நியூசிலாந்துக்கு எதிரான 4 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. அத்துடன் ஒருநாள் போட்டித் தொடரையும் இழந்தது.
இதனால் கடும் அதிருப்தியடைந்த அணித்தலைவர் டோனி, பந்துவீச்சாளர்கள் மீது குறை கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது
நமது பந்துவீச்சாளர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் மோசமான பந்துவீச்சின் காரணமாகவே இத்தொடரை இழந்துள்ளோம்.
இத்தொடரில் சமி மட்டுமே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புவனேஷ்குமார் இத்தொடரில் ஜொலிக்காவிட்டாலும் அவர் சிறந்த பந்துவீச்சாளர் ஆவார்.
ஆனால் தங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்த மூளையை அதிகமாக பயன்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும்.
கடைசி நேரத்தில் ஓட்டங்ளை வாரி வழங்குவதை பந்து வீச்சாளர்கள் நிறுத்தவேண்டும். புதுப்பந்தைக் கையாளும் போது கவனமாக இருப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments