இந்தியாவில் உள்ள புகழ்ப்பெற்ற குகைக்கோயில்கள்!!!

Saturday, November 30, 2013

இந்தியா என்றாலே அனைவருக்கும் பண்பாடு, கலாச்சாரம் தான் நினைவுக்கு வரும். அத்தகைய இந்தியா சிற்பக்கலையிலும் மிகவும் சிறந்தது. அதனால் இன்றும் நிறைய மக்கள் இந்தியாவிற்கு வந்து அத்தகைய இடங்களை பார்ப்பதற்கு  பல நாடுகளிலிருந்தும் வருகின்றனர். மேலும் இங்கு பல நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் நிறைய உள்ளன.
அத்தகைய கோயில்களில் உள்ள சிற்பங்கள் அனைத்துமே, இந்திய நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை நன்கு வெளிப்படுத்தும். அவ்வாறு வெளிப்படுத்தும் கோயில்களில் குகைக்கோயில்கள் சிலவற்றை யாராலும் மறக்க முடியாது. இன்றும் அது நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தளமாக உள்ளது.
மேலும் குகைக்கோயில்கள் என்றாலே அது பாறைகளால் ஆனது என்பது நன்கு தெரியும். அதிலும் அந்த கோயில்களில், ஒரு கோயிலை எடுத்தாலே அதில் பல அடுக்குகள் இருக்கும். அதனைப் பார்க்கும் போது, எவ்வாறு தான் அதனை வடிவமைத்தார்களோ என்று நம்மை சிந்திக்கும் வகையிலும், ஆச்சரியப்படுத்தும் வகையிலும் இருக்கும். மேலும் சில கோயில்களில் நுழைந்தால், எப்படி வெளியே வருவது என்று கூட தெரியாது. அந்த அளவில் சில குகைக்கோயில்களின் அமைப்புகள் இருக்கும்.
இப்போது அந்த மாதிரியான குகைக்கோயில்களில் நம் பாரம்பரியத் தளமாக இருக்கும் குகைக்கோயில்களுள் ஒரு சிலவற்றைப் பற்றியும், அது எந்த நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ளது என்பதையும் பார்ப்போமா!!!

எல்லோரா குகைகள்
கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சரநந்திரி மலையில் 30-க்கும் மேற்பட்ட குகைகள் வெட்டப்பட்டுள்ளன. இந்த எல்லோரா குகைகள் மஹாராஸ்ட்ராவில் அமைந்துள்ளன. இதனை இந்து, ஜெயின் மற்றும் புத்த மதத்திற்காக அர்பணிக்கப்பட்டுள்ளன. இது ஒரு உலக பாரம்பரிய தளமாக கருதப்படுகிறது.

அஜந்தா குகைகள்
இந்த குகையும் மஹாராஸ்ட்ராவில் உள்ளது. இதனையும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பினர் (UNESCO) உலக பாரம்பரிய தளமாக தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த அஜந்தா பாறை வெட்டுக் குகைகள் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து உருவாக்கத் தொடங்கியது.
உதயகிரி குகைகள்
மத்திய பிரதேசத்தில் உள்ள உதயகிரி குகைகளின் பாறை வெட்டுக்கள், குப்தப் பேரரசின் ஆட்சி காலத்தில் இரண்டாம் சந்திர குப்த பேரரசரால் கட்டப்பட்டது. அதிலும் இந்த குகைகள் கி.பி. 4-5 ஆம் நூற்றாண்டிலிருந்து கட்டப்பட்டது.
எலிபண்டா குகைகள்
மும்பை துறைமுகப் பகுதியில் உள்ள தீவில் அமைந்துள்ள எலிபண்டா குகைகள், இந்து மற்றும் புத்த மதத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்கள் அனைத்தும் 5 மற்றும் 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் குகைக்கோயில்
ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமைந்துள்ள அமர்நாத் கோயில் கடவுள் சிவனுக்காக, 3 ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பு இங்கு ஐஸ்கட்டியால் ஆன சிவ லிங்கம் இருப்பதேயாகும். இந்த அமர்நாத் குகைக்கோயில் சிறந்த சிவ ஸ்தளங்களில் ஒன்று.
படலீஸ்சுவரர் குகைக்கோயில்
பூனாவில் உள்ள படலீஸ்சுவரர் குகைக்கோயில் ஒரே ஒரு பாறையால் செதுக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த இந்து குகைக்கோயில் 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
வராகா குகைக்கோயில்
தமிழ்நாட்டில் உள்ள இந்த வராகா குகைக்கோயில் 7 ஆம் நூற்றாண்டின் முதலில் இருந்து, ஒரே மாதிரியாக இருந்து வரும் ஒரு வெட்டுப்பாறை. இந்த குகைக்கோயிலில் நான்கு தூண்கள் இருப்பதோடு, இது இந்து கடவுளான விஷ்ணு மற்றும் அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

இலங்கையை வழிக்கு கொண்டுவர பொருளாதாரத் தடை – பிரித்தானியா

பிரித்தானியா இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை கொண்டு வரும் யோசனை ஒன்றை முன்வைக்க உள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்த கொண்ட பிரித்தானியா பிரதமர் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வெளிப்படையான மற்றும் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரித்தானியா இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் வேலைத்திட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் பிரித்தானியா இலங்கைக்கு மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் பிரதமர் கமரூனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை அரசு போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் போதுமான விசாரணைகளை நடத்தவில்லை என தெரிவித்து பிரித்தானியா பொருளதார தடைவிதிக்கும் யோசனை ஒன்றை கொண்டு வரவுள்ளதாக பேசப்படுகிறது.
READ MORE | comments

சீன வான் பாதுகாப்பு வலயத்தை மீறி அமெ. யுத்த விமானம் பயணம் பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பு

