Advertisement

Responsive Advertisement

பாரிய தீ… அணைக்கும் முயற்சியில் பொலிஸாரும், பொது மக்களும்…

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை – ரத்னிலகல பகுதியில் 24.02.2017 அன்று மதியம் 12 மணியளவில் தீயினால் 8 ஏக்கரிற்கு மேற்பட்ட பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது இப்பிரதேசங்களில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் கடும் காற்று வீசுவதனால் தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தலவாக்கலை பொலிஸாரும், பொது மக்களும் கடும் முயற்சிக்கு மத்தியில் தீயை அணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேகமாக பரவி வரும் தீ காரணமாக அரியவகை மூலிகைகள் விலங்கினங்கள் நீரூற்றுக்கள் போன்றன அழிந்து போயிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ நிலங்களை துப்புரவு செய்வதற்கு அல்லது மிருகங்களை வேட்டையாடுவதற்கு இத்தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
தற்போது பல பிரதேசங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் நீர்ப்போசண வனப்பிரதேசங்களுக்கு தீ வைப்பதனால் மேலும் நீர்த்தட்டுப்பாடு உக்கிர நிலையை அடைய வாய்ப்பிருப்பதாகவும், ஆகவே இத்தீ வைப்பவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
DSC00868DSC00869DSC00885

Post a Comment

0 Comments