சுகாதார தொழிற்சங்கங்கள் நாளையும் வேலை நிறுத்தம்

Wednesday, January 31, 2024

 


வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார ஊழியர்கள் சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

35,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் கடமை இடைநிறுத்தம், வருகை மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகள் அல்லது DAT கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று பிற்பகல் தொழிற்சங்கங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதார ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதில் அரசாங்கமோ அல்லது நிதியமைச்சோ சாதகமான தலையீடு இல்லாததால், நாளையதினம்(01) 72 சுகாதார சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

READ MORE | comments

SLT பங்குகளை கொள்வனவு செய்வதற்கு 02 நிறுவனங்கள் தகுதி

 


ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை கொள்வனவு செய்வதற்கு இரண்டு நிறுவனங்கள் முன் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு அறிவித்துள்ளது.

சீனாவின் கோட்யூன் இன்டர்நேஷனல் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் (Gortune International Investment Holdings) மற்றும் பிரபல இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் ஜியோ பிளட்ஃபோர்ம் (Jio Platforms) நிறுவனங்களே இவ்வாறு முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான 50.23 சதவீதமான பங்குகளை விற்பனை செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

READ MORE | comments

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை

 


ஜெர்மனியில் வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்ற புதிய நடைமுறை நாளை(01) முதல் அமலுக்கு வர உள்ளது.

உலகம் முழுவதிலும் வாரத்தின் 5 நாட்கள் வேலை நாள், சனி, ஞாயிறு விடுமுறை அல்லது 6 நாட்கள் வேலை நாள் ஞாயிறு விடுமுறை என பல்வேறு வகையான வேலை, விடுமுறை நாள் அமைப்பு அமுலில் இருந்து வருகிறது. இந்நிலையில் சமீப காலமாக சில நாடுகள் வேலை நாட்களுக்கு இணையான விடுமுறை நாட்கள் அளிப்பது குறித்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முன்னதாக ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதனால் பணியாளர்கள் மகிழ்ச்சி அதிகரித்துள்ளதாகவும், உற்பத்தி திறனும் கூடியுள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.
இந்நிலையில் இந்த வேலைத்திட்ட முறையை ஜெர்மனியும் சோதித்து பார்க்க உள்ளது.

READ MORE | comments

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு குறைந்தபட்ச வேக வரம்பு உள்ளிட்ட புதிய விதிமுறைகள்

Tuesday, January 30, 2024


 அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு குறைந்தபட்ச வேகம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை விரைவில் அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இன்று தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய விதிகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டு அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் வர்த்தமானி வெளியிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

READ MORE | comments

அமைச்சுகளுக்கு வாகன இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி


 துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எவ்வாறாயினும், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சகங்கள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக நிதி அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்த கோரிக்கைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

READ MORE | comments

மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

 


மேற்காசியாவில், இந்திய கடல் பகுதியில் பல தீவுகளை உள்ளடக்கிய மாடுதான் மாலைத்தீவு.

மாலைத்தீவுக்கு முக்கிய வருவாய், இயற்கை அழகு நிறைந்த அதன் தீவுகளை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து கிடைத்து வந்தது. சினிமா, கிரிக்கெட், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இந்தியர்கள் சுற்றுலாவிற்கு மாலைத்தீவிற்கு செல்வது வழக்கம்.

மாலைத்தீவில் 2023 செப்டம்பர் மாதம் 88 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அந்நாட்டின் தலைநகர் மாலே நகர மேயர் மொகமது முய்சு தேர்தலில் வென்று ஜனாதிபதியானார்.

ஜனாதிபதி முய்சு சீன-ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்த முய்சுவின் சீன ஆதரவு நிலையினால், இந்திய பிரபலங்கள் அங்கு சுற்றுலா செல்வதற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டனர்.

நேற்று, முய்சு அமைச்சரவையில் மேலும் 4 உறுப்பினர்களை சேர்க்க ஒப்புதல் பெற அந்நாட்டின் பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தில் மோதல்கள் வெடித்து கைகலப்பும் ஏற்பட்டது.

இந்த மோதலில் ஒரு உறுப்பினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அங்கு அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

இதை தொடர்ந்து, முய்சுவிற்கு எதிராக அந்நாட்டு எதிர்கட்சிகள் “இம்பீச்மென்ட்” கொண்டு வந்து, பதவி நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றனர். இதற்கு தேவையான கையொப்பங்களை உறுப்பினர்களிடம் பிரதான எதிர்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சி சேகரித்து விட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை முய்சு சமாளிப்பாரா அல்லது தானாக பதவி விலகுவாரா என்பது வரும் தினங்களில் தெரிந்து விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

READ MORE | comments

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்ற உத்தரவு

 


கொழும்பில் இன்று (30) நடைபெறவிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜிபர் ரஹ்மான், மத்திய கொழும்பு அமைப்பாளர் அப்சரா அமரசிங்க, கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்குறிப்பிட்ட பிரதிவாதிகள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லிம் மயானத்திற்கு அருகில் பிரதீபா மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை மற்றும் ஜும்மா சந்தி வழியாக சங்கராஜ சுற்றுவட்டத்தின் ஊடாக பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

READ MORE | comments

காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

Monday, January 29, 2024

 


பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் காலணி வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த வவுச்சரின் செலுப்படியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த வவுச்சரின் செலுப்படியாகும் காலம் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியுடன் காலாவதியாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

‘லொரென்சோ புதா 4’ பற்றி சோமாலிய கடற்படையுடன் கலந்துரையாடல்

 


சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த ‘லொரென்சோ புதா 4’ கப்பலின் மீனவர்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்காக சோமாலிய கடற்படையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கென்யாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வி.கண்ணநாதன், எத்தியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து, சோமாலியாவின் கடற்படைத் தலைவர் அட்மிரல் அப்திவர்சாமி ஒஸ்மானுடன் நெருக்கமாகச் செயற்படுவதாகத் தெரிவித்தார்.

இதனிடையே, சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட பல நாள் மீன்பிடி கப்பல் குறித்து விசாரணை நடத்துமாறு பஹ்ரைனில் உள்ள கூட்டு கடல் படைக்கு இலங்கை கடற்படை அறிவித்துள்ளது. 39 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பஹ்ரைனின் கூட்டு கடல்சார் படை, கடற்படைக் கப்பல்களின் பாதுகாப்பைக் கையாளும் ஒரு அமைப்பாகும்.

கடந்த 12ஆம் திகதி திக்ஓவிட்ட துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட ‘லொரென்சோ புதா 4’ என்ற கப்பலை, ஷேல்ஸ் மாகாணத்திற்கு அருகில் உள்ள சர்வதேச கடற்பரப்பில் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் இருந்த இலங்கை மீனவர்களின் எண்ணிக்கை 06 ஆகும்.

READ MORE | comments

கப்பல்களால் நிரம்பி வழியும் கொழும்பு துறைமுகம்


 செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் துறைமுகத்திற்கு கப்பல்களின் வருகை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

துறைமுகத்தின் கொள்கலன் நடவடிக்கைகளும் 72 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஜயபஹலு முனையத்தின் விசேட கண்காணிப்பு விஜயத்தில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், செங்கடல் நெருக்கடி காரணமாக கொழும்பு துறைமுகத்தின் வருமானம் அதிகரித்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைய முடியாது என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

READ MORE | comments

சொத்து விபரங்களை முன்வைக்க வேண்டியவர்கள் குறித்த புதிய பட்டியல் இதோ

 


ஜனாதிபதி, பிரதமர், அரச உத்தியோகத்தர்கள், ஊடகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட நபர்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசியல்வாதிகள் மற்றும் அரச சேவையில் உள்ள ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் (1,50,000) அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகள் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் சொத்துக் கடன் அறிக்கைகளைப் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அண்மையில் இயற்றப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு சட்டத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 31 துறைகளைச் சேர்ந்த நபர்கள் ஒவ்வொரு வருடமும் மார்ச் 31ஆம் திகதிக்கு முன்னர் தமது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.

READ MORE | comments

பாடசாலைகள் ஆரம்பிக்கும் போதே ஆசிரியர் போராட்டங்களும் தொடரும்

Sunday, January 28, 2024

 


அடுத்த பாடசாலை தவணை ஆரம்பமானதும் பெற்றோருடன் இணைந்து பாரிய பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பளத்தை இருபதாயிரம் ரூபாவினால் அதிகரிப்பது, பாடசாலை மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு கல்விச் செலவுகளை தேவையில்லாமல் சுமத்துவது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகின்றார்.

அபிவிருத்திச் சங்கங்களின் ஊடாக தற்போதைய அரசாங்கத்தினால் பாடசாலைகளின் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தும் சுமை பெற்றோர்கள் மீது மறைமுகமாக சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

READ MORE | comments

சோமாலிய கடற்கொள்ளையர்களால் இலங்கையின் மீன்பிடி படகொன்று கடத்தல்

Saturday, January 27, 2024


 சிலாபம் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி 12 ஆம் திகதி இலங்கையிலிருந்து 6 மீனவர்களுடன் புறப்பட்ட மீன்பிடி இழுவைப்படகு, அரேபிய கடல் பகுதியில் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டுள்ளதாக இலங்கை மீன்பிடி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் இருந்து சுமார் 1160 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடத்தப்பட்ட மீனவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

READ MORE | comments

இலங்கைக் கிரிக்கெட் மீதான தடை அடுத்த சில நாட்களில் நீக்கம்?

 


இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் அடுத்த சில நாட்களில் நீக்கப்படும் என்று இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை தெரிவித்தார்.

வத்தளையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போது விளையாட்டுத்துறை அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

READ MORE | comments

Friday, January 26, 2024

 


PickMe போன்ற உள்ளூர் மென்பொருள் நிறுவனங்களுக்கும் Uber போன்ற வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஒரே வரியை விதிக்குமாறு நிதிக் குழுவும் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.

கடந்த 23ம் திகதி இடம்பெற்ற கோப் குழு கலந்துரையாடலிலேயே இந்த வாதம் எழுப்பப்பட்டது.

“.. இன்று நான் Uber இல் ஆர்டர் செய்தால் வரி இல்லை, ஆனால் PickMe இல் ஆர்டர் செய்தால் 18% வரி அறவிடப்படுகின்றது. இது மாற்றியமைக்க வேண்டும். இல்லை என்றால் அதற்கு இந்தத் துறையின் போட்டித் திறன் இல்லாமல் போய்விடும். உள்ளூர் மென்பொருள் நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன.

இதை ஜனவரி 1ம் திகதிக்குள் செய்திருக்க வேண்டும். ஆனால், இப்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனைச் செய்வதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

அப்படியென்றால் உள்ளூர் மென்பொருள் நிறுவனங்களுக்கு ஷாட் கொடுக்கப் போகிறதா? எப்படி? உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனைச் செய்ய வேண்டும்..”

READ MORE | comments

கிளிநொச்சியில் கோர விபத்து – ஒருவர் பலி, ஐவர் கவலைக்கிடம்

Wednesday, January 24, 2024

 


கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன், கொழும்பியிருந்து யாழ்ப்பாணம் நோக்கி எதிரே பயணித்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து, வீதியில் பயணித்த மாடுகளுடன் மோதிய பின் வேனுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வவுனியாவை சேர்ந்த 50 வயதுடைய திருமணி திருச்செல்வம் எனும் பெண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களில் ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, குறித்த விபத்தில் 8 மாடுகளும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

அரசிடமிருந்து பகுதி நேர வேலைவாய்ப்பு

 


இந்த வருடத்தில் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்த பகுதி நேர வேலைவாய்ப்பு திட்டமொன்றிற்கு அரசாங்கம் ஐந்து மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, முச்சக்கரவண்டித் தொழிலாளர்கள் குழுவொன்று இதன் மூலம் பயனடைவதுடன், முதற்கட்டமாக, முன்னோடித் திட்டமாக ஹம்பாந்தோட்டையை இலக்காகக் கொண்டு எழுபது முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

இதனூடாக சாரதிகளின் திறமைகளை மேம்படுத்துவதற்கும் மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்துவதற்கும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நீர் குழாய் பராமரிப்பு, மின் பொறியியல், தச்சு, முடி வெட்டுதல் மற்றும் கட்டிட ஓவியம் போன்ற தெரிவு செய்யப்பட்ட தொழில்களில் தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. , மற்றும் அதனூடாக மேலதிக வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு தேவையான உபகரணங்களும் இதன் ஊடாக இடம்பெறவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவ் வேலைத்திட்டம் தொடர்பில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தெரிவிக்கும் நிகழ்ச்சி அண்மையில் மாகம் ருஹுனுபுர நிர்வாக வளாகத்தில் இடம்பெற்றது.


READ MORE | comments

எந்தவொரு தனிநபரின் இராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுங்கள்’

Tuesday, January 23, 2024

 


இலங்கை மின்சார சபையின் சுமார் 5,000 பேர் கொண்ட குழுவொன்று ஒரே நேரத்தில் இராஜினாமா செய்ய இணங்கியுள்ளதாக மின்சார ஊழியர் சங்கங்கள் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் எரிசக்தி அமைச்சர் தனது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவொன்றினை இட்டிருந்தார்.

அதாவதும், எந்தவொரு தனிநபரின் இராஜினாமாவையும் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளுமாறும், இலங்கை மின்சார சபைக்கான அனைத்து நிலுவைத் தொகைகளையும் வசூலிக்குமாறும் இலங்கை மின்சார சபை நிர்வாகத்திற்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் சீர்திருத்தங்கள், செலவுக் குறைப்பு பொறிமுறைகள், உற்பத்தித் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட மின் திட்டங்களை செயல்படுத்துதல், டிஜிட்டல் கட்டண தளம் மற்றும் அவுட்சோர்சிங் கட்டண வசூல் மற்றும் இலங்கை மின்சார சபையின் சேவைகளுக்கு இடையூறு விளைவித்த தனிநபர்களுக்கு எதிராக ஒழுங்கு மற்றும் சட்ட நடவடிக்கைகள் தொடர்பான பணிகளை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு எதிராக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த 66 ஊழியர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பல மின் ஊழியர் சங்கங்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றன.

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள ஊழியர்கள் தொடர்பில் முதலில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

READ MORE | comments

DAT கொடுப்பனவு நிறுத்தம் – வைத்தியர்கள் நாளை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு

 


நாளை (24) முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் DAT கொடுப்பனவை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 35,000 கொடுப்பனவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன கையொப்பமிட்ட அறிவிப்பு இன்று (23) வெளியிடப்பட்டுள்ளது.

அதற்குத் தேவையான ஏற்பாடுகளை திறைசேரி வழங்கவில்லை என குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

READ MORE | comments

இந்த ஆண்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை விநியோகிக்க நடவடிக்கை

Friday, January 19, 2024

 


இலங்கையில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார்.

இதற்காக முக அடையாளம் மற்றும் கைரேகை தரவுகள் சேகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ் வேலைத்திட்டம் இவ்வருடம் பெப்ரவரி மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்த அவர், குருநாகல் மற்றும் கண்டி மாவட்ட அலுவலகங்களில் முதற்கட்டமாக இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடமேல் மற்றும் மத்திய மாகாண அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதால், தேசிய அடையாள அட்டைகளின் ஒரு நாள் சேவைக்காக பொதுமக்கள் கொழும்புக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

குடிமக்களின் தரவுகள், கைரேகைகள் மற்றும் முகத்தை அடையாளம் காணுதல் தொடர்பான தரவுகள் சேகரிப்பு அனைத்து பிராந்திய செயலகங்கள் ஊடாக எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

READ MORE | comments

பரீட்சை வினாத்தாள் கசிவு – விசேட விசாரணைக் குழு ஆராய்வு

 


கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பகுதி வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னதாக வௌியான சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பரீட்சைகள் திணைக்களத்தால் விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தற்போது அம்பாறையை சேர்ந்த ஆசிரியர் ஒருவரும் மொரட்டுவை மகா வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில் கடமையாற்றிய அலுவலக உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

சந்தையில் உச்சம் தொட்ட மஞ்சள் போஞ்சி

Wednesday, January 17, 2024

 


சந்தையில் போஞ்சி விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு திடீரென போஞ்சியின் விலை அதிகரித்துள்ளமையானது மக்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கமைய, சந்தையில் மஞ்சள் நிற போஞ்சி (சின்னு ரேஸ்ரி: தேங்காய்ப் பால் பட்டர் பீன்ஸ்) கிலோ ஒன்றின் விலை 2,000 முதல் 2,500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு போஞ்சியின் விலை உயர்வுக்கு இடைத்தரகர்களே காரணம் என விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இடைத்தரகர்களின் இந்த செயற்பாடு குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

READ MORE | comments

கொழும்பில் வசிக்கும் ஒருவருக்கு ஒரு மாதத்திற்கு ரூ.17,000 போதாது

 


2023 நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய மாதாந்திர வறுமைக் கோடு அட்டவணை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளை ஒரு மாதத்தில் பூர்த்தி செய்யத் தேவைப்படும் செலவு ரூ. 16,302 அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது.

தேசிய அளவில் காட்டப்பட்ட இந்த எண்ணிக்கை ரூ. 16,112 பதிவாகியிருந்தது.

இந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள மாவட்ட பெறுமதிகளின்படி, கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர், ஒரு மாதத்தில் தமது குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. இது ரூ. 17,582 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு குறைந்தபட்ச தேவைகளை பூர்த்தி செய்ய ரூ.15,587 செலவாக வேண்டும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் இந்த குறிப்பில், இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்று குறைந்தபட்ச செலவை ஏற்க வேண்டிய மாவட்டமாக மொனராகலை மாவட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

READ MORE | comments

மட்டு குருக்கள்மடத்தில் 16.01.2023 இடம் பெற்ற விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு பலத்த காயம்.

 மட்டு குருக்கள்மடத்தில் 16.01.2023 இடம் பெற்ற விபத்தில்    சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு பலத்த காயம்.










களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் சற்றுமுன் முச்சக்கரவண்டி ஒன்றும் DSI ரயர் நிறுவனத்தின் லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.


மட்டு கல்முனை பிரதான வீதி வழியே களுவாஞ்சிகுடி பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் மட்டக்களப்பு பகுதியிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த DSI ரயர் கம்பனிக்கு சொந்தமான லொறியும் குருக்கள்மடம் செல்லக்கதிர்காம முருகன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள வளைவில் நேருக்கு நேர் மோதியுள்ளது இவ்  விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன் மேலும் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.  உயிரிழந்த இளைஞன் மண்டூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் காயமடைந்தவர்கள் மண்டூர் மற்றும் எருவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது 


இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

READ MORE | comments

மஹிந்த கொடித்துவக்கு விளக்கமறியலில்

Tuesday, January 16, 2024

 


அவலோகிதேஸ்வரா என்ற பெயரில் தோன்றி பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பிரசங்கம் செய்த வேளையில் கைது செய்யப்பட்ட மஹிந்த கொடித்துவக்கு எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை இன்று (16) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கணனி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் பன்னிப்பிட்டியவில் வைத்து சந்தேகநபர் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்த கொடித்துவக்கு என்ற போதகர், கடந்த 1ஆம் திகதி எகிப்தில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த நிலையில், அவர் பல இடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றுவதும், அவரைப் பின்பற்றுபவர்கள் அவருக்கு வணக்கம் செலுத்துவதும் போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதன்படி, குறித்த நபரின் விரிவுரைகள் மூலம் புத்தரின் குணாதிசயங்கள் மற்றும் பௌத்த மத போதனைகள் அவமதிக்கப்படுவதாக பௌத்த விவகார ஆணையாளர் நாயகம் உட்பட பல தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதன்படி, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த நபரிடம் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், இது தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்து சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத்தடையையும் பெற்றுக்கொண்டனர்.

READ MORE | comments

நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 24ம் திகதி முடிவடைகிறது

 


ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு எதிர்வரும் 24ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றம் திறந்து வைக்கப்படவுள்ளது.

நாடாளுமன்றம் இம்மாதம் 23 மற்றும் 24ஆம் திகதிகளில் கடைசியாக கூடவுள்ளது.

இம்மாதம் 25ஆம் திகதி வியாழன் போயா விடுமுறை என்பதால் அந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும்.

இதன்படி எதிர்வரும் 24ஆம் திகதி நள்ளிரவில் நாடாளுமன்ற அமர்வு முடிவடைவதற்கான வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், கோப், கோபா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட குழுக்கள் இரத்து செய்யப்பட்டு, அதன்படி அந்த குழுக்கள் அனைத்தும் மீண்டும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பதவிக்காலம் முடிவடைவதால் உயர் அதிகாரிகள் குழு, துறைசார் மேற்பார்வைக் குழு மற்றும் சிறப்புக் குழுக்கள் மட்டுமே ஒழிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு 9ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு நிறைவடைந்தது.

READ MORE | comments

குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலனை சபையின் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கு நிவாரணம்

Saturday, January 13, 2024

 


குருக்கள்மடம் கிராமத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டின்கீழ் உள்ள மக்களுக்கு இன்றைய தினம் (13.01.2024) குருக்கள்மடம் ஸ்ரீ முருகன் ஆலய பரிபாலனை சபையினரால் சுமார் 100 குடும்பங்களுக்கு 10 kg அரிசி   வீதம் வழங்கி வைக்கப்பட்டது.












READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |