Home » » இலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்! - வடமாகாணசபையில் தீர்மானம்

இலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்! - வடமாகாணசபையில் தீர்மானம்

வட-கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்த இலங்கைக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக்கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாணசபையின் 117வது அமர்வு நேற்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.
  
இதன்போது மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை சபைக்கு கொண்டு வந்தார். ' போர் காலப்பகுதியிலும், போரின் நிறைவு காலப்பகுதியிலும் வடகிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் காணாமல் ஆக்கப்பட்டனர். இவர்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோரி காணாமல் ஆக்கப்பட் டவர்களின் உறவினர்கள் கடந்த ஒரு வருடமாக தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவருகின்றனர்.
ஆயினும் காணாமல் அக்கப்பட்டவர்கள் விடயத்தில் உண்மையை கண்டறிய இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காத நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான உண்மை நிலையை அறிவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கையில் இறங்கவேண்டும் அதற்கான அழுத்தத்தை சர்வதேசம் இலங்கைக்கு கொண்டுவரவேண்டும் என கூறி யதுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் 30:01 தீர்மானத்திற்கமைய, இலங்கை அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் ஒன்றை உரு வாக்கும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து அது அங்கீகரிக்கப்பட்டுள்ளபோதும் அது தொடர்பிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அவர் கூறினார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |