PickMe போன்ற உள்ளூர் மென்பொருள் நிறுவனங்களுக்கும் Uber போன்ற வெளிநாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கும் ஒரே வரியை விதிக்குமாறு நிதிக் குழுவும் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.
கடந்த 23ம் திகதி இடம்பெற்ற கோப் குழு கலந்துரையாடலிலேயே இந்த வாதம் எழுப்பப்பட்டது.
“.. இன்று நான் Uber இல் ஆர்டர் செய்தால் வரி இல்லை, ஆனால் PickMe இல் ஆர்டர் செய்தால் 18% வரி அறவிடப்படுகின்றது. இது மாற்றியமைக்க வேண்டும். இல்லை என்றால் அதற்கு இந்தத் துறையின் போட்டித் திறன் இல்லாமல் போய்விடும். உள்ளூர் மென்பொருள் நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன.
இதை ஜனவரி 1ம் திகதிக்குள் செய்திருக்க வேண்டும். ஆனால், இப்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனைச் செய்வதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
அப்படியென்றால் உள்ளூர் மென்பொருள் நிறுவனங்களுக்கு ஷாட் கொடுக்கப் போகிறதா? எப்படி? உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இதனைச் செய்ய வேண்டும்..”
0 comments: