முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து சத்யம் தொலைகாட்சியில் நடந்த ஒரு விவாத மேடையில் காங்கிரஸ் எம்.எல்.எ. விஜயதாரணி மற்றும் அதிமுக கட்சியினர் கலந்துகொண்டனர் , நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பில் இருந்த போது தமிழினம் மீது பற்று கொண்ட ஒருவர் போன் செய்து முதலைமச்சர் ஜெயலலிதா மற்றும் காங்கிரஸ் எம்எல்எ விஜயதரணியை சகட்டு மேனிக்கு கொச்சை வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த விஜயதாரணி சத்தியம் டிவி மீது நேரலை ஒளிபரப்பில் சீரிப்பய்ந்துள்ளார். மேலும் இது குறித்து அந்த மர்ம வாலிபர் மீது சென்னை வேப்பேரியிலுள்ள கமிஷனர் அலுவலகத்தில் சென்று புகார் மனு அளித்துள்ளார். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக பிரமுகர்களும் வெறுமனே அதனை கேட்டு கொண்டு இருக்கமுடிந்ததே தவிர வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை. அவர் பேசிய வார்த்தைகள் உங்களுக்காக கீழே காணொளியில்.
0 Comments