Home » » மட்டக்களப்புக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 513மில்லியன் ஒதுக்கியுள்ளது.

மட்டக்களப்புக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 513மில்லியன் ஒதுக்கியுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கென முதல் கட்டமாக 513 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளதாக மட்டக்களப்பு திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இந்த நிதி ஒதுக்கீடுகள் தேர்தல் தொகுதி வாரியாக மட்டக்களப்புக்கு 208 மில்லியன், கல்குடாவுக்கு 137 மில்லியன், பட்டிருப்புக்கு 168 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவை ஒருகிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம், திவிநெகும, கிராமப்புறப்பாலங்களும் பிரவேச வழிகளும், கிராமிப்பாடசாலை அபிவிருத்தியும் சுகநல நிகழ்ச்சித்திட்டங்கள், சிறுவர் முதியோர் இல்லங்கள் திருத்தம் செய்தல், உள்ளிட்ட அபிவிருத்தி வேலைகளுக்கு என பயன்படுத்தப்படவுள்ளது.

அபிவிருத்தித்திட்டங்களின் அடிப்படையில் பிரதேச செயலகங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் ஊடாக வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்சு உட்பட அனைத்து அமைச்சுகளினாலும் அபிவிருத்தித்திட்டங்களுக்கென 6028 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இதில் சுமார் 2000 மில்லியன் ரூபாய்கள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினுடையதாகும்.

இந்த நிதிகளில் 5130 அபிவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றில் 75 வீதமான வேலைகள் அனைத்தும் பூரணப்படுத்தப்பட்டு, மிகுதியான உள்ள வேலைகள் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

கடந்த வருடத்தில் ஊட்டப்பாடசாலைகள், தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம், திவிநெகும, கைவிடப்பட்ட பூர்த்தியாகாத சொத்துக்கள், திரிய பியச, உட்பட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |