தேற்றாத்தீவில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் பண்ணிய அடியார்கள்

Sunday, February 26, 2017

மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று 2017.02.24(வெள்ளிக்கிழமை) சிறப்பாக நடைபெறுகின்றன .
அந்தவகையில் கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில்இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகி 'பால புஸ்கரணி' தீர்த்தக்கங்கையில் தீர்த்தநீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு 06.30 மணியளவில் ஆரம்பமாகியது விசேட பூஜை தொடர்ந்து இவ் தீர்த்த நீர் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.இதன் பொது பல அடியார் கலந்து கொண்டு அபிஷேகம் பண்ணி கொண்டு இருக்கின்றனர்
READ MORE | comments

மீண்டும் முதல்வராகிறார் பன்னீர்செல்வம்? சசிகலா கணவன் நடராஜனின் புதிய வியூகம்!

Saturday, February 25, 2017

மீண்டும் தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தைக் கொண்டுவருவதற்கான புது முயற்சியில் சசிகலாவின் கணவர் நடராஜன் திட்டம் வகுத்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இடம்பெற்ற உட்கட்சி மோதல், பன்னீர்செல்வத்தின் மெரினாப் புரட்சி அதைத் தொடர்ந்து சசிகலா முதலமைச்சராக உரிமைகோரியது, பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதியானது என்று பெரும் பரபரப்பில் இருந்தது தமிழகம்.
முதலமைச்சராக வேண்டும் என்கிற சசிகலாவின் கனவும் நீதிமன்றத் தீர்ப்பினால் சிதைந்தது. ஆனாலும், சசிகலா தன்னுடைய இடத்திற்கு எடப்பாடி பழனிசாமியை முலமைச்சராக்கியதுடன், துணைப்பொதுச் செயலாளராக டிடிவி.தினகரனையும் நியமித்து அதிமுக ஆட்சியை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.
சிறையில் இருந்து இயக்கப்படும் ஆட்சி என்று அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் சசிகலாவின் கணவன் நடராஜன் கட்சி சார்ந்து சில முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டது. சட்டசபையில் நிகழ்ந்த அமளிதுமளி, பொதுவாக்கெடுப்பின் முடிவுகள். எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினின் குடியரசுத் தலைவரின் சந்திப்பு என்பவற்றை உற்று அவதானித்த அவர், சில முக்கிய இராஜதந்திரிகளுடன் விவாதித்திருக்கிறார்.
இப்போது தமிழ் நாட்டில் இருக்கும் அரசியல் சூழ்நிலையில் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கடும்கோபத்தில் இருப்பதை புலனாய்வுத் தரப்பினரின் தகவல்களின் மூலம் அறிந்து கொண்டுள்ளார்.
தவிர, இனிமேல் சசிகலா அரசியலுக்கு வருவது என்பது இப்பொழுது சாத்தியமில்லை. அதிமுகவோ இப்போது, இரண்டாக பிளவுபட்டு, பன்னீர், சசிகலா அணி என்றாகிவிட்டது.
இதற்கிடையில், அதிமுக ஆட்சியை எப்படியேனும் கலைத்துவிடவேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் குறியாக இருக்கின்றன. அதற்காக முழுமூச்சோடு களப்பணியாற்றவும் எதிர்க் கட்சிகள் முயற்சி மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், ஆட்சியதிகாரங்களை கைப்பற்ற முடியவில்லை என்ற ஆதங்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அதிமுக கட்சியை தமது கட்டுபாட்டில் வைத்திருக்கலாம் என்ற முடிவிற்கு நடராஜன் வந்திருக்கிறராம்.
ஏனெனில், ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுமாயின், பன்னீர்செல்வம் தரப்பினர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாக இருக்கின்றன.
மேலும், அதிமுக அரசாங்கத்தில் நடைபெறும் இந்தக் குழப்பத்தினை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் திமுக. அரசாங்கம் அமைவதை விரும்புவதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இப்போதைக்கு மக்கள் ஆதரவுள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை மீண்டும் அதிமுக அணியில் இணைத்து, முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பதுடன், துணை முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கலாம் என்று தெரிவித்திருக்கிறார் நடராஜன்.
இதனை அவர் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கும் தெளிவாக குறிப்பிட்டுள்ளாராம். மக்கள் ஆதரவையும், தொண்டர்கள் ஆதரவையும் அதிமுக கட்சியில் தொடர்ந்து தக்க வைக்க இதுவே சரியான முடிவு என்பதில் நடராஜன் உறுதியாக இருக்கிறார்.
அது குறித்து இப்பொழுது அதிமுக கட்சிக்குள் தீவிர ஆலோசனைகள் நடந்துவருகின்றன.
மேலும் சில திட்டங்களை அதிரடியாக மேற்கொள்வதற்கு நடராஜன் முயற்சிகளை எடுத்து வருகின்றார். எப்படியேனும் பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தியாக வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் திடீரென பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதும், பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சராக வேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பதும் நடராஜன் வகுத்த திட்டங்களில் ஒன்று என்று குறிப்பிடுகிறார்கள் தமிழக அரசியல் ஆய்வாளர்கள்.
எதுவாயினும் மீண்டும் தமிழகத்தில் இந்த வாரமளவில் அரசியல் பரபரப்புக்களுக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள் தமிழக மக்கள்.
READ MORE | comments

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த விமல்ராஜ் கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றம்

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய மட்டக்களப்பு காணி சீர்த்திருத்த திணைக்களத்தின் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேசகுமார் விமல்ராஜ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மட்டக்களப்பு காணி சீர்த்திருத்த திணைக்களத்தின் பணிப்பாளர் விமல்ராஜ் படுகாயமடைந்தார்.
அலுவலகப் பணிகளை முடித்துக் கொண்டு களுவாஞ்சிக் குடியிலுள்ள தனது வீட்டிற்குத் திரும்பும் வழியில் விமல்ராஜ் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த விமல்ராஜ், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் இதுவரை குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 20 பேருரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்புபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, புதன்கிமை ஏழு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே விமல்ராஜ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக விமல்ராஜின் மாமியான ஞானம்மா குழந்தைவேல் குறிப்பிட்டார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்திற்கு முன்னர் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க உறுதியளித்தார்.
கண்டி பிரதேசத்திற்கு நேற்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நேசகுமார் விமல்ராஜுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காணி அமைச்சர் – “நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. அவர் தலைமைக்கு கீழ் உள்ள 400 ஏக்கர் காணியில் பிரதேச மக்கள் 200 பேர்வரை சென்று சட்டவிரோதமாக குடியேற்றத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதனால் ஏற்பட்ட கோபத்தை அடுத்து அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அதிர்ஸ்டவசமாக அவரது கையில் சூடு பட்டுள்ளதால் உயிர்பிழைத்துக்கொண்டார். அவரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றியுள்ளேன். அத்துடன் அவருக்கு பாதுகாப்பையும் அளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.
அவரை சந்திப்பதற்கும் செல்லவுள்ளேன். அந்தக் காலத்தில் நாட்டை அழித்துக்கொண்டிருந்த கீழ்த்தரமானவர்கள் இன்றும் உள்ளனர். இதனை இல்லாதொழித்துவிட வேண்டும்.இந்த சம்பவத்திற்குப் பின்னால் யார் இருக்கின்றனர் என்பதுகுறித்து ஆராய்ந்து வருவதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்போம்” என குறிப்பிட்டார்.
download (2)download (3)download (4)download (5)download (6)

READ MORE | comments

இராணுவத்தின் வசமுள்ள விடுவிக்கப்படாதுள்ள காணிகள் விடுவிக்கப்படும் கிளிநொச்சி இராணுவத்தினர் தெரிவிப்பு

கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் வசமுள்ள விடுவிக்கப்படாதுள்ள காணிகள் விடுவிக்கப்படும் கிளிநொச்சி இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை அடையாளப்படுத்தி, உறுதிப்படுத்தும் பட்சத்தில் உடனடியாகவே விடுவிக்கப்படும் என்றும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை பொதுமக்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தாங்கள் காணிக்குள் செல்லும் வரைக்கும் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிடப்போதில்லை என்றும் பரவிப்பாஞ்சான் பொது மக்கள் தெரிவித்துள்ளார்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சிலர் நேற்று பிற்பகல் மாவட்டச் செயலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அங்கு படையதிகாரிகள், கரைச்சி பிரதேச செயலாளர், மாவட்டச் செயலக அதிகாரிகள் காணி உத்தியோகத்தார்கள் ஆகியோர் அடங்கிய கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன், கரைச்சி காணி உத்தியோகத்தர், கிராம அலுவலர், இராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் சில மக்களுடன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். மக்களின் காணிகள் அடையாளங் காணப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த படையினர், பரவிப்பாஞ்சான் பகுதியில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளில் விடுதலைப் புலிகளின் பாரிய கட்டிடங்களை தவிர ஏனைய காணிகள் மீண்டும் பொது மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கு முன்னர் மக்களின் காணிகளை அதிகாரிகள் ஆவணங்களைக் கொண்டு உறுதிப்படுத்தி, அடையாளப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாரிகள் விரைவாக மக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் போது, படையினரும் விரைவாக குறித்த காணிகளை விடுவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரவிப்பாஞ்சான் இராணுவத்தின் தகவலின்படி கிளிநொச்சி மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளில் கைகளிலேயே பரவிபாஞ்சான் காணி விடுவிப்பு தங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையே, கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்படும் தங்களை தமது காணிகளுக்குள் விரைவில் செல்வதற்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்னர்.
தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தாங்கள், தங்களது காணிகளுக்குச் செல்லும் வரை கவனயீர்ப்பு பேராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

READ MORE | comments

பாரிய தீ… அணைக்கும் முயற்சியில் பொலிஸாரும், பொது மக்களும்…

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – ரத்னிலகல பகுதியில் 24.02.2017 அன்று மதியம் 12 மணியளவில் தீயினால் 8 ஏக்கரிற்கு மேற்பட்ட பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது இப்பிரதேசங்களில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் கடும் காற்று வீசுவதனால் தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தலவாக்கலை பொலிஸாரும், பொது மக்களும் கடும் முயற்சிக்கு மத்தியில் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேகமாக பரவி வரும் தீ காரணமாக அரியவகை மூலிகைகள் விலங்கினங்கள் நீரூற்றுக்கள் போன்றன அழிந்து போயிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ நிலங்களை துப்புரவு செய்வதற்கு அல்லது மிருகங்களை வேட்டையாடுவதற்கு இத்தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
தற்போது பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்ப்போசண வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் மேலும் நீர்த்தட்டுப்பாடு உக்கிர நிலையை அடைய வாய்ப்பிருப்பதாகவும், ஆகவே இத்தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
DSC00868DSC00869DSC00885
READ MORE | comments

மக்கள் போராட்டத்துக்கு வெற்றி: பரவிப்பாஞ்சான் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறி வருகிறது

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற ஆரம்பித்திருக்கும் நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் செல்லத்தொடங்கி உள்ளனர்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. அதன்போது, மக்களின் காணிகளை பிரதேச செயலாளர் அடையாளப்படுத்தியதன் பின்னர் தாம் வெளியேறுவதாக இராணுவத்தினர் உறுதியளித்திருந்தனர்.
அதன்படி, நேற்றைய தினம் மக்கள் தமது காணிகளை பிரதேச செயலாளருக்கு அடையாளம் காட்டியிருந்ததுடன், இன்று ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
அத்துடன் முகாம் அமைந்துள்ள பகுதிகளுக்குள் சென்று காணிகளை சுத்தப்படுத்தவும் மக்களுக்கு இராணுவத்தினர் அனுமதியளித்துள்ளனர்.
எனினும், குறித்த பகுதியைவிட்டு இராணுவம் முழுமையாக வெளியேறும்வரை ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை.Paravipanchchan
READ MORE | comments

தலைக்கவசம் அணிவது குறித்த முக்கிய 10 விடயங்கள் வர்த்தமானியில்…

Friday, February 24, 2017

மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் பயன்படுத்தும் முறை தொடர்பான விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று(23) இரவு வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தலைக்கவசம் பயன்படுத்தும் போது பின்பற்ற ​வேண்டிய 10 விடயங்கள் தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.
அந்த வர்த்தமானி அறிவித்தலை கீழே காணலாம்.
தலைக்கவசம் அணிவது தொடர்பான முக்கிய 10 விடயங்கள் வர்த்தமானியில்
READ MORE | comments

வேலையற்ற பட்டதாரிகள் தொடர் சத்தியாக்கிரக போராட்டம்

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தினை இரவு வேளையும் மேற்கொண்டுவருகின்றனர்.
தமக்கான நியமனங்களை வழங்க மத்திய மாகாண அரசாங்கங்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றுவருகின்றது.
இன்று இரவும் பெருமளவானோர் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு பொது அமைப்புகள் தங்களது ஆதரவினை வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளும் இந்த பட்டதாரிகளின் நிலைமையினை உணர்ந்து ஆதரவு வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
READ MORE | comments

களுதாவளையில் நடைபெற்ற கொலை முயற்சியில் திடுக்கிடும் காரணங்கள்…

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளையில் கொலை முயற்சி அல்லது அச்சுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பு மிக்க பதவியான காணி சீர்திருத்த பணிப்பாளர் போன்ற தமிழர் இனி இப்படி பதவியில் வருவதற்கு அஞ்ச வேண்டும் எனும் தொனியில் துப்பாக்கியால் உயிரை எடுப்பதற்கு முயற்சி நடைபெற்றது.
சில வேளை இவர் உயிரிழந்திருந்தால் இவ்விடத்திற்கு சகோதர இனத்தை சார்ந்தவர் வரக்கூடியநிலை காணப்பட்டது.
மட்டக்களப்பில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் காணி அபகரிப்புகளுக்கு எதிராக துணிந்து செயற்பட்ட மாவட்டக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் தமிழரான நேசகுமார் விமல்ராஜ் அவர்கள் நேற்று சுடப்பட்டுள்ளார்.
குறிப்பாக ஏறாவூர் புண்ணைக்குடா வீதி, தளவாய், சவுக்கடி போன்ற பிதேசங்களில் இடம்பெற்ற அத்துமீறிய குடியேற்றங்கள் , பனைவளங்களின் அழிப்பு, அரசகாணிகளை அபகரித்தல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக துணிந்து விரைவாக நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு அதிகாரி.
பல தடவை ஏறாவூரை சேர்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினரான சுபைர் ஆதரவாளர்களால் அச்சுருத்தப்பட்டார்.
எத்தனையோ அரசியல்வாதிகள் அச்சத்தில் மௌனங்காத்த போதும் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நியாயத்துக்காக கூடவே நின்றவர். தொடர்ந்தும் நிற்பவர்.
நிச்சயமாக இவரைப் போன்ற நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அசம்பாவிதங்கள் இடம்பெறாவண்ணம் குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கப்படவும் வேண்டும்.
யுத்தம் கிழக்கை விட்டு 2008ம் ஆண்டு மௌனித்த பின் இதுவரை முஸ்லிம் நகரங்களின் அருகிலுள்ள தமிழ் கிராம ஆலயங்கள், பண்பாட்டு தலங்கள் தாக்கப்பட்டு அச்சுறுத்தியும், பெண்களை பாலியல் சேட்டைகளை செய்து பாதுகாப்பாற்ற நிலையை உருவாக்கி முஸ்லிம் இன மக்களுக்கு காணியை விற்பனை செய்ய வேண்டும், ஆக்கிரமிக்க இலகுபடுத்த நுணுக்கமாக ஒவ்வொரு காரியமும் நடைபெறுகின்றது.
யுத்தத்தின் பின் கிழக்கில் வாகனேரி பிள்ளையார் ஆலயம் மூன்று தடவை சேதம், ரிதிதென்ன பிள்ளையார் ஆலயம் மீதான தாக்குதல், மீறாவோடை ஆலயம் மீதான தாக்குதல், ஆரையம்பதி நரசிம்மர் ஆலயம் தாக்குதல், காத்தான்குடி ஆரையம்பதி எல்லை சிலை சேதம், கல்முனை நகர் தரவைச்சித்தி பிள்ளையார் ஆலயம், கடற்கரை கண்ணகி ஆலயம் உண்டியல் கதவு உடைப்பு, சம்மாந்துறை அகோரி மாரியம்மன் கோயில் சிலை உடைப்பு, திராய்க்கேணி மீனாட்சியம்மன் ஆலயம் தாக்குதல், காரைதீவு கண்ணகியம்மன் ஆலயம் கதவு உடைப்பு,பெரியநீலாவணை சவுக்காலை கல்லறை உடைப்பு ,திருகோணமலை கல்லடி நீலியம்மன் ஆலயம் எரிப்பு இப்படி தொடர்ந்து தமிழர்களின் பண்பாட்டு தலங்களை குறித்த 9வருடத்தில் சேதமாக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதல்கள் பலவற்றில் சகோதர இனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதும் மனநோயாளிகள் என குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பல உண்டு.
கடந்தமாதம் 31ம்திகதி ஏறாவூரில் துப்பாக்கியுடன் ரவூப் என்பவர் கைதுசெய்யப்பட்டார்.அதற்கு முந்திய கிழமை இன்னொருவரிடம் இருந்து துப்பாக்கி ரவை கைப்பற்றப்பட்டமை போன்ற இவ் கொலை முயற்சியிற்கு ஏதும் தொடர்புள்ளதா என சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.
இனி வரும் காலங்களில் கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் அரசியல்வாதிகளை நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை கருதாமல் வடக்கில் கோப்பா புலவு மக்களை போன்று நமது காணி ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் மாற்று இனத்தவர் அச்சுறுத்தலுக்கு எதிராக போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
READ MORE | comments

நே.விமல்ராஜ் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியை கண்டித்து கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளையில் (22/02/2017) திகதி அன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மட்டக்களப்பு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் படுகாயமடைந்தார்
இந்த படுமோசமான கொலை அச்சுறுத்தல் துப்பாக்கி சூட்டுச்சம்பவத்தை கண்டித்து இன்று (24/02/2017) வெள்ளிக்கிழமை காலை 9,மணிக்கு களுவாஞ்சிகுடி அமரர் இராசமாணிக்கம் சிலை சந்தியில் கண்டன கவனஈர்ப்பு போராட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது 
READ MORE | comments

மீண்டும் காட்டாட்சியை ஏற்படுத்தி முயற்சி -சிறிநேசன் எம்.பி.கண்டனம்

மீண்டும் காட்டாச்சியை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளே நடைபெற்றுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜ் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படட்டதை கண்டித்து களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் சிலை முன்பாக பட்டிருப்புத் தொகுதி தமிழ் சமூகம், எனும் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மண்டூரில் மதிதயன் என்னும் உத்தியோகத்தர் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.அவரை கொலைசெய்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இன்று அதேபோன்று நடாத்தப்பட்ட கொலை முயற்சியில் இருந்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் தப்பியுள்ளார்.ஆனால் கொலையாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சிலர் தங்களது காட்டுச்சட்டம் மூலம் கொலைகளை மேற்கொள்ள நினைக்கின்றனர்.இது தொடர்பில் அரசாங்கம் பூரண விசாரணைசெய்து கொலையாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்தவேண்டிய கட்டாய நிலைப்பாடு உள்ளது.
READ MORE | comments

அரசகாணிகளை சுவீகரிக்கின்ற நடவடிக்கைகள் நடந்தேறிவருகின்றன

அரசகாணிகளை சில அரசியல் வாதிகளின் அனுசரணையோடும், சில அரச அதிகாரிகளின் ஆலோசனையிலும், சுவீகரிக்கின்ற நடவடிக்கைகள் நடந்தேறிவருகின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜ் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படட்டதை கண்டித்து களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் சிலை முன்பாக பட்டிருப்புத் தொகுதி தமிழ் சமூகம், எனும் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு புன்னக்குடா பிரதேசத்தில் காணிப்பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்தக் காணி விடயங்கள் தொடர்பில் எம்மினம் சாராத ஒரு அரசியல்வாதி அக்காணி தங்களுடைய இனம் சார்ந்தவர்களுக்குச் சொந்தமானது என்று நாடாளுமன்றத்திலே உரையாற்றியிருக்கிறார்.
புன்னக்குடா காணிப்பிரச்சினை தொடர்பில் நேசகுமாரன் விமல்ராஜ் நியாயமாகச் செயற்பட்டிருந்தார். அதன்பிறகு அவருக்கு பல பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன.
காணி விடயத்தில் நாம் மிகவும் அவதானமாக இருக்கின்ற இக்காலகட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜ் மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நாம் ஆராயவேண்டியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தங்களது காணிப் பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்கின்ற போது அப்பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தில் எடுப்பது மிகக் குறைவாக இருக்கின்றன.
இவ்விடயங்கள் தொடர்பில் வியாழக்கிழமை  நாடாளுமன்றிலே காணி அமைச்சருக்கு முன் கேள்வி எழுப்பி பேசியுள்ளேன்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அரசகாணிகள் சுவீகரிக்கப்படுகின்ற விடயங்கள், போன்ற விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன்.
எனவே காணிப்பிரச்சினை தொடர்பில்தான் நேசகுமாரன் விமல்ராஜ் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என எமக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
சந்தேக நபர்கள் மீது பொலிஸார் துரித நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். எனவே இந்த கடமையையாவது பொலிஸார் மேற்கொள்வார்களா என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
READ MORE | comments

துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Thursday, February 23, 2017

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால், மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

களுதாவளையில் நேற்று இரவு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் விமல் ராஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தினைக் கண்டித்தே மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் உயரதிகாரிகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் குற்றவாளிகளை உடனே கைது செய், அலுவலர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் ஊடகங்கள் கருத்து கோரிய போது எவரும் கருத்து தெரிவிக்க முன்வராதது குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

நாங்கள் வீதியில் நிற்க படையினர் எங்கள் நிலத்தில் உல்லாசமாக வாழ்வதா?

நாங்கள் வீதியில் நிற்க படையினர் எங்கள் நிலத்தில் உல்லாசமாக வாழ்வதா? நல்லாட்சியின் லட்டசணம் இதுவா? எங்கள் சொந்த நிலத்திலிருந்து படையினர் உடனடியாக வெளியேற வேண்டும். நாங்கள் எங்கள் சொந்த நிலத்தில் நின்மதியாக வாழவேண்டும். என  முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மக்கள் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 24 நாட்களாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களை தங்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றவேண்டும். எனக்கோரி தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்திவருகின்றனர். இதேபோல் புதுக் குடியிருப்பு மக்களும் தொடர்சியான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
பூர்வீகமான இடத்தில் உள்ள வருமானத்தை எடுத்து அவர்கள் ஆழ்கிறார்கள். கையளவு தூரத்தில் வருமானம் வரும் வாழ்வாதாரம் கேப்பாபிலவில் உள்ளது.
எங்கள் மண்ணை விடு வியுங்கள். நந்திக்கடலில் எங்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து ஒன்றரை கிலோ மீற்றர் சுற்றி போகவேண்டியுள்ளது. நந்தி கடலுக்குள் வாழ்வாதாரத்தை முடக்கியிருக்கின்றார்கள்.
எங்களது பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணை விமான்படையினர்  தம்வசம் வைத்துள்ளார்கள். காணிகள் விடுவிக்கப்பட்டால் மாத்திரமே மக்கள் மீள் குடியேற முடியும். எத்தனை பயன்தரு வாழ்வாதாரம் உள்ளது. இதனை நம்பியே நாங்கள் வாழ்ந்து வந்தோம்  அதனை பறித்திருப்பது  எங்களை சாகடிப்பதற்கு சமமானது. எனத்தெரிவித்து முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு பகுதியில் மக்கள் நடத்திவரும் கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 24 நாட்களாக இன்றும்   முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதேவேளை புதுக்குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போரட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
READ MORE | comments

தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பு

சைட்டம் மருத்துவ கல்லூரி உட்பட தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை தொடக்கம் வைத்தியர்கள் இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருவதன் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இந்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவினை தவிர வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினி பகுதி மருத்துவ சோதனைப்பகுதி உட்பட அனைத்து பகுதிகளினதும் செயற்பாடுகள் நடைபெறவில்லை.
முன்னறிவித்தல் ஏதும் வழங்கப்படாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக தூர இடங்களில் இருந்துவந்த நோயார்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.DSC01345
READ MORE | comments

இலங்கையில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை ஈர்த்துள்ள ஜல்லிக்கட்டு

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீள ஓப்படைக்கவேண்டும், காணமற்போனவர்கள குறித்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த20 நாட்களிற்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை தமிழர்கள் முதற்தடவையாக அரசியல் கலப்பற்ற இயக்கமொன்றை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் கட்சி சாராத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்காக நடத்தப்பட்ட பேராட்டத்தினால் அவர்கள் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.
தமிழ்நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களை, தொலைக்காட்சி வழியாக அவர்கள் பார்த்திருக்கவேண்டு;ம், மக்கள் பெருமளவில் பங்குகொண்டதையும்,அரசியல்வாதிகளின் , கட்சிகளின் ஆதரவு இன்றிஅது வென்றதையும் மக்கள் இவர்கள் பார்த்திருக்கவேண்டும் , இலங்கையிலும் அவ்வாறான போராட்டம் வெற்றிபெறும் என அவர்கள் கருதியிருக்கவேண்டும் என கருத்து வெளியிட்டார் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.
தமிழ் மக்களிற்கு முக்கியமான விடயங்களில் தமிழ் கட்சிகளால் தீர்வை பெற்றுத்தர முடியாததால் அவர்கள் ஜல்லிக்கட்டு பாணியை பின்பற்றுகின்றனர் என்றார் வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் தவராஜா.
ஆர்ப்பாட்டக்காரர்களின் சீற்றத்திற்கு பெருமளவிற்கு சிறிசேன விக்கிரமசிங்க அரசாங்கமே ஆளானலும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகள் மீதும் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
ஆனால் அரசியல் கட்சிகளிற்கு ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவு வழங்குவதை தவிரவேறு எந்த வழியும் இல்லை, நாங்கள் அதற்கு மேலும் ஆதரவளிப்போம் என்கிறார் சித்தார்த்தன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை எதிர்க்கும் கட்சிகளும்,அதில் இடம்பெற்றுள்ள பங்காளிக்கட்சிகளும் கூட்டமைப்பை விமர்சிப்பதற்காக இதனை பயன்படுத்துகின்றன.
இந்தப்போராட்டத்தின் முடிவில் அரசாங்கம் களங்கப்படும் என தெரிவிக்கும் சித்தார்த்தன் போராட்டத்தை மேலும் நீடிக்க அனுமதித்தால் மக்கள் களைப்படைந்து அதனை கைவிடுவார்கள் என அரசு கருதக்கூடும் ஆனால் இது அரசாங்கத்தை மேலும் களங்கப்படுத்தும் என்கிறார்.
மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் உண்மையானவை, நீண்டகாலமாக நீடிப்பவை அரசாங்கத்தினால் அதனை புறக்கணிக்க முடியாது, மக்களால் அதனை மறக்கவும் முடியாது என்கிறார் சித்தார்த்தன்.
முல்லைத்தீவில் படையினர் சுமார் 2000 ஏக்கர் நிலத்தை தமது பிடியில் வைத்திருக்கின்றனர் என தெரிவிக்கும் தவராசா யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களின் பின்னர் அவ்வளவு நிலத்தை படையினர் தம்வசம் வைத்திருக்கவேண்டிய தேவையில்லை என குறிப்பிடுகின்றார்.
READ MORE | comments

வடக்கு – கிழக்கில் தீவிரமடையும் மக்கள் போராட்டங்கள்!

மஹிந்தா அரசாங்கத்தின் காலப்பகுதியில் இந்த நாட்டில் தமிழ் தேசிய இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் மக்கள் வீதிக்கு வந்து போராடியிருந்தனர். புலனாய்வாளர்கள், இராணுவத்தினர், பொலிசார் என பலதரப்பட்ட அச்சுறுத்தல்களையும் அவர்கள் கடந்திருந்தனர். மக்கள் போராட்டங்களுக்கு துணையாக தமிழ் தேசியக் கூட்டடைப்பினர், தமிழ் தேசிய மக்கள் முன்னனியினர் ஆகியோரும் வீதியில் இறங்கியிருந்தனர். யுத்தத்தின் போது மஹிந்த அரசாங்கம் மேற்கொண்ட போர்க்குற்ற மீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், அதனைத் தொடர்ந்து மேற்கொண்ட அடக்குமுறை ஆட்சி தொடர்பாகவும் தமிழ் மக்கள் குரல் கொடுக்க தவறவில்லை. அதேநேரம் இந்த மஹிந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்திருந்தனர். இதன் விளைவாகவே 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது யுத்தத்தின் போது இராணுவத் தளபதியாக செயற்பட்ட சரத்பொன்சேகா போட்டியிட்ட போதும் தமிழ் மக்களின் வாக்கு அவருக்கு கிடைத்திருந்தது. இருப்பினும் அப்போதைய அரசியல் நிலமை மற்றும் சூழ்ச்சிகள் காரணமாக சரத்பொன்சேகாவால் வெல்ல முடியவில்லை. அதன் பின் 2015 ஆம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி தேர்தல் வந்த போது தமிழ் பேசும் மக்கள் ஒட்டுமொத்தமாக அணிதிரண்டு மஹிந்தவுக்கு எதிராக தமது இறைமையை பயன்படுத்தி தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவருவதற்கு உழைத்திருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியிருந்தது.
தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், 65 வருட காலத்திற்கு மேலாக இடம்பெற்று வரும் தமிழ் தேசிய இனத்தின் உரிமைப் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா என்ற ஆதங்கத்துடன் இருந்த தமிழ் மக்கள் சர்வதேச சமூகம் தமக்கான ஒரு தீர்வைப் பெற்றுத் தரும் என நம்பியிருந்தனர். இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கு மஹிந்த அரசாங்கத்திற்கு உதவிய சர்வதேச சமூகம் தாம் எதிர்பார்த்த மற்றும் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை மஹிந்தா அரசாங்கம் நிறைவேற்றாமையால் அந்த ஆட்சி மீது அதிருப்தி கொண்டவர்களாக தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி மஹிந்த அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடிகளை ஐ.நா ஊடாக கொடுத்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தி தென்னிலைங்கையின் பிரதான அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து இந்த நல்லாட்சி என கூறும் அரசாங்கத்தை உருவாக்கியிருந்தனர்.
மஹிந்த மீது ஏற்பட்ட அதிருப்தி, சர்வதேசத்தின் மீது கொண்டிருந்த நம்பிக்கை என்பன காரணமாக தமிழ் தேசிய இனம் இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து தமது பிரச்சனை தீர்க்கப்படும் என நம்பியிருந்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கடந்தும் தமிழ் தேசிய இனம் இந்த ஆட்சி மாற்றத்தால் அடைந்த நன்மை என்ன எனும் போது அதனைத் தேடிப்பார்க்க வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் மக்களின் தலைமை என்று கூறக் கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவி, அபிவிருத்திக் குழுக்களின் இணைத்தலைவர் பதவி என பதவிகள் கிடைத்திருக்கின்றது. அந்த பதவிகளைக் கொண்டு தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய முடிந்துள்ளதா என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது. ஏனெனில், கடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று திட்டமிட்ட குடியேற்றங்கள், பௌத்தமயமாக்கள், விகிதாசார குறைப்பு என்பன சூட்சுமாக இடம்பெற்று வருவதுடன், தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் கூட இன்னும் தீர்க்கப்படாத நிலையிலேயே இருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணிவிடுவிப்பு என்பன தற்போதும் கானல் நீராகவே உள்ளது. ஆங்காங்கே சில சில காணிகள் விடுவிக்கப்பட்ட போதும் அவை முழுமையானதாகவோ, மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாகவோ இடம்பெறவில்லை. வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் கூட தமிழ் மக்கள் நலன்சார்ந்ததாக மேற்கொள்ளப்படவில்லை. இதனாலயே இந்த அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை தளர்ந்து போயிருக்கின்றது.
இந்த நேரத்தில் தமக்குள்ள பதவிகளைக்கொண்டு சர்வசே இராஜதந்திர நகர்வுகள் ஊடாகவும், நேரடியாகவும் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கடுமையாக உழைக்க வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக அதன் தலைமை அதை செய்கின்றதா என்ற கேள்வி மக்களிடம் எழுந்திருக்கின்றது. இதுதவிர, இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து மக்கள் அணிதிரட்டல்களை செய்து ஜனநாயக போராட்டங்களையும் முன்னெடுக்கத் தவறி வருகின்றது. இதனால் இந்த அரசாங்கத்தின் மீது மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீதும் அதிருப்தி கொண்ட தமிழ் மக்கள் தாமாகவே வீதிக்கு இறங்க முற்பட்டுள்ளார்கள். தமது உரிமைகளையும், தமது அபிலாசைகளையும் முன்வைத்து தாமாகவே அதனை போராடி பெற வேண்டிய நிலைக்கு மேய்ப்பார் அற்ற மந்தைகள் போல் அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையிலேயே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும், அவர்களது நியாயமான கோரிக்கைகளையும் சர்வதேசத்திற்கும், இந்த அரசாங்கத்திற்கும் வலியுறுத்தும் முகமாகவும், தமிழ் தலைமைகளை காத்திரமாக செயற்பட வைக்கும் முகமாகவும் சிவில் சமூக செயற்பட்டாளர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், கல்வி மான்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என பல ஒன்றிணைந்து முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்களின் இணைத் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருந்தனர். இது ஒரு அரசியல் கட்சியாக அல்லாது பொதுமக்கள் சார்ந்த ஒரு அமைப்பாகவும் ஒரு அழுத்த சக்தியாகவும் தொழிப்பட்டு வருகிறது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த செப்ரெம்பர் 24 ஆம் திகதி யாழ் முற்றவெளியில் எழுக தமிழ் எழுச்சிப் பேரணி இடம்பெற்றது. இதன்போது வடக்கின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த மக்கள் கூட்டங்களால் முற்றவெளி மைதானம் நிறைந்து வழிந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு தமது உரிமைக் குரலை உரக்க கூறியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசத்தின் கிழக்கு மாகாணத்தில் அடுத்த எழுக தமிழ் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ் மக்கள் உரிமை சார்ந்த ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்க தமிழ் தலைமைகள் முன்வராத நிலையில் இந்த அரசாங்கத்தாலும் கடந்த ஆடசியைப் போன்று பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தாமாகவே வீதியில் இறங்கிப் போராட முனைந்தனர். வவுனியாவில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை தாமாகவே முன்வந்து மேற்கொண்டிருந்தனர். அந்த போராட்டம் நான்காவது நாளில் மக்கள் போராட்டமாக இந்தியாவின் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போன்று விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிய போது பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நேரடியாக வந்து வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அந்த போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பின் அந்த வாக்குறுதியின் அடிப்படையில் கடந்த 9 ஆம் திகதி அலரி மாளிகையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் 15 பேர் அரச தரப்பு பிரதிநிதிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டனர். இதன்போது அரச தரப்புடன் இணைந்து அந்த சந்திப்புக்காக சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் காணாமல் போனவர்களின் உறவுகளினால் அந்தக் கலந்துரையாடலில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். இது இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் தமிழ் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள் என்பதை வெளிப்படுத்துகின்றது.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கேப்பாபுலவு- புலக்குடியிருப்பு மக்கள், புதுக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி இராணுவத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மூன்று வாரங்களைக் கடந்தும் இந்த போராட்டம் தொடர்பில் அரசாங்கத்தாலோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பாலோ காத்திரமான எந்தவொரு நடவடிக்கையும் எடுத்தததாக தெரியவில்லை. தற்போது கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் காணி விடுதலை கோரியும், கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவுகள் காணாமல் போனவர்களுக்கு பதில் கோரியும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த போராட்டங்கள் குறித்து அரசாங்கம் உதாசீனம் செய்தால் இந்த மக்கள் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து விரும்பதகாத விளைவுகளை ஏற்படுத்தும். அது இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கும், அதற்கு ஆதரவாக செயற்படும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆரோக்கியமானதாக இருக்காது. ஏனெனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் விரக்தியின் உச்சத்தில் சாகக் கூட துணிந்த நிலையில் உள்ளதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இதனை இந்த அரசாங்கமும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான ஒரு நிலையில் பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும், தமிழ் தலைமைகளே குழப்பவாதிகளாக செயற்பட்ட நிலையிலும் தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் பேரணி மட்டக்களப்பு நாவற்குடாவில் கடந்த 10 ஆம் திகதி நடைபெற்றிருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் அலை அலையாக திரண்டு வந்து தமது அபிலாசைகளையும், அரசியல் கோரிக்கைகளையும் அந்த பேரணியில் முன்வைத்திருந்ததுடன் அதனை கோசமாகவும் எழுப்பியிருந்தனர். வடக்கு – கிழக்கு இணைப்பு, சமஸ்டி அடைப்படையிலான தீர்வு என்பவற்றையும் அந்த பேரணி வலியுறுத்தியிருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிகளும், தற்போது வீதியில் இறங்கி போராடும் மக்கள் போராட்டங்களும் மக்கள் தமது உரிமை விடயத்திலும், அரசியல் அபிலாசை தொடர்பிலும் தெளிவாகவும், உறுதியதகவும் இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது. போரில் தோல்வியடைந்த பின்னரும் தமிழ் மக்கள் தமக்கான அரசியல் உரிமைப் போராட்டத்தில் தோற்றுப் போக தயாராகவில்லை என்பதையும், தமது உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்க தயாராக இருக்கின்றார்கள் என்பதையும் இவை வெளிப்படுத்தியிருக்கின்றன.
தற்போதைய சூழலில் மக்கள் ஜனநாயக ரீதியாக போராடக் கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டமையும் ஒரு காரணம். இந்த நிலையில் மக்கள் தமக்கான கோரிக்கைகளை முன்வைத்து தமக்கான உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்க தயாராகி வருகின்றனர். காணாமல் போனோரின் உறுவுகளின் பேராட்டத்திற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய இடம்பெற்ற சந்திப்புக்கு கூட தோல்வியில் முடிவடைந்துள்ளதால் அவர்கள் கூட மீள தமது போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக தெரிகிறது. ஆக, இந்த அரசாங்கமும் தமிழ் மக்களின் நியாயமான அபிலாசைகள் குறித்து சிந்தித்து செயற்படாத நிலையில் மக்கள் போராட்டங்கள் தீவிரம் பெறுவதை தடுக்க முடியாத நிலையே ஏற்படும். இதனை இந்த நல்லாட்சி அரசாங்கம் புரிந்து கொண்டு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அல்லது அதனை தக்க வைப்பது ஆட்சியாளர்களின் கையிலேயே தங்கியுள்ளது.
READ MORE | comments
Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.
 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |