Home » » இலங்கையில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை ஈர்த்துள்ள ஜல்லிக்கட்டு

இலங்கையில் ஆர்ப்பாட்டம் செய்பவர்களை ஈர்த்துள்ள ஜல்லிக்கட்டு

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீள ஓப்படைக்கவேண்டும், காணமற்போனவர்கள குறித்த விவகாரத்திற்கு தீர்வு காணப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த20 நாட்களிற்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கை தமிழர்கள் முதற்தடவையாக அரசியல் கலப்பற்ற இயக்கமொன்றை முன்னெடுத்துள்ளனர். அவர்கள் கட்சி சாராத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்காக நடத்தப்பட்ட பேராட்டத்தினால் அவர்கள் ஈர்க்கப்பட்டிருக்கலாம்.
தமிழ்நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களை, தொலைக்காட்சி வழியாக அவர்கள் பார்த்திருக்கவேண்டு;ம், மக்கள் பெருமளவில் பங்குகொண்டதையும்,அரசியல்வாதிகளின் , கட்சிகளின் ஆதரவு இன்றிஅது வென்றதையும் மக்கள் இவர்கள் பார்த்திருக்கவேண்டும் , இலங்கையிலும் அவ்வாறான போராட்டம் வெற்றிபெறும் என அவர்கள் கருதியிருக்கவேண்டும் என கருத்து வெளியிட்டார் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்.
தமிழ் மக்களிற்கு முக்கியமான விடயங்களில் தமிழ் கட்சிகளால் தீர்வை பெற்றுத்தர முடியாததால் அவர்கள் ஜல்லிக்கட்டு பாணியை பின்பற்றுகின்றனர் என்றார் வடமாகாணசபையின் எதிர்கட்சி தலைவர் தவராஜா.
ஆர்ப்பாட்டக்காரர்களின் சீற்றத்திற்கு பெருமளவிற்கு சிறிசேன விக்கிரமசிங்க அரசாங்கமே ஆளானலும் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஏனைய கட்சிகள் மீதும் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
ஆனால் அரசியல் கட்சிகளிற்கு ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவு வழங்குவதை தவிரவேறு எந்த வழியும் இல்லை, நாங்கள் அதற்கு மேலும் ஆதரவளிப்போம் என்கிறார் சித்தார்த்தன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பை எதிர்க்கும் கட்சிகளும்,அதில் இடம்பெற்றுள்ள பங்காளிக்கட்சிகளும் கூட்டமைப்பை விமர்சிப்பதற்காக இதனை பயன்படுத்துகின்றன.
இந்தப்போராட்டத்தின் முடிவில் அரசாங்கம் களங்கப்படும் என தெரிவிக்கும் சித்தார்த்தன் போராட்டத்தை மேலும் நீடிக்க அனுமதித்தால் மக்கள் களைப்படைந்து அதனை கைவிடுவார்கள் என அரசு கருதக்கூடும் ஆனால் இது அரசாங்கத்தை மேலும் களங்கப்படுத்தும் என்கிறார்.
மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் உண்மையானவை, நீண்டகாலமாக நீடிப்பவை அரசாங்கத்தினால் அதனை புறக்கணிக்க முடியாது, மக்களால் அதனை மறக்கவும் முடியாது என்கிறார் சித்தார்த்தன்.
முல்லைத்தீவில் படையினர் சுமார் 2000 ஏக்கர் நிலத்தை தமது பிடியில் வைத்திருக்கின்றனர் என தெரிவிக்கும் தவராசா யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்களின் பின்னர் அவ்வளவு நிலத்தை படையினர் தம்வசம் வைத்திருக்கவேண்டிய தேவையில்லை என குறிப்பிடுகின்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |