கடந்த சில நாட்களாக பிரதியமைச்சர் முரளிதரன் அவர்கள் செல்கின்ற இடங்களில் எல்லாம் தாம் பேசுகின்றபோது களுதாவளை மக்கள் நன்றி கெட்டவர்கள் என்று பேசி வருகின்றார்.
அத்துடன் களுதாவளையில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கின்ற கலாசார மண்டபத்தினை தான் கட்டிக் கொடுத்ததாகவும். அதனை களுதாவளை மக்கள் மறந்துவிட்டதாகவும் நன்றி கெட்டவர்கள் என்று பேசி வருகின்றார்.
களுதாவளையில் கட்டப்பட்ட கலாசார மண்டபம் பிரதியமைச்சர் முரளிதரனால் கட்டப்பட்டதா? முரளிதரன் சொல்வது உண்மையா என்பதைப்பற்றி நாம் ஆராய்ந்தோம்.
களுதாவளையில் புதிதாக கட்டப்பட்டிருக்கின்ற கலாசார மண்டபமானது. மிகவும் அழகாகவும் பிரமாண்டமாகவும் சகல வசதிகளும் கொண்டதுமாக அமையப்பெற்றிருக்கின்றது.
இக்கலாசார மண்டபம் தன்னால் கட்டப்பட்டது எனும் மாயையை மட்டக்களப்பில் தோற்றுவித்து. அதில் அரசியல் குளிர் காயும் நோக்கிலேயே இக்கலாசார மண்டபத்தினை தான் கட்டியதாகவும் களுதாவளை மக்கள் நன்றி கெட்டவர்கள் என்றும் முரளிதரன் பேசி வருகின்றார்.
இக்கலாசார மண்டபம் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தினால் அமைக்கப்பட்ட ஒன்றாகும் இதில் பெருமளவு நிதி ஆலயத்தின் பங்களிப்பாகும்.
இக்கலாசார மண்டபத்தினை கட்டுவதற்காக பல அரசியல்வாதிகள் நிதி வழங்கியதாக அறிய முடிகின்றது. கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினராக இருக்கின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வெள்ளிமலை, அமிர்அலி உட்பட பல அரசியல்வாதிகள் நிதி வழங்கி இருக்கின்றனர். இக்கலாசார மண்டப வேலைகளை துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக பிள்ளையான் அவர்களால் அண்மையில் 35 இலட்சம் நிதி வழங்கப்பட்டதாகவும் முன்னர் பிள்ளையானால் 20 இலட்சம் நிதி வழங்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.மொத்தமாக பிள்ளையானால் 55 இலட்சம் நிதி வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் முரளிதரனால் எந்தவிதமான நிதியும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் அறிய முடிகின்றது.
அண்மையில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய பரிபாலனசபையினை அழைத்த முரளிதரன் தன்னை அழைத்து கலாசார மண்டபத்தினை திறந்து வைக்கும்படியும் அதற்கு முன்னர் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தில் தன்னை அழைத்து கிராம்தில் இருக்கின்ற பொது அமைப்புக்கள் பொது மக்களுடனான சந்திப்பு கூட்டம் ஒன்றியை நடாத்தும்படியும் கேட்டுக் கொண்டதாகவும்.
களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம் இதுவரை எந்தஒரு அரசியல் சார்ந்து செயற்படவில்லை. அத்துடன் அரசியல் கூட்டங்களை ஆலயத்தில் நடாத்தவுமில்லை. கருணா வற்புறுத்தியதனால் கூட்டத்தினை கூட்டியிருக்கின்றனர்.
அத்துடன் திறப்புவிழா செய்யப்பட்ட கலாசார மண்டபத்தினை மீண்டும் திறப்புவிழா செய்ய வேண்டும் எனவும் அதற்கு பிரதம அதிதியாக தன்னை அழைக்க வேண்டும் எனவும் மிரட்டியிருக்கின்றார்.
அத்துடன் தான் செல்லும் இடம் எல்லாம் களுதாவளை மக்கள் நன்றி கெட்டவர்கள் என்று பேசியும் வருகின்றார்.
இதுவரை களுதாவளைக்கு எந்த ஒரு அபிவிருத்தியும் செய்யாத, களுதாவளைப்பக்கமே வராத கருணாவுக்கு களுதாவளையைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என்று களுதாவளையில் மக்கள் பேசுகின்றனர்.