சீனா புதிதாக பிரகடனப்படுத்திய வான் பாதுகாப்பு வலயத்தை மீறி இரு அமெரிக்க யுத்த விமானங்கள் பறந்துள்ளன. இவ்வாறு பறந்த பி - 52 ரக விமானங்கள் கண்காணிக்கப்பட்டதாக சீன பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
ஜப்பான் நாடும் உரிமை கொண்டாடும் கிழக்கு சீன கடற்பகுதியில் இருக்கும் சர்ச்சைக்குரிய தீவுகளையும் உள்ளடக்கியதாக சீனா புதிய வான் பாதுகாப்பு வலயத்தை பிரகடனம் செய்தது. ஆனால் அமெரிக்க யுத்த விமானங்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த பாதுகாப்பு வலயத்தினூடாக அத்துமீறி பறந்தது.
எனினும் சீனாவின் வான் வலயத்திற்கு அமெரிக்கா மற்றும் ஜப்பான் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. சீனா ஒருதலைப்பட்சமாக நிலையை மாற்ற முயற்சிப்பதாகவும் பிராந்தியத்தில் பதற்றத்தை தீவிரப்படுத்துவதாகவும் இந்த இரு நாடுகள் குற்றம்சாட்டின. இதில் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுகளையும் உள்ளடக்கியதாகவே சீனா கடந்த சனிக்கிழமை பிரகடனம் செய்த வான் பாதுகாப்பு வலயம் அமைந்துள்ளது.
ஜப்பான் சென்ககு என்றும் சீன டியாயு என்று அழைக்கும் இந்த தீவுகளால் கடந்த பல மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ளது. சீனாவின் வான் பாதுகாப்பு வலையம் ‘செல்லாதது’ என்று அறிவித்த ஜப்பான் அதனை கடைபிடிக்கத் தேவையில்லை என்று தனது விமானங்களுக்கு செவ்வாய்க்கிழமை அறிவுரை வழங்கியது. இந்த வலயத்தினூடாக பறப்பதில் எந்தப் பிரச்சினையையும் சந்திக்கவில்லை என்றும் ஜப்பான் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் வழமையான பயிற்சி நடவடிக்கையாக அமெரிக்காவின் ஆயுதம் தரிக்காத விமானம் குவாமில் இருந்து பறந்ததாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த யுத்த விமானங்கள் வழமையான பயணப்பாதையில் சென்றதாகவும் சீனாவினூடாகப் பறக்கத் திட்டமிடப்படவில்லை என்றும் பெண்டகன் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த வான் பாதுகாப்பு வலயத்தினூடாக பறக்கும் விமானங்கள் அதற்கு கட்டுப்பட்டே பறக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவசர பாதுகாப்பு நடவடிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்று சீனா எச்சரித்திருந்தது.
எவ்வாறாயினும் பாதுகாப்பு வலயத் தினூடாக பறந்த அமெரிக்க யுத்த விமானங்கள் மீது சீனா எந்த அவசர நடவடிக்கையையும் எடுத்ததாக அது நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. சீன பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், “சீன விமானப்படை குறிப்பிட்ட அமெரிக்க விமானம் ஒரு குறித்த காலத்தில் பயணித்ததை அவதானித்தது.
கிழக்கு சீனா கடற்பகுதியின் வான் பாதுகாப்பு வலயத்தினுடாக பறக்கும் அனைத்து விமானங்களையும் சீன கண்காணிக்கும். இந்த வான்மண்டலத்தை கட்டுப்படுத்தும் திறன் சீனாவுக்கு இருக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க யுத்த விமானங்கள் அத்துமீறி நுழைந்ததன் மூலம் சீனாவின் பாதுகாப்பு மண்டலத்தை ஏற்கவில்லை என்ற தெளிவான சமிக்ஞையை அமெரிக்கா விடுத்துள்ளது.
மறுபுறத்தில் பிராந்தியத்தில் பாதுகாப்பு செயற்பாடுகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள சூழலிலேயே இந்த பதற்றம் வெடித்துள்ளது. ஜப்பான் பாராளுமன்றம் நேற்று நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் பிரதமருக்கு அதிக அதிகாரங்களை வழங்கும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒன்றை நிறுவியது. அதேபோன்று சீனாவின் லியோனிங் விமானந்தாங்கி கப்பல் தென் சீன கடலை நோக்கி பயணித்தது.
READ MORE | comments

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயம் நடாத்தும் சாதனையாளர் பாராட்டு விழா - 2012

பட்டிருப்புக் கல்வி வலயம் பாடசாலை மாணவர்கள் ஆரியர்களை கௌரவிக்கும் முகமாக வருடாவருடம் சாதனையாளர் பாராட்டு விழாவினை நடாத்தி வருகின்றது. 2012 ம் ஆண்டிற்கான சாதனையாளர் பாராட்டு விழா 02.12.2013 திங்கட்கிழமை மு.ப.9.00 க்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் தலைமையில் மட்/களுவாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கௌரவ றியர் அட்மிரல் மொஹான விஜயவிக்கிரம கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களும், அதிவிசேட அதிதியாக பௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், ஜனாதிபதியின் ஆலோசகருர் அவர்களும், சிறப்பு அதிதிகளாக திரு.N.A.A. புஸ்பகுமார அவர்கள் முதலமைச்சர் கிழக்கு மாகாண சபை, அவர்களும் ஜனாப் M.T.A. நிஸாம் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர்களும், கௌரவ அதிதிகளாக திரு.S.சுதாகர் பிரதேச செயலாளர் ம.தெ.எ.ப அவர்களும் திரு.N.வில்வரெத்தினம் பிரதேச செயலாளர் போரதீவுப் பற்று அவர்களும் திரு.ஜயந்த ரத்நாயக்க உ.பொலிஸ் அத்தியட்சகர் களுவாஞ்சிகுடி அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள்  கொளரவிப்பும் பல கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
READ MORE | comments

இலங்கையில் எச்ஐவி பாதிப்பு இந்த ஆண்டில் கணிசமாக அதிகரிப்பு! – இதுவரை எயிட்ஸ்சுக்கு 307 பேர் பலி.

எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோயினால் இதுவரை 307 பேர் இலங்கையில் இறந்துள்ளதோடு 1649 எச்.ஐ.வி. பீடிக்கப்பட்டோர் அடையாளங் காணப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்தார். அவர்களிடயே எயிட்ஸ் நிலைக்கு தள்ளப்பட்டோர் 432 பேர் இருப்பதாகவும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் பீ. ஹெரிசன் எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது - 2010ல் 121 எச்.ஐ.வி. நோயாளர்களும் 2011ல் 146 பேரும் 2012ல் 186 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
2010ல் 44 பெண்களும் 77 ஆண்களும் அடையாளங்காணப்பட்டதோடு 2011ல் 64 பெண்களும் 82 ஆண்களும் அடையாளங் காணப்பட்டனர். 2012ல் 66 பெண்களும் 120 ஆண்களும் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியது அடையாளங் காணப்பட்டனர். கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி, களுத்துறை, காலி, புத்தளம் மாவட்டங்களிலேயே கூடுதலான எச்.ஐ.வி. நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எயிட்ஸ் நோய் பரவுவது குறைவாகவே உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

மாவீரர்தினத்தை அனுசரிக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்! – யோகராஜன் எம்.பி பாராளுமன்றத்தில் கோரிக்கை.

அரசாங்கம் யுத்த வெற்றி விழாவாக கொண்டாடும் 19ஆம் திகதியை யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவு கூறும் அஞ்சலி செலுத்தும் தினமாக அரசாங்கம் பிரகடனம் செய்ய வேண்டுமென ஐ.தே.கட்சி எம்.பி ஆர். யோகராஜன் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான விவாத்தின்போதே ஆர். யோகராஜன் எம்.பி இதனைத் தெரிவித்தார்.
தமிழ், சிங்கள மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுவதை அரசாங்கம் விரும்பவில்லை. வடக்கில் பல காலம் மாவீரர் தினம் நினைவு கூரப்படுகின்றது. ஆனால் அரசு எதிர்க்கின்றது ஏன்? மக்களை பிரித்து தமது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்கேயாகும். யார் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றனர் என சிந்தியுங்கள்? உயிரிழந்தவர்களையே உறவினர் அனுஷ்டிக்கின்றனர். போராளிகளாகட்டும் சாதாரண மக்களாகட்டு மரணித்தவர்களையே நினைவு கூருகின்றனர்.
கொலைகாரன் ஆகட்டும் தூக்கிலிடப்பட்டவர் ஆகட்டும், தூக்கிட்டு மரணமான பின்னர் இறுதிக் கடமைகளை செய்வதற்கு பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்படும். நான் பயங்கரவாதம் தொடர்பாக பேசவில்லை. பலாத்காரமாக புலிகள் இயக்கத்தின் இணைத்துக் கொள்ளப்பட்டவரொருவர் மரணித்தால் நினைவு கூற, இறுதிச் சடங்குகளை நடத்த இடமளிக்க வேண்டும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

படிப்பறிவில்லாதவர்கள், ஆடு, மாடுகள் போல நடந்து கொண்டனர்! - காணாமற்போனவர்களின் போராட்டம் குறித்த பொலிஸ் அதிகாரியின் கருத்து இது.

யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட காணாமல் போனவர்களது போராட்டத்தில் தாங்கள் யாரையும் தாக்கவில்லை என்று யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்தார். நேற்று யாழ் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு அருகில் இடம்பெற்ற காணாமல் போனோரது போராட்டத்தில் கிறீஸ்தவ பாதிரியார் ஒருவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது குறித்து ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், டேவிட் கமரூன் வருகை தந்திருந்த போது நாங்கள் அவருக்கு பாதுகாப்புக் கொடுப்பதற்காகவே அங்கு சென்றோமே தவிர யாரையும் தாக்கும் எண்ணம் எங்களிடம் இருக்கவில்லை. ஒரு நாட்டு பிரதமர் வரும் போது அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது எமது கடமை. ஏனெனில் அவருக்கு ஏதாவது நடந்துவிட்டால் எமது நாட்டின் கௌரவம் பாதிக்கப்படும். எனினும் இவ்வாறானதொரு முக்கிய பிரமுகர் வரும் போது பாதுகாப்புக் கடமைக்கு துப்பாக்கியை கொண்டு செல்வது அவசியமானது. எனினும் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை. லத்தி மட்டுமே எடுத்துச் செல்லப்பட்டது. இருப்பினும் துரையப்பா மைதானத்தில் நியூசிலாந்தைச் சேர்ந்தவர்கள் வந்திறங்கும் போது மக்கள் ஆடுமாடுகள் போல நடந்து கொண்டனர். அவ்வாறு இருக்கும் போது எப்படி அவரைச் சந்திக்க அனுமதிப்பது.
படிப்பறிவு இல்லாதவர்கள் மேற்கொண்ட இந்த செயல் மிகவும் கவலையளிக்கின்றது. எனினும் கமரூனை சந்திப்பதற்கு ஒரு ஏற்பாட்டினை செய்திருந்தால் அந்த இடத்தில் நாங்கள் விட்டிருப்போம். எனினும் அவ்வாறு ஒரு ஏற்பாடு இல்லாத இடத்தில் மக்களின் தன்னிச்சையான முடிவுகளுக்கு இடமளிக்க முடியாது. பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது எமது கடமை. இருப்பினும் நாங்கள் அங்கு கலந்து கொண்டவர்களில் ஒருவரைக் கூட தாக்கவில்லை. டேவிட் கமரூன் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு சென்றிருந்தார். சபாபதிப்பிள்ளை நலன்புரி நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்குள்ளவர்கள் அவருக்கு அருகில் நின்று பேசிக்கொண்டனர் அதற்குப் பொலிஸார் இடமளித்தனர். இது அவர்களது கண்ணியத்தன்மையைக் காட்டுகின்றது. என்றார்.
READ MORE | comments

மட்டக்களப்பு பெரியகல்லாறில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடிபொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் 4.00மணியளவில் பெரியகல்லாறு,உதயபுரம் தமிழ் வித்தியாலயத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெரியகல்லாறு மூன்றாம் வட்டாரம்,ஊர்வீதியை சேர்ந்த ஜெ.அசாந்த்(19வயது)என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தபோது வேகக்கட்டுப்பாட்டை மீறி உதயபுரம் தமிழ் வித்தியாலத்துக்கு அருகில் இருந்த தூண் ஒன்றில் மோதியுள்ளது. இந்த நிலையில் படுகாயமடைந்தவர் உடனடியாக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ள நிலையில் இடையில் அவர் உயிரிழந்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

READ MORE | comments

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையிடக் கூடாது! - மீண்டும் வலியுறுத்துகிறது சீனா.

இலங்கை உள்விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையீடு செய்யக் கூடாது என சீனா தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கமும், அதன் மக்களும் தமது உள்ளகப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளக் கூடிய ஆற்றலும் வல்லமையும் கொண்டவர்கள் என்று சீனா சுட்டிக்காட்டியுள்ளது. சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் நிலைமைகளை மோசமடையச் செய்யும். இலங்கை அரசாங்கத்தின் உரிமைகளுக்கு சர்வதேச சமூகம் மதிப்பளிக்க வேண்டும்.மனித உரிமை மேம்பாடு தொடர்பில் இலங்கை மக்கள் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் மனிதஉரிமை விவகாரங்களை உலக நாடுகள் அணுக வேண்டும். நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேச சமூகம் அரசியல் நோக்கத்திற்காகவோ அல்லது இரட்டை நிலைப்பாட்டுடனோ தலையீடு செய்வதனை ஏற்க முடியாது. மனிதஉரிமை விவகாரத்தை ஒர் கருவியாகப் பயன்படுத்தி நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கை தீவிர முனைப்பு காட்டி வருவதாகவும் இதனை வரவேற்க வேண்டுமெனவும் சீனா தெரிவித்துள்ளது.
READ MORE | comments

மட்டக்களப்பு பட்டிப்பளையில் பதட்டம்

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலாளரை அச்சுறுத்திய மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மீண்டும் பட்டிப்பளை – பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தமையால் இப்பிரதேசத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும், பதட்டம் ஏற்பட்டது.

பொலிஸ் நிலையத்திற்கு வந்த சுமணரத்ன தேரரை மீண்டும் செல்ல விடாது தடுக்கும் வகையில் பொது மக்கள் வீதியை மறித்து ரயர்கள் எரித்து தமது எதிர்ப்பைக் காண்பித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் தமது வாகனத்தில் ஏற்றி கடும்பாதுகாப்புடன் மண்முனை வரை கொண்டு சென்று பாதுகாப்பாக வழியனுப்பி வைத்துள்ளதாக பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பு - மண்முனை தென் மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளரினை அச்சுறுத்திய பௌத்த மதகுருவான அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மீண்டும் பிரதேச செயலக வீதியில் நடமாடியதனால் இப்பிரதேசத்தில் பதட்ட நிலைஏற்பட்டது.

பொலிஸ் நிலையத்திற்கு வந்த தேரரைத் தாக்கும் வகையிலும் அவரது நவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பிரதேச பொதுமக்கள் ஒன்று கூடி எதிர்ப்புக் காட்டியதுடன், வீதியில் ரயர்கள் எரிக்கப்பட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்திற்கு வந்த சுமணரத்ன தேரர் மட்டக்களப்புக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதே நேரம், இன்றைய தினம், பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் மந்த கதியில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை பகல் மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் புகுந்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் பிரதேச செயலாளரின் அலுவலக சாதனங்களைச் சேதப்படுத்தியிருந்ததுடன், பிரதேச செயலாளரையும்
அச்சுறுத்த்தியிருந்ததாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


அதனையடுத்து பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பகிஸ்கரிப்பிலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் நேற்றைய தினம் பொது மக்களும் பிரதேச செயலகம் முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதே நேரம் தேரர் பட்டிப்பளை- கொக்கட்டிச்சோலை பொலிஸார் ஊடாக களுவாஞ்சிக்குடி நீதிமன்றுக்கு  கொண்டுவரப்பட்டு நேற்றைய தினம் 50 ஆயிரம் ரூபா சரீரப்பிணையும் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

இறுதிப்போர், சனல்4 குறித்த சம்பந்தன் உரைக்கு எதிராக ஆளும்கட்சியினர் போர்க்கொடி! - பாராளுமன்றத்தில் சலசலப்பு.

தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி.யின் உரைக்கு ஆளும்தரப்பு எம்.பி.க்கள் நேற்று பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதிக்கட்ட மோதலின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றது. குறித்தும் சனல் 4 வீடியோக்கள் தொடர்பாகவும் சம்பந்தன் எம்.பி. தொடர்ந்து பேசினார். இதற்கு ஆளும் தரப்பு பிரதம கொடரா அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ. எச். எம். அஸ்வர், பீ.எச்.பீ.பியசேன ஆகியோர் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
ஒழுங்குப் பிரச்சினையொன்றை ஏ. எச்.எம்.அஸ்வர் மனித உரிமை மீறல் குறித்து பேசும் சம்பந்தன் எம்.பி. அரந்தலாவ பிக்குகள் கொலை, காத்தான்குடி பள்ளிவாசல் கொலைகள் என்பன குறித்து மறந்து பேசுவதாக குற்றஞ்சாட்டினார்.சனல்-4 அலைவரிசையை விமர்சித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன அவை நம்பகமற்றவை என்றார்.ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த பியசேன எம். பி. புலிகளை உருவாக்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பு எனவும் தமிழ் மக்களின் அழிவுக்கு அந்தக் கட்சியே பொறுப்பு எனவும் கூறினார். பொய் பிரசாரங்கள் செய்து த.தே. கூ. தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் குப்பிட்டார்.
சம்பந்தன் எம்.பி. யின் உரைக்கு ஆளும் தரப்பு எம். பி. கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து ஒரு கட்டத்தில் அவர் பேச்சை நிறுத்தி ஆசனத்தில் அமர்ந்தார்.
READ MORE | comments

சென்னையில் வைகோ வெளியிட்டு வைக்கும் 'நீந்திக்கடந்த நெருப்பாறு'!

Friday, November 29, 2013

இறுதிப்போரை மையமாக வைத்து வன்னி மண்ணின் மூத்த படைப்பாளி எழுதிய 'நீந்திக்கடந்த நெருப்பாறு' நாவலை மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 30-11-2013 அன்று மாலை 4 மணிக்குச் சென்னையில் வெளியிட்டு வைக்கின்றார். நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலின் வெளியீட்டு நிகழ்வை தமிழ்நாடு மாணவர்கள் கூட்டமைப்பினர் ஒழுங்கமைத்துள்ளனர். நாவலின் திறனாய்வுரை முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் வழங்குகின்றார். நாவல் வெளியீட்டு விழாவின் முக்கிய நிகழ்வுகள் வருமாறு

நூல் வெளியீட்டு சிறப்புரை -'திரு.வைகோ'
முதல் படி பெறுதல்:- மாணவர்கள்
தலைமை:- இமையம் ஜெபராஜ்
திறனாய்வுரை:- பேரா.பர்வின் சுல்தானா , பாரிமைந்தன்
வாழ்த்துரை:-ஓவியர்.வீர சந்தானம் திரு.திருமுருகன் காந்தி
நன்றியுரை:- பிரபாகரன்
அனைவரும் வருக ..
வீரமும் தியாகமும் நிறைந்த விடுதலை வரலாற்றின் ஒரு பகுதி நாவல் வடிவில்!
காலம் : 30-11-2013 மாலை 4மணி
இடம் : St.Antony's Hall, Egmore, Chennai.
தொடர்புக்கு :- 9944116274, 9940364232
READ MORE | comments

