மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் இன்று காலை (31.1.2014)ஆளில்லாத படகு ஒன்று கரை ஒதுங்கியது.
கரையொதுங்கிய இந்த படகு மூங்கில்களால் செய்யப்பட்ட 27 அடி நீளமும் 12 அகலமும் கொண்டது.
காத்தான்குடி கடற்கரை யோரம் கரையொதுங்கிய இந்த படகை மீளவர்கள் மற்றும் பொதுமக்கள் காத்தான்குடி ஏத:துக்கால் கடற்கரையில் இழுத்து கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் உட்பட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் இராணுவ அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர்.
இந்த படகு மியன் மார் நாட்டு படகாக இருக்கலாம் எனவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு சவுக்கடி கடலிலும் இவ்வாறான ஒரு படகு கரையொதுங்கியதாகவும் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்கள உதவி பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் தெரிவித்தார்.
இந்த படகின் சில பகுதிகள் தீப்பற்றி எரிந்து காணப்பட்டது இந்த படகை ஏராளமான பொதுமக்கள்.. பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments