Home » » மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

மாலைத்தீவு ஜனாதிபதி முய்சுற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

 


மேற்காசியாவில், இந்திய கடல் பகுதியில் பல தீவுகளை உள்ளடக்கிய மாடுதான் மாலைத்தீவு.

மாலைத்தீவுக்கு முக்கிய வருவாய், இயற்கை அழகு நிறைந்த அதன் தீவுகளை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து கிடைத்து வந்தது. சினிமா, கிரிக்கெட், அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பெரும்பாலான இந்தியர்கள் சுற்றுலாவிற்கு மாலைத்தீவிற்கு செல்வது வழக்கம்.

மாலைத்தீவில் 2023 செப்டம்பர் மாதம் 88 இடங்களுக்கு தேர்தல் நடந்தது. அந்நாட்டின் தலைநகர் மாலே நகர மேயர் மொகமது முய்சு தேர்தலில் வென்று ஜனாதிபதியானார்.

ஜனாதிபதி முய்சு சீன-ஆதரவு நிலைப்பாட்டை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்த முய்சுவின் சீன ஆதரவு நிலையினால், இந்திய பிரபலங்கள் அங்கு சுற்றுலா செல்வதற்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டனர்.

நேற்று, முய்சு அமைச்சரவையில் மேலும் 4 உறுப்பினர்களை சேர்க்க ஒப்புதல் பெற அந்நாட்டின் பாராளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தில் மோதல்கள் வெடித்து கைகலப்பும் ஏற்பட்டது.

இந்த மோதலில் ஒரு உறுப்பினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் அங்கு அமைச்சர்களுக்கு ஒப்புதல் அளிக்க வாக்கெடுப்பு நடைபெறவில்லை.

இதை தொடர்ந்து, முய்சுவிற்கு எதிராக அந்நாட்டு எதிர்கட்சிகள் “இம்பீச்மென்ட்” கொண்டு வந்து, பதவி நீக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றனர். இதற்கு தேவையான கையொப்பங்களை உறுப்பினர்களிடம் பிரதான எதிர்கட்சியான மாலைத்தீவு ஜனநாயக கட்சி சேகரித்து விட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை முய்சு சமாளிப்பாரா அல்லது தானாக பதவி விலகுவாரா என்பது வரும் தினங்களில் தெரிந்து விடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |