Home » » கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் பாதிக் கப்பட்டிருக்கமாட்டார்கள்.

கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் பாதிக் கப்பட்டிருக்கமாட்டார்கள்.

ரவூப் ஹக்கீம் அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்திருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க மாட்டார்கள். முஸ்லிம் தலைமைத்துவம் இனிமே லாவது சரியான பாதையினை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்தார்.
மாகாண சபைக்கான அதிகாரங்களை முத லமைச்சருக்கே வழங்கப்பட வேண்டும். வடக்கில் இராணுவ குடும்பங்களை குடியேற்றி சிறுபான்மையினரை அழிக்கவே ஜனாதிபதி திட்டம் தீட்டுகின்றார் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அன்று அமைச்சர் ரவூப் ஹக்கீமை அழைத்தும் ஹக்கீம் முட்டாள்தனமானதொரு செயலை செய்துவிட்டார். அன்று கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்திருந்தால் இன்று முஸ்லிம் மக்கள் பாதிக் கப்பட்டிருக்கமாட்டார்கள்.
அரசாங்கத்தை நம்பி உரிமைகளை இழந்திருக்கவும் மாட்டார்கள். நாட்டில் இன்று சிறுபான்மை மக்கள் அடக்கப்பட்டு வாழ்கின்றனர்.
இதற்கு சிறுபான்மைத் தலைமைத்துவமும் முக்கிய காரணமாகும். தனித் தனியாக அரசாங்கத்திற்கு எதிராகப் போராடாது தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட்டிருந்தால் அரசாங்கத்தினை மாற்றியமைத்திருக்க முடியும்.
சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பெற்றெடுக்க வேண்டுமெனில் தமிழ் முஸ் லிம் இனங்கள் ஒன்றிணைய வேண்டும். இரு இனத் தலைவர்களும் ஒற்றுமையுடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்பட வேண் டும்.
குறிப்பாக முஸ்லிம் மக்களின் நன்மை களுக்காக முஸ்லிம் தலைவர்கள் இனியா வது சரியானதொரு பாதையினை தெரிவு செய்ய வேண்டும்.
மாகாணசபையின் அனைத்து அதிகாரங்களையும் முதலமைச்சரிடமே ஒப்படைக்க வேண்டும். இதில் ஆளுநர் எவ்விதத்திலும் தலையிடக் கூடாது. மாகாணசபை என்றால் என்னவென்பதை முதலில் அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
அதை விடுத்து மாகாண சபையிலும் இராணுவத்தினரின் தலையீடுகளை உள் நுழைத்து நாட்டை இராணுவ மயப்படு த்தக்கூடாது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட அரச குடும்பத்தினர் நாட்டை இராணுவ மயப்படுத்தி இராணுவ ஆட்சியினை நடத்தவே முயற்சிக்கின்றனர்.
அரசியல் வாதிகளால் செய்ய முடி யாததனை இராணுவத்தின் மூலம் செய்யவே அரசாங்கம் செயற்படுகின்றது.
அதேபோல் வடக்கு, கிழக்கில் இராணு வத்தினரையும், இராணுவ குடும்பத்தின ரையும், சிங்களவர்களையும் குடியேற்றி வடக்கு, கிழக்கை சிங்கள பிரதேசமாக மாற்றி நாட்டில் உள்ள சிறுபான்மை மக்களை அழிக்கவே இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
எனவே, எமது இனத்திற்காகவும்,உரிமை களுக்காகவும் நாம் போராட வேண்டும். சிறுபான்மை மக்களால் தெரிவு செய் யப்பட்ட தலைவர்களும் மக்களுக்காக போராடவேண்டும் எனவும் அவர் தெரி வித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |