளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேற்கு, தென், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல், கிழக்கு, ஊவா, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மாத்தளை பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் 100 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையிலான ஓரளவு காற்று வீசக்கூடும்.
தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பரப்பில் காணப்படும் இயங்குநிலை மேகக்கூட்டங்கள் காரணமாக காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய அதிக சாத்தியம் காணப்படுகின்றது.அவ்வேளையில் கடல் சடுதியாக கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்ககூடும்
இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
READ MORE | comments

இலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்! - வடமாகாணசபையில் தீர்மானம்

வட-கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்த இலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 117வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
  
இதன்போது மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை சபைக்கு கொண்டு வந்தார். ' போர் காலப்பகுதியிலும், போரின் நிறைவு காலப்பகுதியிலும் வடகிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டனர். இவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோரி காணாமல் ஆக்கப்பட் டவர்களின் உறவினர்கள் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
ஆயினும் காணாமல் அக்கப்பட்டவர்கள் விடயத்தில் உண்மையை கண்டறிய இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காத நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை அறிவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கவேண்டும் அதற்கான அழுத்தத்தை சர்வதேசம் இலங்கைக்கு கொண்டுவரவேண்டும் என கூறி யதுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் 30:01 தீர்மானத்திற்கமைய, இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ஒன்றை உரு வாக்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து அது அங்கீகரிக்கப்பட்டுள்ளபோதும் அது தொடர்பிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.
READ MORE | comments

முஸ்லிம் மாணவிகளைப் போல தமிழ் மாணவிகளுக்கும் சீருடை! - வட மாகாணசபை உறுப்பினரின் கோரிக்கை

வடக்கு மாகாண பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் பாடசாலை மாணவர்களின் ஒழுக்க விதிகள் தொடர்பாகவும் பேசப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு கோரினார்.
“வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவிகளின் சீருடையின் நீளத்தை அதிகரிக்க வடக்கு மாகாண கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சகோதர இனமான முஸ்லிம் மாணவிகளின் நீளக் காற்சட்டை போன்ற ஆடையை எமது மாணவிகளும் அணிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு “மாணவர்களுக்கு இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. அதற்கு ஏற்றவாறே ஆடைகள் தைக்கின்றனர். பாடசாலை மாணவிகள் ஒழுக்கமான முறையிலேயே உடை அணிகின்றனர். இது தொடர்பில் ஆராயலாம்.” என்று பதிலளித்தார் வடக்கு மாகாண கல்வி அமைச்சர்
READ MORE | comments

மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி! - வாகனம் தீக்கிரை

மட்டக்களப்பில் நேற்றுமாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் தீக்கிரையாக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது என வாகரை பொலிஸார் தெரிவித்தனர். சித்தாண்டி பிரதேசத்தில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு கந்தளாய் ஊடாக கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் வீதியால் சென்ற ஒருவர் மீது மோதியதில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
கதிரவெளியைச் சேர்ந்த கு.சிங்காரவேல் வயது (70) எனும் ஓய்வு பெற்ற கிராம சேவகரே இந்த விபத்தில் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் குறித்த கனரக வாகனத்தினை தீயிட்டு எரித்தனர். சாரதி வாகரை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பிரதேசத்தில் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலையினை பொலிஸார் கட்டுப்பாட்டிகுள் கொண்டுவந்துள்ளனர்.மேலும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
READ MORE | comments

இலங்கையை சர்வதேச நீதிப் பொறிமுறையின் முன் நிறுத்தக் கோரி வட மாகாணசபையில் தீர்மானம்!

Tuesday, February 27, 2018

இலங்கை அரசை சர்வதேச நீதிப் பொறிமுறையின் முன் நிறுத்துமாறு கோரும் தீர்மாகம் வடக்கு மாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 117 வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றபோதே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த தீர்மானத்தில் மேலும் , “2015 செப்ரெம்பரில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளின் போது இலங்கையில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறுதல், மனித உரிமைகள் முதலியவற்றை ஊக்கப்படுத்தல் என்ற தலைப்பிலான தீர்மானம் இலக்கம் 30:1 இனுடைய இணை அனுசரணையாகவும் அதில் ஒப்பமிட்டதுமாக இலங்கை இருந்ததையும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டங்களையும் மீறுதல் மற்றும் துஸ்பிரயோகம் செய்தது தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கென வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், வழக்கு தொடுநர்கள், விசாரணையாளர்கள் அடங்கலான பக்கச் சார்பற்ற சட்ட நெறி பொறியமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான கடப்பாடு நிலைக்குள் அது தன்னை உட்படுத்திக் கொண்டதையும் நினைவு கூர்ந்து,
30:1 இலக்கத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் எடுக்க தவறி விட்டிருப்பதோடு அரசினுடைய சனாதிபதி பிரதமர் மற்றும் அரசாங்க முதுநிலை உறுப்பினர்கள் தாங்கள் இந்த தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று தெளிவாகவும் ஆணித்தரமாகவும் வெளிப்படுத்தி இருப்பதையும் அழுத்தமாக தெரிவிப்பதோடு,
ஒரு சமத்துவமான அரசியல் தீர்வை கண்டு கொள்வதற்கான எந்த ஒரு மனப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்வதிலிருந்தும் தவறியிருப்பது மட்டுமல்லாமல் சிங்கள அரசினுடைய ஒடுக்கு முறை மனப்போக்கை எடுத்துக்காட்டும் விதத்திலே தமிழ் மக்கள் உள்ளிட்ட பௌத்தர்கள் அல்லாத மக்களை பௌத்தத்திற்கு முதலிடம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை இப்போதும் வலியுறுத்துவதையும் அக்கறையுடன் கவனத்தில் கொண்டு இலங்கையின் வட மாகாண சபையானது பின்வருமாறு தீர்மானம் எடுக்கிறது.
1. இலங்கையானது தானே ஏற்றுக்கொண்ட கடப்பாடுகளை நடைமுறைப்படுத்த மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மான 30:1 இனை நடைமுறைப்படுத்த இயலாமல் அல்லது விரும்பாமல், இருப்பதையும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதிய வருடாந்த அறிக்கை இல: A/HRC/3/23 இன் முடிவுரை V: 52 கூறுவதான இலங்கையின் பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கம் முதலியவற்றின் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் திருப்புமுனை வகிபாகத்தை மேற்கொள்ளும்படி மனித உரிமை ஆணையகத்தை உயர்ஸ்தானிகர் தூண்டுகிறார். அத்தோடு பொறுப்புக் கூறுதலின் வளர்ச்சிக்கு துணை நிற்கக் கூடியவையான உலகளாவிய விசாரணை அதிகாரத்தை பிரயோகித்தல் உள்ளிட்ட வேறு வழிகளை ஆராயும்படி உறுப்பு நாடுகளை அழைக்கிறது என்பதையும் கருத்திலெடுத்துள்ள இந்த சபையானது இந்த பிரச்சனையை ஐக்கிய நாடுகளின் தலைமையிலான ஒரு சர்வதேச சட்ட நெறிப் பொறியமைப்புக்கு முற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொள்கிறது.
2. உண்மை, நீதி மற்றும் சமத்துவமான அரசியல் தீர்வு இல்லாமல், இலங்கையிலே நல்லிணக்கமோ அல்லது நிரந்தரமான சமாதானமோ சாத்தியமானதில்லை என்று இந்தச் சபை நம்புகின்றது.
3. 2015 செப்ரெம்பரிலான இலங்கை மீதான OHCHR இன் விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது போல், றோம் நியதிச் சட்டத்தை அங்கீகரிக்க இலங்கையை வற்புறுத்தும்படி ஐநாவையும் சர்வதேச சமூகத்தையும் இந்தச் சபை கோருகிறது.
4. தமிழ் மக்கள் இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமது மரபு வழி தாயகத்தை கொண்டிருக்கும் ஒரு மக்கள் இனம் என்பதையும், அவர்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதையும் கண்டுணர்ந்திருக்கும் இந்த சபையானது, ஒரு அரசியல் தீர்வுக்கான இணக்க நடுவராக செயற்படும்படி சர்வதேச சமூகத்தைக் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவைக் கேட்டுக் கொள்கிறது.
READ MORE | comments

உள்ளூராட்சி சபைகளை அமைக்கும் காலம் மார்ச் 20க்கு ஒத்தி வைக்கப்பட்டது

உள்ளூராட்சி சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தினத்தை மார்ச் 20ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் ஏற்பட்டுள்ள சில சிக்கல் நிலைமைகளை சீர் செய்ய வேண்டிய காரணத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைவாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்ச் 6ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கே ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. என்பது குறிப்பிடத்தக்கது. 
READ MORE | comments

கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகத் தேர்வு

2015 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைவாக கல்வியில் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முக தேர்வு எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
19 கல்வியியல் கல்லூரிகளுக்கு 27 கற்கை நெறிகளுக்காக மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். -
READ MORE | comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதற் தடவையாக இடம்பெற்ற அதிசய நடன நிகழ்வு

மட்டக்களப்பு கல்லடி கலார்ப்பணா நாட்டிய நிலையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு “சதங்கை நாதாம்ருதம்” என்னும் நாட்டிய நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு,நாவற்குடாவில் உள்ள சுவாமி விபுலானந்தா அழகியல கற்கைகள் நிறுவகத்தின் இராஜதுரை அரங்கில் கலார்ப்பணா நாட்டிய நிலையத்தின் இயக்குனரும் நடன ஆசிரியருமான கலாவித்தகர்,நடனக்கலைமாமணி திருமதி சசிகலாராணி ஜெயராம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் சி.ஜெயசங்கர்,மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் கே.பாஸ்கரன்,கல்குடா வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், சுவாமி விபுலானந்தா அழகியல கற்கைகள் நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் கலாபூசணம் திருமதி கமலா ஞானதாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதல்முறையாக அதிகளவான மாணவர்கள் பங்குகொண்ட நாட்டிய நிகழ்வாக இந்த “சதங்கை நாதாம்ருதம்”நிகழ்வு விளங்கியது.

கல்லடி கலார்ப்பணா நாட்டிய நிலையத்தில் நாட்டியதுறையில் பயிலும் பல்வேறு வயதினையும் சேர்ந்த 165 மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதுடன் நடைபெற்ற நடன நிகழ்வுகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தமை இறுதிவரை அரங்கு நிரம்பிய மக்கள் வெள்ளம் வெளிபபடுத்தியிருந்தது.

இதன்போது நாட்டிய துறையில் அர்ப்பணிப்பான சேவையினையாற்றிவருவவோரும் கலைத்துறையில்சேவையாற்றியவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கல்லடி கலார்ப்பணா நாட்டிய நிலையத்தில் கல்வி பயின்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நாட்டியத்துறை மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வின் விசேடமாக கல்லடி உட்பட மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளி மாணவர்களின் கலை ஆர்வத்தினை தீர்க்கும் வகையில் நடனத்துறையின் மூலம் கலார்ப்பணா நாட்டிய நிலையம் அமைத்து சேவையாற்றிவரும் அதன் இயக்குனர் திருமதி சசிகலாராணி ஜெயராம் பெற்றோர்,மாணவர்கள்,நலன் விரும்பிகள்,பழைய மாணவர்களினால் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |