கிழக்கு கடற்பரப்பின் திருகோணமலையில் இருந்து 300 கடல் மைல் தொலைவில் ஏற்பட்ட புயலில் சிக்கி 10 ஆழ்கடல் மீன்பிடி படகுகளுடன் 30 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது. நேற்று ஏற்பட்ட இந்த புயலில் சிக்கிய 10 மீனவர்கள் வேறு படகுகளினால் காப்பற்றப்பட்டுள்ளனர். எனினும் காணாமல் போன மீனவர்களுக்கும் கரையில் இருக்கும் தொடர்பு நிலையத்திற்குமான ரேடியோ தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் 30 மீனவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது இதுவரை தெரியவரவில்லை என மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments