Advertisement

Responsive Advertisement

மக்கள் போராட்டத்துக்கு வெற்றி: பரவிப்பாஞ்சான் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறி வருகிறது

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற ஆரம்பித்திருக்கும் நிலையில், காணிகளை துப்பரவு செய்யும் நோக்கில் முகாம் அமைந்திருந்த பகுதிகளுக்குள் மக்கள் செல்லத்தொடங்கி உள்ளனர்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 9 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று ஐந்தாவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது. அதன்போது, மக்களின் காணிகளை பிரதேச செயலாளர் அடையாளப்படுத்தியதன் பின்னர் தாம் வெளியேறுவதாக இராணுவத்தினர் உறுதியளித்திருந்தனர்.
அதன்படி, நேற்றைய தினம் மக்கள் தமது காணிகளை பிரதேச செயலாளருக்கு அடையாளம் காட்டியிருந்ததுடன், இன்று ஐந்தாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்ந்து வந்தனர்.
அத்துடன் முகாம் அமைந்துள்ள பகுதிகளுக்குள் சென்று காணிகளை சுத்தப்படுத்தவும் மக்களுக்கு இராணுவத்தினர் அனுமதியளித்துள்ளனர்.
எனினும், குறித்த பகுதியைவிட்டு இராணுவம் முழுமையாக வெளியேறும்வரை ஊடகவியலாளர்கள் அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை.Paravipanchchan

Post a Comment

0 Comments