Advertisement

Responsive Advertisement

இராணுவத்தின் வசமுள்ள விடுவிக்கப்படாதுள்ள காணிகள் விடுவிக்கப்படும் கிளிநொச்சி இராணுவத்தினர் தெரிவிப்பு

கிளிநொச்சி பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் வசமுள்ள விடுவிக்கப்படாதுள்ள காணிகள் விடுவிக்கப்படும் கிளிநொச்சி இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், பரவிப்பாஞ்சான் மக்களின் காணிகளை அடையாளப்படுத்தி, உறுதிப்படுத்தும் பட்சத்தில் உடனடியாகவே விடுவிக்கப்படும் என்றும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக கடந்த திங்கட்கிழமை பொதுமக்கள் ஆரம்பித்த போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தாங்கள் காணிக்குள் செல்லும் வரைக்கும் தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிடப்போதில்லை என்றும் பரவிப்பாஞ்சான் பொது மக்கள் தெரிவித்துள்ளார்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் சிலர் நேற்று பிற்பகல் மாவட்டச் செயலகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், அங்கு படையதிகாரிகள், கரைச்சி பிரதேச செயலாளர், மாவட்டச் செயலக அதிகாரிகள் காணி உத்தியோகத்தார்கள் ஆகியோர் அடங்கிய கூட்டம் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன், கரைச்சி காணி உத்தியோகத்தர், கிராம அலுவலர், இராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் சில மக்களுடன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர். மக்களின் காணிகள் அடையாளங் காணப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த படையினர், பரவிப்பாஞ்சான் பகுதியில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளில் விடுதலைப் புலிகளின் பாரிய கட்டிடங்களை தவிர ஏனைய காணிகள் மீண்டும் பொது மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதற்கு முன்னர் மக்களின் காணிகளை அதிகாரிகள் ஆவணங்களைக் கொண்டு உறுதிப்படுத்தி, அடையாளப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதிகாரிகள் விரைவாக மக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் போது, படையினரும் விரைவாக குறித்த காணிகளை விடுவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரவிப்பாஞ்சான் இராணுவத்தின் தகவலின்படி கிளிநொச்சி மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளில் கைகளிலேயே பரவிபாஞ்சான் காணி விடுவிப்பு தங்கியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையே, கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்படும் தங்களை தமது காணிகளுக்குள் விரைவில் செல்வதற்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்னர்.
தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தாங்கள், தங்களது காணிகளுக்குச் செல்லும் வரை கவனயீர்ப்பு பேராட்டத்தை கைவிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments