விவசாய அமைச்சின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 பழக்கிராமங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான ஆரம்ப வைபவம் சங்கர்புரத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களப் பணிப்பாளர் பி.உகநாதன் தலைமை யில் நடைபெற்ற இவ்வைபவ த்தில் 1000 தோடங்கன்றுகள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ் வெல்லாவெளி, கிரான், வாகரை, செங்கலடி, வவுணதீவு உட்பட பல பிரதேச செயலகப் பிரிவுகளி லும் 100 பழக்கிராமங்கள் அமைக்கப்படவு ள்ளன.
தோடை, மாதுளை, நாரத்தை, மா, கொய்யா உட்பட பழ மரங்கள் செய்கை பண்ணப்படவுள்ளன. குறித்த மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டு மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் பழங்களை அறுவடை செய்ய முடியுமென பணிப்பாளர் தெரிவித்தார்.
0 Comments