திருந்துங்கள் அல்லது திருத்தப்படுவீர்கள்.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்து நடத்துனர்கள் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வதாக அண்மைக்காலமாக முறைப்பாடுகள் தொடர்பில் உரிய தரப்பினர் உடனடியாக உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என
வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா . டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார் .
இவ்விடையம் தொடர்பாக அவர் இன்று (28-11-2103) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் ,
பாமரமக்கள் போன்றவர்களை மேற்படி நடத்துனர்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதாகவும் பெண் பயணிகளை அவர்களது உடலினை கண்டபடி தொட்டு பேருந்தினுள் தள்ளி ஏற்றி இறக்கி விடுவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது .
பேரூந்து தரிப்பிடம் இல்லாத இடங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதும் , பயணிகளை ஆடு மாடுகளைப் போல அதிகளவில் ஏற்றிச் செல்வதும் பயணிகளிடமிருந்து பயணத்திற்கான பணத்தினைப் பெற்றுக்கொண்டு பயணச் சீட்டுக்களை வழங்காமலும் பயணிகள் வழங்கும் பணத்திற்கு மீதியாக வரும் சிறு தொகை பணத்தினையும் மக்களுக்கு வழங்காமல் விடுவதும் . முதியவர்கள் , கர்ப்பிணித் தாய்மார்கள் , அங்கவீனமுற்றோர் மற்றும் மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆசனங்களை அவர்களுக்கு வழங்காது விடுவதும் அதிகரித்து வருவதாக நாளாந்தம் மக்களினால் முறைப்பாடுகள் தெரிவிக்கப் படுகின்றன .
இவை அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இல்லையேல் வருகின்ற தை மாதமளவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் .
மேலும் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தனியார் பேரூந்து சங்க தலைவர்களும் சமாசத் தலைவர்களும் கூடிய கரிசனை எடுத்து மேற்ப்படி விடயங்களை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் .
READ MORE | comments

கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் பாதிக் கப்பட்டிருக்கமாட்டார்கள்.

ரவூப் ஹக்கீம் அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். முஸ்லிம் தலைமைத்துவம் இனிமே லாவது சரியான பாதையினை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
மாகாண சபைக்கான அதிகாரங்களை முத லமைச்சருக்கே வழங்கப்பட வேண்டும். வடக்கில் இராணுவ குடும்பங்களை குடியேற்றி சிறுபான்மையினரை அழிக்கவே ஜனாதிபதி திட்டம் தீட்டுகின்றார் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமை அழைத்தும் ஹக்கீம் முட்டாள்தனமானதொரு செயலை செய்துவிட்டார். அன்று கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் பாதிக் கப்பட்டிருக்கமாட்டார்கள்.
அரசாங்கத்தை நம்பி உரிமைகளை இழந்திருக்கவும் மாட்டார்கள். நாட்டில் இன்று சிறுபான்மை மக்கள் அடக்கப்பட்டு வாழ்கின்றனர்.
இதற்கு சிறுபான்மைத் தலைமைத்துவமும் முக்கிய காரணமாகும். தனித் தனியாக அரசாங்கத்திற்கு எதிராகப் போராடாது தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தால் அரசாங்கத்தினை மாற்றியமைத்திருக்க முடியும்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பெற்றெடுக்க வேண்டுமெனில் தமிழ் முஸ் லிம் இனங்கள் ஒன்றிணைய வேண்டும். இரு இனத் தலைவர்களும் ஒற்றுமையுடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்பட வேண் டும்.
குறிப்பாக முஸ்லிம் மக்களின் நன்மை களுக்காக முஸ்லிம் தலைவர்கள் இனியா வது சரியானதொரு பாதையினை தெரிவு செய்ய வேண்டும்.
மாகாணசபையின் அனைத்து அதிகாரங்களையும் முதலமைச்சரிடமே ஒப்படைக்க வேண்டும். இதில் ஆளுநர் எவ்விதத்திலும் தலையிடக் கூடாது. மாகாணசபை என்றால் என்னவென்பதை முதலில் அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதை விடுத்து மாகாண சபையிலும் இராணுவத்தினரின் தலையீடுகளை உள் நுழைத்து நாட்டை இராணுவ மயப்படு த்தக்கூடாது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட அரச குடும்பத்தினர் நாட்டை இராணுவ மயப்படுத்தி இராணுவ ஆட்சியினை நடத்தவே முயற்சிக்கின்றனர்.
அரசியல் வாதிகளால் செய்ய முடி யாததனை இராணுவத்தின் மூலம் செய்யவே அரசாங்கம் செயற்படுகின்றது.
அதேபோல் வடக்கு, கிழக்கில் இராணு வத்தினரையும், இராணுவ குடும்பத்தின ரையும், சிங்களவர்களையும் குடியேற்றி வடக்கு, கிழக்கை சிங்கள பிரதேசமாக மாற்றி நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களை அழிக்கவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
எனவே, எமது இனத்திற்காகவும்,உரிமை களுக்காகவும் நாம் போராட வேண்டும். சிறுபான்மை மக்களால் தெரிவு செய் யப்பட்ட தலைவர்களும் மக்களுக்காக போராடவேண்டும் எனவும் அவர் தெரி வித்தார்.
READ MORE | comments

மட்டக்களப்புமாவட்டத்தில்100 பழக்­கி­ரா­மங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.



விவ­சாய அமைச்சின் அனு­ச­ர­ணை­யுடன் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 100 பழக்­கி­ரா­மங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. இதற்­கான ஆரம்ப வைபவம் சங்­கர்­பு­ரத்தில் நேற்று முன்­தினம் மாலை நடை­பெற்­றது.
மட்­டக்­க­ளப்பு மாவட்ட விவ­சாய திணைக்­களப் பணிப்­பாளர் பி.உக­நாதன் தலை­மை யில் நடை­பெற்ற இவ்­வை­ப­வ த்தில் 1000 தோடங்­கன்­றுகள் தெரிவு செய்­யப்­பட்ட பய­னா­ளி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன.
இத்­திட்­டத்தின் கீழ் வெல்­லா­வெளி, கிரான், வாகரை, செங்­க­லடி, வவு­ண­தீவு உட்­பட பல பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளி லும் 100 பழக்­கி­ரா­மங்கள் அமைக்­கப்­ப­ட­வு ள்­ளன.
தோடை, மாதுளை, நாரத்தை, மா, கொய்யா உட்­பட பழ மரங்கள் செய்கை பண்­ணப்­ப­ட­வுள்ளன. குறித்த மரக்­கன்­றுகள் நடுகை செய்­யப்­பட்டு மூன்று முதல் நான்கு ஆண்­டு­களில் பழங்­களை அறு­வடை செய்ய முடி­யு­மென பணிப்­பாளர் தெரி­வித்தார்.
READ MORE | comments

திருமணமான மம்முட்டியின் மகனை காதலிக்கும் நஸ்ரியா

நடிகை நஸ்ரியா நஸீம், மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் கோலிவுட்டுக்கு வருகிறார். அவர் அறிமுகமாகும் திரைப்படம் ‘வாயை மூடி பேசவும்’. அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நஸ்ரியா நஸீம்.
மேலும் இந்த திரைப்படத்தில் ரோஜா திரைப்பட புகழ் மதுபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். துப்ரைப்படத்தில் துல்கருக்கும், நஸ்ரியாவுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி சூப்பராக உள்ளதாம். இந்நிலையில் கெமிஸ்ட்ரி நிஜ வாழ்க்கையிலும் பொருந்திவிட்டதாம்.
நஸ்ரியாவும், துல்கரும் காதலர்களாக வலம் வருவதாக செய்திகள் வந்துள்ளன. இதில் விந்தை என்னவென்றால் துல்கர் ஏற்கனவே திருமணம் ஆனவர். நய்யாண்டி ரிலீஸ் நேரத்தில் தொப்புள் விவகாரம் மூலம் படத்திற்கு விளம்பரம் கிடைத்தது.
இந்நிலையில் வாயை மூடி பேசவும் ரிலீஸின்போது இந்த காதல் மேட்டரை பெரிய அளவில் பரப்ப படக்குழுவே முடிவு செய்திருக்கிறதாம். மூணாறில் படப்பிடிப்பு நடந்த போது மழையில் ஸ்கூட்டி ஓட்டி வரும் காட்சியில் நடித்த நஸ்ரியா கீழே விழுந்து காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

தற்கொலை தாக்குதலிலிருந்து தப்பியது எவ்வாறு?; மன்றில் பொன்சேகா விளக்கம்

இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற போது நான்  சுமார் 5 நிமிடங்கள் வரை வாகனத்துக்குள்ளேயே கதவை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அங்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் என்னை அம்புயுலன்ஸ் வண்டியொன்றில் ஏற்றில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார்’ என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்துக்குள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சாட்சியமளித்த போது குண்டு வெடித்த பின்னர் தான் 5 நிமிடங்கள் வரை வாகனத்தின் கதவை பிடித்துக்கொண்டிருந்ததாகவும் பின்னர் ஒரு இராணுவ அதிகாரி தன்னை அம்புலன்ஸில் ஏற்றி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் கூறினார்.
இராணுவ தலைமையகத்திலிருந்து பாதுகாப்பு தொடரணியுடன் புறப்பட்டு வந்தபோது வாசலி;ல் நின்ற கூட்டத்தினிடையே நீல நிற சல்வார் அணிந்த ஒரு பெண்ணை கண்டதாக சரத் பொன்சேகா கூறினார்.
இவரது கார் இந்த பெண்னை 2 மீற்றர் அளவில் நெருங்கியபோது அந்த பெண் நின்ற பக்கத்தில் தீச்சுவாலை எழும்பியதாகவும் சாரதி முன்னே சரிந்து கிடந்ததாகவும் தனதருகில் இருந்த இரண்டு காவலர்களும் நிலத்தில் கிடப்பதை கண்டதாகவும் அவர் கூறினார்.
தான் 5 நிமிடங்களுக்கு மேலாக கதவைப்பிடித்துக் கொண்டு உதவியை எதிர்பார்த்து இருந்ததாக கூறினார்.
எதிராளிகளான கிருபாகரன், சூரியகுமார், பிரகாஷ் ஆகியோரின் சார்பில் என்.ஸ்ரீகாந்தன், எஸ்.பஞ்சாட்சரன், ஏ.பிரியந்தன் ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகினர். வழக்கு மார்ச் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
READ MORE | comments

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு சிலர் முயற்சி செய்வதாகவும் அதனை தடுத்து நிறுத்தி பல்கலைகழகத்தில் கடமையாற்றும் தகமையற்ற கல்விசார் ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்குமாறு கோரியும் மாணவர்களினால் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு அரசடியில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இன்று நண்பகல் 12.00மணி தொடக்கம் ஒரு மணி வரை நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சகல சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர்nஎங்கள் எதிர்காலம் பீடாதிபதிகளின் கைகளில்,பீடைகளை ஒழிப்போம் பீடத்தினைக்காப்போம், தொல்லை கொடுப்பவனே தொலைந்துபோ, போன்ற பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மாணவர்கள்,
இது அரசாங்கத்துக்கோ,பல்கலைக்கழகத்துக்கோ எதிரான ஆர்ப்பாட்டம் அல்ல.கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் தேவைக்கு அதிகமாக சில தகமையற்ற கல்விசார் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.இவர்கள் பல பிரச்சினைகளை பல்கலைக்கழகத்துக்குள் ஏற்படுத்தமுனைகின்றனர்.

குறிப்பாக சிறப்பாக செயற்பட்டுவரும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியையும் இங்கு சிறந்த முறையில் கடமையாற்றும் விரிவுரையாளர்களையும் இங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.    

சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி நியனம் தொடர்பிலான தேர்வில் பிழையுள்ளதாகவும் மீள் தேர்வு செய்யுமாறும் சிலர் வைத்திய கல்வி ஆய்வுத்திணைக்களத்திடம் முறையிட்டுள்ளனர்.

இது சிறந்த முறையில் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் நடவடிக்கைகளை தம்பிக்க செய்யும் நடவடிக்கையாகும்.கடந்த காலத்தினை விட சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடம் சிறந்த முறையில் இயங்கிவருகின்றது. இதனை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

இது தொடர்பில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜாவின் கவனத்துக்கு கொண்டுசென்றுள்ளோம்.இது தொடர்பில் சிறந்த நடவடிக்கைகள் எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.

எனவே சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியை இடமாற்றும் செயலை உடனடியாக தடுத்து நிறுத்தி பீடத்தில் உள்ள தகுதியற்ற கல்விசார் ஊழியர்களை நீக்கவேண்டும்.அவ்வாறு நடைபெறாவிட்டால் தொடர்ச்சியான பகிஸ்கரிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளதுடன் உண்ணாவிரத போராட்டங்களையும் மேற்கொள்வோம் என தெரிவித்தனர். 












READ MORE | comments

மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக செயலாளரைத் தாக்க முற்பட்ட பௌத்த மதகுருவிற்கு கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஜனா கண்டனம்

மக்களை அறவழிப்போதனை செய்து அகிம்சை வழிப்படுத்த வேண்டிய பௌத்த பிக்கு செய்யும் அடாவடித்தனத்துக்கு எதிராக மக்கள் களர்ந்தெழுந்தால் அவரால் தாங்க முடியாது போகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) என தெரிவித்துள்ளார்.

பட்டிப்பளை பிரதேச செயலகத்தினுள் பிரதேச செயலாளரைத் தாக்க முனைந்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் மாலை வெளியிட்டுள்ள அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


புதன்கிழமையான மக்கள் சந்திப்பு நாளில் பிரதேச செயலாளரது அலுவலகத்தினுள் சென்ற மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியான அம்பிட்டியே சுமணரத்ன தேரர் பிரதேச செயலாளரான பெண் நிருவாக சேவை அதிகாரியை தகாத வார்த்தைகளால் பேசியது மட்டுமல்லாமல் அரச சொத்துக்களையும் சேதப்படுத்தியிருக்கிறார்.

குறித்த பௌத்த பிக்குவின் அடாவடித்தனமானது இதுமுதல் தடவையல்ல, இன்னும் பல இடங்களில் இவ்வாறு இவர் நடந்து கொண்டிருக்கிறார். இப்போது இவர் அரச அலுவலகத்திளுள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இவர் இவ்வாறு நடந்து கொள்வதற்கு அரசாங்கமும் பாதுகாப்புத் தரப்பினரும் உடந்தையாக இருக்கிறாள்களா என்ற கேள்வி எழுகிறது. இதன் பின்னணி என்ன என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

சாந்தமான தன்மையுடைய கௌதம புத்தரின் போதனைகளை போதிப்பதனை விடுத்து தெருவழிச் சண்டியர்போல் செயற்படுகிறார். ஆனால், மக்களை நல்வழிப்படுத்தி அறவழிப்போதனை செய்து அகிம்சை வழிப்படுத்த வேண்டிய இந்த பௌத்த பிக்கு செய்யும் அடாவடித்தனத்துக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அவரால் தாங்க முடியாது போகும்.

மிகவும் சாந்தமான சுபாவம் கொண்ட பெண் பிரதேச செயலாளரான பட்டிப்பளை பிரதேச செயலாளர் தன்னைத் தாக்க முற்பட்டதாக பௌத்த பிக்கு கூறியிருப்பதானது அபாண்டமானதொரு குற்றச்சாட்டாகும்.

ஒரு அரச அதிகாரி தன்னுடைய கடமையைச் செய்வதற்கு இடைஞ்சலாக இருந்தது மட்டுமல்லாமல் வீண்பழியையும் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியான அம்பிட்டியே சுமணரத்ன தேரர் சுமந்தியமையானது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
READ MORE | comments

கிழக்கு கடலில் புயல் - 30 மீனவர்களை காணவில்லை!

கிழக்கு கடற்பரப்பின் திருகோணமலையில் இருந்து 300 கடல் மைல் தொலைவில் ஏற்பட்ட புயலில் சிக்கி 10 ஆழ்கடல் மீன்பிடி படகுகளுடன் 30 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. நேற்று ஏற்பட்ட இந்த புயலில் சிக்கிய 10 மீனவர்கள் வேறு படகுகளினால் காப்பற்றப்பட்டுள்ளனர். எனினும் காணாமல் போன மீனவர்களுக்கும் கரையில் இருக்கும் தொடர்பு நிலையத்திற்குமான ரேடியோ தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் 30 மீனவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரை தெரியவரவில்லை என மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
READ MORE | comments

விஜயதாரணி மற்றும் ஜெயலலிதாவை நேரலை நிகழ்ச்சியில் கொச்சை வார்த்தைகளால் திட்டிய தமிழ் உணர்வாளர் - வீடியோ

முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து சத்யம் தொலைகாட்சியில் நடந்த ஒரு விவாத மேடையில் காங்கிரஸ் எம்.எல்.எ. விஜயதாரணி மற்றும்  அதிமுக கட்சியினர் கலந்துகொண்டனர் , நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பில் இருந்த போது தமிழினம் மீது பற்று கொண்ட ஒருவர் போன் செய்து முதலைமச்சர் ஜெயலலிதா மற்றும் காங்கிரஸ் எம்எல்எ விஜயதரணியை  சகட்டு மேனிக்கு கொச்சை வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜயதாரணி சத்தியம் டிவி மீது நேரலை ஒளிபரப்பில் சீரிப்பய்ந்துள்ளார். மேலும் இது குறித்து அந்த மர்ம வாலிபர் மீது சென்னை வேப்பேரியிலுள்ள கமிஷனர் அலுவலகத்தில் சென்று புகார் மனு அளித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக பிரமுகர்களும் வெறுமனே அதனை கேட்டு கொண்டு இருக்கமுடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. அவர் பேசிய வார்த்தைகள் உங்களுக்காக கீழே காணொளியில்.

READ MORE | comments

விகிதாசார முறையினால் நேபாளத்தில் பிரதமர் இல்லை

Thursday, November 28, 2013

ஐந்து மாதங்களுக்கு மேலாக நேபாளத்தில் பிரதமர் இல்லை. பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆறு தடவைகள் வாக்கெடுப்பு நடத்தியும் ஒருவரைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை.
மக்கள் கிளர்ச்சியின் மூலம் மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பின் அங்கு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தல் 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது. மொத்தம் 601 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றிய மாவோயிஸ்டுகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர்.
இரண்டு வருட காலத்தில் புதிய அரசியலமைப்பைத் தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காகவே இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. பிரதமராகப் பொறுப்பேற்ற மாவோயிஸத் தலைவர் பிரசண்ட ஆளுநருடனான முரண்பாடு காரணமாகப் பதவி விலகியதும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மாதவ் குமார் நேபால் பிரதமராகப் பொறுப்பேற்றார். கடந்த மே மாதத்துடன் இடைக்கால அரசாங்கத்தின் இரண்டு வருட காலம் முடிவுக்கு வந்தது. அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான தொடக்க வேலை கூட ஆரம்பிக்கப்பட வில்லை. இந்த நிலையில் பிரதமர் நேபால் பதவியை இராஜினாமா செய்ய, இடைக்கால அரசாங்கத்தின் பதவிக் காலத்தை மேலும் ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு எல்லாக் கட்சிகளும் சம்மதம் தெரிவித்தன.
இந்த ஒரு வருட காலத்துக்குள் அரசியலமைப்பைத் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும். பிரதமர் ஒருவரைத் தெரிவு செய்த பின்னரே அது சாத்தியமாகும். மே மாதத்திலிருந்து பிரதமரைத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புகள் இடம்பெற்ற போதிலும் ஒருவராவது பிரதமராகுவதற்குத் தேவையான 301 வாக்குகளைப் பெறவில்லை. ஐந்து மாதங்களுக்கு மேலாகப் பிரதமர் இல்லை. ஆளுநரே பிரதமரின் கடமைகளைப் புரிகின்றார்.
இந்த நிலை ஏற்படுவதற்கு என்ன காரணம்?
நேபாளத்தில் நடைமுறையில் இருப்பது விகிதாசாரத் தேர்தல் முறை. அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் பார்க்கையில், தொகுதிவாரித் தேர்தல் முறை நடைமுறையில் இருந்திருக்குமேயானால் மாவோயிஸ்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்திருக்கும். விகிதாசாரத் தேர்தல் முறை காரணமாக எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எந்தக் கட்சியும் மற்றைய கட்சிக்காரர் பிரதமராகுவதை விரும்பவில்லை. நேபாளத்தின் அரசியல் நெருக்கடிக்கு விகிதாசாரத் தேர்தல் முறையே காரணம்.
நீடிக்கப்பட்ட ஒரு வருட காலத்தில் அரைவாசிப் பகுதி கழிந்துவிட்டது. இன்னும் பிரதமரைத் தெரிவு செய்யாத நிலையில் குறிப்பிட்ட காலத்துக்குள் அரசியலமைப்பு தயாரிக்கப்படுவது சந்தேகமே. இந்த நெருக்கடிக்கு உரிய காலத்துக்குள் தீர்வு காணப்படாவிட்டால் மீண்டும் முடியாட்சிக்குப் போகும் நிலை ஏற்படுமா என்ற கேள்வி எழுகின்றது.
READ MORE | comments

விடுதியிலி மாணவிகள் மது அருந்தி அட்டகாசம்! vedio



READ MORE | comments

மாவீரர் தினத்தை மறப்பதே தமிழர்களுக்கு நல்லது - குணதாச அமரசேகர

மாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கின் தமிழர்களையும் புலிகளென்றே கருத வேண்டிவரும். மாவீரர் தினம் என்றவொன்றினை மறப்பதே தமிழர்களுக்கு நல்லதென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் முட்டாள்தனமாக செயற்படக்கூடாது. தீவிரவாதத்தினை மீண்டும் உருவாக்காத வகையில் செயற்படுவதே நாட்டிற்கு நல்லதெனவும் அவ் இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கருத்துத் தெரிவிக்கையில், தீவிரவாதிகளுக்கென ஓர் தினத்தினை இலங்கையில் அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முப்பது வருடகால யுத்தத்தினை நிறைவிற்குக் கொண்டுவந்த எமது இராணுவத்தினரை கொச்சைப்படுத்தவே கூடாது. நாட்டிற்கு நன்மை செய்தவர்களுக்கு தினம் அனுஷ்டிப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் பிரபாகரன் மற்றும் ஏனைய புறத் தீவிரவாதிகளுக்கு ஒரு தினத்தினை அனுஷ்டிப்பதனால் இலங்கையில் இன்றும் விடுதலைப் புலிகள் வாழ்கின்றனர் என்பதையே வெளிப்படுத்துகின்றது.
வடக்கில் உள்ள தமிழர்கள் விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத்தினை அனுஷ்டித்தால் வடக்கு தமிழர்களையும் புலிகளென்றே கருதவேண்டும். தீவிரவாதிகளுக்கு ஆதரவான நினைவஞ்சலிகளை தீவிரவாதிகள் மட்டுமே அனுஷ்டிப்பர். நாட்டை நேசிக்கும் எவரும் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள். இந்த நாட்டில் தமிழர்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வேண்டுமாயின் மாவீரர் தினத்தினை மறந்துவிட வேண்டும். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தவறினை விடக்கூடாது. சர்வதேசத்தின் பேச்சிற்கு பயந்தோ அல்லது சலுகைகளுக்கு அஞ்சியோ இந்த நாட்டினை இழந்துவிடக்கூடாது. இந்த நாட்டில் சிங்கள இனத்தவரே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அவர்களின் நிலையினை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும்.
வட மாகாண சபைத் தேர்தலினை நடத்தியமையே அரசாங்கம் செய்த பெரிய தவறு. பிரிவினையினை ஏற்படுத்துவதற்கான அடித்தளத்தினை வடக்குத் தேர்தலின் மூலம் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புலம்பெயர் தமிழர்களுடனும் சர்வதேச சக்திகளுடனும் ஒன்றிணைந்து அரசாங்கத்தினை கவிழ்க்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றனர். இதற்கு இன்று ஐக்கிய தேசியக் கட்சியும் சில அமைப்புக்களும் துணை போகின்றன. இதனை ஜனாதிபதி புரிந்து கொள்ளவேண்டும்.
விடுதலைப் புலிகளின் தீவிரவாத யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்ததோடு நாட்டின் பாதுகாப்பினைக் குறைத்தால் மீண்டுமொரு யுத்தம் எவ்விதத்திலாவது ஆரம்பிக்கும். இதற்கான சந்தர்ப்பத்தினை அரசாங்கம் ஏற்படுத்திவிட்டுவிடக் கூடாதெனவும் அவர் தெரிவித்தார்.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |