Home » » மீண்டும் முதல்வராகிறார் பன்னீர்செல்வம்? சசிகலா கணவன் நடராஜனின் புதிய வியூகம்!

மீண்டும் முதல்வராகிறார் பன்னீர்செல்வம்? சசிகலா கணவன் நடராஜனின் புதிய வியூகம்!

மீண்டும் தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வத்தைக் கொண்டுவருவதற்கான புது முயற்சியில் சசிகலாவின் கணவர் நடராஜன் திட்டம் வகுத்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இடம்பெற்ற உட்கட்சி மோதல், பன்னீர்செல்வத்தின் மெரினாப் புரட்சி அதைத் தொடர்ந்து சசிகலா முதலமைச்சராக உரிமைகோரியது, பின்னர் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதியானது என்று பெரும் பரபரப்பில் இருந்தது தமிழகம்.
முதலமைச்சராக வேண்டும் என்கிற சசிகலாவின் கனவும் நீதிமன்றத் தீர்ப்பினால் சிதைந்தது. ஆனாலும், சசிகலா தன்னுடைய இடத்திற்கு எடப்பாடி பழனிசாமியை முலமைச்சராக்கியதுடன், துணைப்பொதுச் செயலாளராக டிடிவி.தினகரனையும் நியமித்து அதிமுக ஆட்சியை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்.
சிறையில் இருந்து இயக்கப்படும் ஆட்சி என்று அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் சசிகலாவின் கணவன் நடராஜன் கட்சி சார்ந்து சில முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
கூவத்தூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்து வைக்கப்பட்டது. சட்டசபையில் நிகழ்ந்த அமளிதுமளி, பொதுவாக்கெடுப்பின் முடிவுகள். எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினின் குடியரசுத் தலைவரின் சந்திப்பு என்பவற்றை உற்று அவதானித்த அவர், சில முக்கிய இராஜதந்திரிகளுடன் விவாதித்திருக்கிறார்.
இப்போது தமிழ் நாட்டில் இருக்கும் அரசியல் சூழ்நிலையில் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கடும்கோபத்தில் இருப்பதை புலனாய்வுத் தரப்பினரின் தகவல்களின் மூலம் அறிந்து கொண்டுள்ளார்.
தவிர, இனிமேல் சசிகலா அரசியலுக்கு வருவது என்பது இப்பொழுது சாத்தியமில்லை. அதிமுகவோ இப்போது, இரண்டாக பிளவுபட்டு, பன்னீர், சசிகலா அணி என்றாகிவிட்டது.
இதற்கிடையில், அதிமுக ஆட்சியை எப்படியேனும் கலைத்துவிடவேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் குறியாக இருக்கின்றன. அதற்காக முழுமூச்சோடு களப்பணியாற்றவும் எதிர்க் கட்சிகள் முயற்சி மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில், ஆட்சியதிகாரங்களை கைப்பற்ற முடியவில்லை என்ற ஆதங்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, அதிமுக கட்சியை தமது கட்டுபாட்டில் வைத்திருக்கலாம் என்ற முடிவிற்கு நடராஜன் வந்திருக்கிறராம்.
ஏனெனில், ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்படுமாயின், பன்னீர்செல்வம் தரப்பினர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாக இருக்கின்றன.
மேலும், அதிமுக அரசாங்கத்தில் நடைபெறும் இந்தக் குழப்பத்தினை பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் திமுக. அரசாங்கம் அமைவதை விரும்புவதாகவும் புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இப்போதைக்கு மக்கள் ஆதரவுள்ள ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை மீண்டும் அதிமுக அணியில் இணைத்து, முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைப்பதுடன், துணை முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கலாம் என்று தெரிவித்திருக்கிறார் நடராஜன்.
இதனை அவர் சிறையில் இருக்கும் சசிகலாவிற்கும் தெளிவாக குறிப்பிட்டுள்ளாராம். மக்கள் ஆதரவையும், தொண்டர்கள் ஆதரவையும் அதிமுக கட்சியில் தொடர்ந்து தக்க வைக்க இதுவே சரியான முடிவு என்பதில் நடராஜன் உறுதியாக இருக்கிறார்.
அது குறித்து இப்பொழுது அதிமுக கட்சிக்குள் தீவிர ஆலோசனைகள் நடந்துவருகின்றன.
மேலும் சில திட்டங்களை அதிரடியாக மேற்கொள்வதற்கு நடராஜன் முயற்சிகளை எடுத்து வருகின்றார். எப்படியேனும் பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தியாக வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் திடீரென பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதும், பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சராக வேண்டும் எனக் குறிப்பிட்டிருப்பதும் நடராஜன் வகுத்த திட்டங்களில் ஒன்று என்று குறிப்பிடுகிறார்கள் தமிழக அரசியல் ஆய்வாளர்கள்.
எதுவாயினும் மீண்டும் தமிழகத்தில் இந்த வாரமளவில் அரசியல் பரபரப்புக்களுக்கு பஞ்சம் இருக்காது என்கிறார்கள் தமிழக மக்கள்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |