மீண்டும் காட்டாச்சியை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளே நடைபெற்றுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜ் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படட்டதை கண்டித்து களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் சிலை முன்பாக பட்டிருப்புத் தொகுதி தமிழ் சமூகம், எனும் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மண்டூரில் மதிதயன் என்னும் உத்தியோகத்தர் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.அவரை கொலைசெய்தவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இன்று அதேபோன்று நடாத்தப்பட்ட கொலை முயற்சியில் இருந்து காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் தப்பியுள்ளார்.ஆனால் கொலையாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சிலர் தங்களது காட்டுச்சட்டம் மூலம் கொலைகளை மேற்கொள்ள நினைக்கின்றனர்.இது தொடர்பில் அரசாங்கம் பூரண விசாரணைசெய்து கொலையாளிகளை சட்டத்தின் முன்பாக நிறுத்தவேண்டிய கட்டாய நிலைப்பாடு உள்ளது.
0 Comments