மும்பை: 7-வது இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் 10 நாடுகளில் இருந்து 233 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் 46 இந்திய வீரர்களும் கலந்து கொள்கின்றனர். யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக், தினேஷ் கார்த்திக், பிரக்யான் ஓஜா, யூசப் பதான் அடிப்படை விலை மதிப்புள்ள பட்டியலில் வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.2 கோடிக்கு மேல் அடிப்படை விலை மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களை எட்டு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஏலத்தில் எடுக்கவுள்ளனர்.
சர்வதேச நட்சத்திரங்கள், ஐபிஎல் போட்டிகளில் முந்தைய வெற்றி போன்றவை பொறுத்து ஏலத்தில் எடுக்கவுள்ளனர். நியூசிலாந்தின் கோரே ஆண்டர்சன் மற்றும் அலெக்ஸ் ஆகியோர் ஒப்பந்தம் இருந்தால் மட்டுமே அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியும்.
முந்தைய ஆறு ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த இலங்கை வீரர் குமார் சங்ககாரா, இந்த ஆண்டு போட்டித் தொடரில் கலந்து கொள்ளவில்லை. மஹேலா ஜெயவர்த்தனே, தில்ஷன் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். ஆஸ்திரேலியாவின் பிராட் ஹாக் மற்றும் இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் ஆகிய இருவரது ஏல மதிப்பு இந்த ஆண்டு குறைந்துள்ளது.
ஐபிஎல் வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12 மற்றும் 13 ம் தேதி நடக்கிறது. முதல் முறையாக இந்திய ரூபாயின் மதிப்பின் படி வீரர்களின் ஏலம் நடக்கவுள்ளது.
பின்வரும் வீரர்கள் ஒவ்வொருவரும் ரூ.2 கோடி அதிகபட்ச அடிப்படை விலை மதிப்புடையவர்கள்:
பிரவீண் குமார், அமித் மிஸ்ரா, ஆசிஷ் நெஹ்ரா, திவாரி, ராபின் உத்தப்பா, முரளி விஜய், ஜார்ஜ் பெய்லி , பிராட் ஹாடின், பிராட் ஹாட்ஜ், மைக்கேல் ஹசி, மிட்செல் ஜான்சன், பிரெட் லீ, ஷான் மார்ஷ், ஜேம்ஸ் பாட்டின்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், அலெக்ஸ், சமித் படேல், கெவின் பீட்டர்சன், பிரண்டன் மெக்கல்லம், ராஸ் டெய்லர், காலிஸ், திலகரத்னே தில்ஷன், ஜெயவர்த்தனே ஜெயவர்தனே, ஏஞ்சலோ மேத்யூஸ், மார்லன் சாமுவேல்ஸ்.
0 Comments