Advertisement

Responsive Advertisement

அமெரிக்கப் பிரதிநிதி நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கை வந்தார்; யாழ்ப்பாணத்திற்கும் செல்கிறார்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு- மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (ஜனவரி 31) கொழும்பை வந்தடைந்துள்ள அவர், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 02) வரை இலங்கையில் தங்கியிருந்து நிலைமைகளை ஆராயவுள்ளார்.
குறிப்பாக, வடக்கு மாகாணத்துக்கான விஜயத்தினை நிஷா தேசாய் பிஸ்வால் மேற்கொள்ளவுள்ளார். அங்கு மாகாண சபையின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயம் அறிவித்துள்ளது.
அத்தோடு, மோதல்களுக்குப் பிந்திய நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நிஷா பிஸ்வால்  இந்த விஜயத்தின் போது அதிக கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் மார்ச் மாத கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டுவருவதற்கு அமெரிக்கா தீர்மானித்து செயலாற்றி வருகின்றது. அதனொரு கட்டமாகவே அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு- மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளரின் இலங்கை விஜயமும் அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Post a Comment

0 Comments