சைட்டம் மருத்துவ கல்லூரி உட்பட தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை தொடக்கம் வைத்தியர்கள் இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருவதன் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இந்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவினை தவிர வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினி பகுதி மருத்துவ சோதனைப்பகுதி உட்பட அனைத்து பகுதிகளினதும் செயற்பாடுகள் நடைபெறவில்லை.
முன்னறிவித்தல் ஏதும் வழங்கப்படாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பணி பகிஸ்கரிப்பு காரணமாக தூர இடங்களில் இருந்துவந்த நோயார்கள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பணி பகிஸ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

0 Comments