லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம்

Tuesday, June 4, 2024

 


அதன்படி இன்று (04) நள்ளிரவு முதல் இந்த புதிய விலை திருத்தம் அமுல்படுத்தப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.150 குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 3,790 ரூபாய்.

5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.60 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,525 ஆக உள்ளது.

2.3 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 28 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 712 ரூபாவாகும்.

READ MORE | comments

 


ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று(03) பிற்பகல் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கண்டி மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ஷவிற்கும் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கும் இடையில் காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம தலையிட்டு சம்பவத்தை சமரசம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், கூட்டம் முடிந்து வௌியேறும் போது மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக்க ராஜபக்ஷவுக்கும் இடையில் மாடிப்படியில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மாடிப்படியில் இருந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் படுகாயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குணதிலக்க ராஜபக்ஷவுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கையில்;

குணதிலக ராஜபக்ஷவுடன் வாக்குவாதம் செய்ததாகவும், எனினும், அவரை தள்ள முயற்சிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை பார்த்த பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் சமரவிக்ரம, அவ்விடத்திற்கு வந்து பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவை அழைத்துச் செல்ல முற்பட்ட போது அவர் தவறி விழுந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

READ MORE | comments

S.மகேந்திரகுமார் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளாராக இன்று பதவியேற்பு

Monday, June 3, 2024

 S.மகேந்திரகுமார் சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளாராக இன்று பதவியேற்புREAD MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் விபத்து ஒருவர் உயிரிழப்பு

Saturday, June 1, 2024

 


மட்டக்களப்பு குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள வளைவில் மோட்டார்  சைக்கில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு ஒருவர் பலத்த காயத்துக்கு உள்ளானார். அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கில் வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளானது. மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |