இலங்கையின் கல்வித் துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கில், 8ஆம் தரம் முதல் 12ஆம் தரம் வரை கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு 3 மொழிகளிலும் “Cambridge Climate Quest” சுயக் கற்கை நெறியை மூன்று மொழிகளிலும் கற்பதற்கான வாய்ப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மேலும், பிராந்திய உயர்கல்வி தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அவுஸ்திரேலியாவின் பிலின்டர்ஸ் பல்கலைக்கழகம் (Flinders University) இலங்கையில் தனது பல்கலைக்கழக வளாகத்தை ஆரம்பித்து பல்வேறு துறைகளில் இளமாணி, முதுமாணி பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்விப் பிரவேசத்திற்கான வாய்ப்புகளை வழங்க உள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments: