Advertisement

Responsive Advertisement

தற்கொலை தாக்குதலிலிருந்து தப்பியது எவ்வாறு?; மன்றில் பொன்சேகா விளக்கம்

இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற போது நான்  சுமார் 5 நிமிடங்கள் வரை வாகனத்துக்குள்ளேயே கதவை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அங்கிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் என்னை அம்புயுலன்ஸ் வண்டியொன்றில் ஏற்றில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார்’ என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்துக்குள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சாட்சியமளித்த போது குண்டு வெடித்த பின்னர் தான் 5 நிமிடங்கள் வரை வாகனத்தின் கதவை பிடித்துக்கொண்டிருந்ததாகவும் பின்னர் ஒரு இராணுவ அதிகாரி தன்னை அம்புலன்ஸில் ஏற்றி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் கூறினார்.
இராணுவ தலைமையகத்திலிருந்து பாதுகாப்பு தொடரணியுடன் புறப்பட்டு வந்தபோது வாசலி;ல் நின்ற கூட்டத்தினிடையே நீல நிற சல்வார் அணிந்த ஒரு பெண்ணை கண்டதாக சரத் பொன்சேகா கூறினார்.
இவரது கார் இந்த பெண்னை 2 மீற்றர் அளவில் நெருங்கியபோது அந்த பெண் நின்ற பக்கத்தில் தீச்சுவாலை எழும்பியதாகவும் சாரதி முன்னே சரிந்து கிடந்ததாகவும் தனதருகில் இருந்த இரண்டு காவலர்களும் நிலத்தில் கிடப்பதை கண்டதாகவும் அவர் கூறினார்.
தான் 5 நிமிடங்களுக்கு மேலாக கதவைப்பிடித்துக் கொண்டு உதவியை எதிர்பார்த்து இருந்ததாக கூறினார்.
எதிராளிகளான கிருபாகரன், சூரியகுமார், பிரகாஷ் ஆகியோரின் சார்பில் என்.ஸ்ரீகாந்தன், எஸ்.பஞ்சாட்சரன், ஏ.பிரியந்தன் ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகினர். வழக்கு மார்ச் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments