இளவரசி டயானாவின் ரகசிய செக்ஸ் டைரி – ராஜ குடும்பம் பற்றி திடுக் தகவல்கள்!

Thursday, October 31, 2013

இங்கிலாந்து இளவரசி டயானாவின் ரகசிய செக்ஸ் டைரியில் எழுதப்பட்டிருந்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவருடைய காதலர்கள் பற்றி அவருடைய தோழி சிமோன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசி டயானா தனது காதலர் தோதி ஃபயீதுடன் பாரீஸில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார்.

இந்நிலையில் டயானாவின் காதலர்கள் குறித்து அவருக்கு நெருக்கமான தோழியாக இருந்த சிமோன் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார். டயானாவின் காதல் வாழ்க்கை பற்றி சிமோன் தெரிவித்துள்ளார்.

தனது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரிக்கு குதிரையேற்ற பயிற்சி அளித்த குதிரையேற்ற வீரர் ஜேம்ஸ் ஹெவிட்டுடன் டயானா உறவு கொண்டுள்ளார் என்று சிமோன் தெரிவித்தார்.

ரக்பி விளையாட்டு வீரர் வில் கார்லிங் மீது டயானாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவர்கள் ஹார்பர் கிளப் ஜிம்மில் தான் முதன்முதலாக சந்தித்தனர். தனக்கு ரக்பி விளையாட தனியாக பயிற்சி அளிக்குமாறு டயானா வில்லிடம் கேட்டு கொண்டதாக சிமோன் கூறினார்.
இஸ்லாமிய கலை நிபுணரான ஆலிவர் ஹோயருடன் டயானாவுக்கு தொடர்பு இருந்தது. டயானாவுக்கு டாக்டர் ஹஸனத் கானுடனான உறவு உடல் உறவின் அடிப்படையிலானது அல்ல. அவர்களிடையே நெருங்கிய நட்பு இருந்தது என்றார் சிமோன்.

டயானா ராஜ குடும்பத்தாரின் தனிபட்ட விஷயங்கள் பற்றி டைரி ஒன்றில் எழுதி வைத்திருந்திருக்கிறார். அதில் இளவரசர் சார்லஸுக்கு படுக்கையில் என்ன பிடிக்கும், எந்தெந்த பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்தது, ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், ஆண் வேலைக்காரரும் படுக்கையில் இருந்தபோது கையும் களவுமாக சிக்கியது உள்ளிட்ட பரபரப்பு தகவல்களை எழுதி வைத்துள்ளார் டயானா. இந்த டைரியால் கூட டயானா கொல்லப்பட்டிருக்கலாம் என்று எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.



READ MORE | comments

க.பொ.த சா/த. பரீட்சைக்கு 578140 பரீட்சாத்திகள் இம்முறை தோற்றுகின்றனர்

டிசம்பர் 10ம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த சா.த பரீட்சைக்கு 4300 பரீட்சை நிலையங்களில் 578140 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சாத்திகளுக்குரிய அனுமதி அட்டைகள் 31.10.2013  ல் தபால் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் அனுமதி அட்டையில் மாற்றங்கள் இருப்பின் உடனடியாக 15.11.2013 முன்னராக இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்திற்கு அறிவிக்கும்படியும்  கோரியுள்ளது.

க.பொ.த. சா.த. பரீட்சை நேர அட்டவணையை பதிவிறக்கம் செய்ய 



READ MORE | comments

மட்டக்களப்பு சித்தாண்டி – மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பாற்குட பவனி! (படங்கள் இணைப்பு)

மட்டக்களப்பு சித்தாண்டி – மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கேதார கெளரி விரத நிகழ்வுகளை முன்னிட்டு நேற்று பாற்குட பவனி நிகழ்வு வெகுசிறப்பாக இடம்பெற்றது.
ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு சித்தாண்டி சித்திரவேலாயுதர் பெருமான் ஆலயத்தில் காலை 8.00 மணியளவில் ஆரம்பித்து, பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து காளிகோவில் வீதியூடாக ஆலயத்தை அடைந்தது.
ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள திருக்கேதார கெளரி அம்பாள் விக்கிரகத்துக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பெருமளவிலான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
READ MORE | comments

மட்டக்களப்பின் தனித்துவம் சொல்லும் கொம்புமுறி.

0
தமிழருகே  தனித்துவமான கலை, கலாசார, பாரம்பரியங்கள் இருக்கின்றன. அவை இன்று மறைந்து வருகின்றன. அன்று நடைபெற்ற பல விடயங்களை நமது முன்னோர்கள் சொல்லியே நாம் அறியவேண்டி இருக்கின்றது.
எமது பாரம்பரிய கலைகளை நாம் கட்டிக்காக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். பல விடயங்களை நாம் எமது முன்னோர்கள் சொல்லியே அறியவேண்டி இருக்கின்றது. எமது எமது எதிர்கால சந்ததியினர் எமது பாரம்பரிய கலை, கலாசாரங்களை எதிர்காலத்தில் தெரியாமல் இருப்பதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.
தமிழருக்கே தனித்துவமான ஒரு விளையாட்டாக கொம்புமுறி விளையாட்டு விளங்குகின்றது. கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற இடமும் எனது கிராமம் களுதாவளை. கொப்புமுறி விளையாட்டு இடம் பெற்ற  இடம் கொம்புச்சந்தி என்று இப்போதும் எல்லோராலும் பயன்படுத்தப் படுகின்றது ஆனால் இங்கே இருக்கின்ற பலருக்கு கொம்புமுறி விளையாட்டு என்றால் என்ன என்று தெரியாது.
கொம்புமுறி விளையாட்டு தொடர்பாக நான் முன்னர் மேலோட்டமாக ஒரு இடுகை இட்டிருந்தேன்.  இந்த பதிவின் மூலம் கொம்புமுறி விளையாட்டு பற்றியும் எமது கிராமத்திலே எவ்வாறு கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்றது என்ற பல சுவாரஷ்யமான விடயங்களை வரலாற்று தகவல்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.
கண்ணகை மாநாய்கரின்  வளர்ப்பு மகள். மாசாத்துவரின் மருமகள். கோவலன் மனைவி. செட்டி குலத்திலே வளர்ந்த செட்டிச்சி அம்மை. மாவின் கனியாக வந்த மாறன் விழி மாற வழி செய்தவள்.  மாதவிக்குப் போன்தோற்ற கணவருடன் பூம்புகார் விட்டுப் புறப்பட்டு மதுரை சென்றாள்.  ஆயர் இடை சேரியில் கண்ணகியை அடைக்கலமாக வைத்து கண்ணகியின் ஒரு கால் சிலம்பு விற்க  சென்றான் கோவலன்.
தட்டான் ஒருவன் கோவலனை “சிலம்புத் திருடன்” என்று குற்றம் சாட்டினான். விதி வலியால் அறிவிழந்த  பாண்டிய மன்னன் தீர்க்கமாக விசாரணை செய்யாமல் கோவலனை மழுவிலே வெட்டிக் கொன்றான்.
தன் கணவன் கள்வன் எனும் குற்ற  சாட்டின் பேரில் கொலை செய்யப் பட்டத்தை அறிந்த கண்ணகை கடும் கோபமுற்றாள். ஒரு கையில் சிலம்பு மற்றொரு கையில் வேப்பம் குழை.  விரித்த தலை முடி  நீர் வடியும் கண்கள் . கோபா வேசமாக சென்று பாண்டியனோடு வழக்குரைத்த கண்ணகை இடது முலை திருகி எரிந்து பாண்டிநகர் எரித்தாள்.

அடைக்கலமாக இருந்த ஆயர்ப்பாடிக்கு வந்தபோது ஆய்ச்சியர்கள் வெண்ணெய், தயிர் முதலானவற்றை கண்ணகியின் வேப்பம் தனிவித்தனர். கண்ணகை சீரிய தோற்றம் மாறவில்லை. பொங்கிய சினம் தணியவில்லை. இளைஞர்கள் கண்ணகி கட்சி கோவலன் கட்சி என்று இரண்டு பிரிவாகப் பிரிந்து கொம்பு எனப்படும் வளைந்த தடிகள்  இரண்டினை ஒன்றோடு ஒன்று கொழுவி இழுத்து முறித்து விளையாடி கண்ணகை கட்சிக்கு வெற்றி கொடுத்து ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.
இந்த வினோத விளையாட்டினை கண்ணுற்ற கண்ணகை கோபம் தணிந்து மணம் மகிழ்வுற்று சிரித்ததாகவும் கண்ணகையை மகிழ்சி அடைய செய்யும்  நோக்கிலே தோன்றி வளர்ச்சி அடைந்ததே இந்த கொம்புமுறி விளையாட்டு. இது விளையாட்டு என்று பேர் பெறினும் சமய சம்மந்தமானதும் இலக்கிய இராசனைக்குரியதும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்திலே வெற்றிலை செய்கையின் மூலம் புகழ் பெற்ற கிராமம் களுதாவளை கிராமம். பழம் பெருமை மிக்க இக் கிராமத்தின் வெற்றிலை தனி சுவை மிக்கது. “காலி  விளை பாக்கிற்கும் களுதாவளை வெற்றிலைக்கும் ஏலம் கிராம்பிட்கும் ஏற்றதுதான் உன் எழில் வாய்”  என்று நாட்டுப்புற பாடலிலே பாடும் அளவுக்கு பிரசித்தி பெற்றதுதான் இக் கிராமம்.
கண்ணகை வழிபாடு இந்தியாவிலே ஆரம்பமானது. சேரன் செங்குட்டுவன் இமய மலையில் கல்லெடுத்து கனக, கனக விஜயன் தலைமையிலே சுமந்து வர செய்து கண்ணகிக்கு சிலை செய்தான். கோவில் கட்டி விழாக் கொண்டாடினான். விழாவுக்கு சென்ற இலங்கை கஜபாகு வேந்தன் கண்ணகை சிலைகளையும், வழிபாட்டினையும் இலங்கைக்கு கொண்டு வந்ததாக சிலப்பதிகாரம் சொல்கின்றது.
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்திலே கண்ணகை வழிபாடு பிரசித்தி பெற்றது.  கொம்புமுறி விளையாட்டு கண்ணகை அம்மனை முன்னிறுத்தியே நடை பெறும். அம்மை, கொப்பளிப்பான், கண்நோய், போன்ற நோய்களை “அம்மன் கோதாரி”  என்று அழைப்பது மட்டக்களப்பு பிரதேச வழக்கு.
மழை வளங்குன்றி, வரட்சி அதிகமான காலத்திலேயே இந்த நோய்கள் அதிகம் பரவும். மஞ்சலும், வேப்பிலையும் இதற்கு மருந்து. கண்ணகை அம்மனுக்கு விழா நடத்தினால் கண்ணகை மகிழ்சியுற்றால் மழை பொழியுமெனவும் கோதாரிகள் (நோய்கள்) குறையும் எனவும் மக்கள் நம்பினர். இதனாலேயே கண்ணகையை வேண்டி மக்கள் மழைக் காவியம் பாடினர்.
“கப்பல் திசை கேட்டது கரைக்குள் அடையாதோ
கட்டையினில் வைத்த பின மற்றுயிர் கொள்ளாதோ
உப்பளமத்தில்  பதர் விதைக்க முளையாதோ
உத்தரவு ஊமையனுரைக்க அறியானோ
இப்பிரவியர் குருடு இப்ப தெளியாதோ
எப்பமா மழை தருவ தென்றினி திருந்தாய்
தப்பினால் உலக முறுவார்கள்  துயர் கண்டாய்
தற்பரா பரனுதவு சத்தி கண்ணகையே”
என்பது மழைக் காவியத்தில் சில வரிகள்.
கொம்புமுறி விளையாட்டு நடத்துவதானாலும் கண்ணகையினுடைய அருளையும், கருணையும் பெற்று நோய் நொடியின்றி  மழைவளம் பெற்று வளமாக வாழலாம் என்று மக்கள் நம்பினர். அவர்களுடைய நம்பிக்கை நிறைவேரியமையினாலேயே இன்றும் கண்ணகை வழிபாடு நிலைத்து நிக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலே கொம்புமுறி விளையாட்டு பரவலாக நடைபெற்றிருக்கின்றது. களுதாவளையிலே மிக நீண்ட காலமாக இக் கொம்புமுறி விளையாட்டு சிறப்பாகவும், ஒழுங்காகவும் திட்டமிட்டும் நடைபெற்று வந்திருக்கின்றது. மட்டக்களப்பு தமிழகம் எனும் நூலில்  இது பற்றி விபரமாக குறிப்பிடப் பட்டுள்ளன.
கொம்பு என்ற சொல் பல்வேறுபட்ட கருத்திலே வழங்குகின்றது. பழங்காலத்தில் கொம்பு என்றோர் துளைக் கருவி இருந்தது. கொம்பு போன்று வளைந்த இதனை “ஊதிடு கொம்பு” என்றனர். கோடு, இரலை, ஆம்பல், வபிர், என்றும் அதனைக் குறிப்பிட்டனர்.

கோடு என்பது ஏரிக்கோடி, கோல், நந்து, மேன்மை, விலங்கின் கொம்பு, மரக் கொம்பு என்பனவற்றையும் குறிக்கும். “கொம்பு விளையாட்டு என்று சொல்லும்போது அது மரக் கொம்பினையே குறிக்கின்றது. அதிலும் இதற்கு என்று குறிக்கப்பட்ட அளவு, தகமை பெற்ற வளைந்த மரக் கொம்பே இதனால் கருதப் படுகின்றது.
கொம்புமுறி விளையாட்டு நடைபெறுவதற்கு இரண்டு கட்சிகள் தேவை ஒன்று கோவலன் கட்சி மற்றொன்று கண்ணகை கட்சி. கோவலன் கட்சியை வடசேரி என்றும், கண்ணகை கட்சியை தென்சேரி என்றும் குறிப்பிடுவர். வடசேரி, தென் சேரி  என்பவற்றை வடசேரி வாரம் தென் சேரி வாரம் என்று அழைப்பது மட்டக்களப்பு வழக்காறு.
மட்டக்களப்பு பிரதேசத்திலே கோவில் உரிமை அதிகமாக குடிவழியாக கணிக்கப்படுகின்றது.  பல குடிகள் இருக்கின்றன, குடும்பம் என்றும் சில இடங்களிலே சொல்வார்கள். ஒரு தாயின் பிள்ளைகள் ஆண் என்றாலும் சரி பெண் என்றாலும் சரி அனைவரும் தாயின் குடியினராகவே கணிக்கப் படுவர்.
வடசேரி, தென்சேரி வாரம் கணிக்கப்படும்போது மாறாக தந்தையின் வாரமாகவே ஆண் பெண் பிள்ளைகள் அனைவரும் கருதப்படுவர். வாரம் என்பதனை வாரக் கட்டு என்றும் சொல்வதுண்டு…

தாயும் தந்தையும் ஒரே குடியாகவும் ஒரே வாரமாகவும் அமையும் வழக்கம் நடைமுறையில் இல்லை சில விதி விலக்குகள் இருக்கலாம் அவை முறை மாறிய திருமணங்களினால் ஏற்பட்டவை. கோவிலிலே பூசைகள் திருவிழாக்கள் என்பன குடிவழி நடக்கும்போது ஏற்படும் போட்டிகளில் தாயுடன் குழந்தைகள் அனைவரும் ஒத்து நிற்பர். தந்தை மட்டும் தனித்து நிற்பார்.

வாரக் கட்டாக கூத்து வசந்தன் கொம்புமுறி வந்துவிட்டால் குழந்தைகள் அனைவரும் தந்தையின் பக்கம் சார்ந்து நிற்பர்தாய் மட்டும் தனித்து நிற்பாள். வாரக்கட்டு உணர்ச்சியினால் வாய்க்கொழுப்புச் சீலையால் வடிந்த கதை ஒன்றுண்டு. பிள்ளைகள் தாய் தந்தை இருவர் பக்கமும் சார்ந்து நிற்கும் வகையிலே குடிவழியும் வாரக்கட்டும் பிரித்து வைத்த மட்டக்களப்பு மக்களின் மதிநலம் வியந்து போற்றுதற்குரியது.
அம்மன் கோதாரி என்ற நோய்கள் பரவினால் அல்லது பரவும் என்ற எண்ணம் தோன்றினால் அல்லது மழைவளம் வேண்டுமென்று கருதினால் ஊர் நன்மை கருதி கொம்புமுறி விழையாட்டு நடாத்துவது பற்றி ஆலோசிப்பர். கண்ணகை அம்மனை மகிழ்வூட்டி தமது காரிய சித்திகளை பெற முனைவோரும் இது பற்றிச் சிற்திப்பர்.
ஊர்மக்கள் அனைவரும் பங்குபற்றுகின்ற நிகழ்ச்சியாதலால் பொதுத் தீர்மானமின்றி கொம்பு விழையாட்டு நடாத்த முடியாது. கட்சி வேறுபாட்டினால் குழப்பநிலை தோன்றாது என்ற உத்தரவாதம் தேவை. அதுமட்டுமன்றி கொம்புமுறி விழையாட்டு இடைநடுவே குழம்பிவிட்டால் குழப்பிய பகுதியினர் குற்றப்பணம் கட்டவேண்டியும் நேரிடும். ஊர் ஒற்றுமையாகவும் கட்டுப்பாடாகவும் இருந்தால் மட்டுமே கொம்புமுறி விழையாட்டு நடாத்தலாம். இல்லையேல் விழையாட்டு வினையாக முடிந்த கதையாகும். இன்று இந்த விழையாட்டு அருகிப் போனமைக்கு இவையும் காரணம் எனலாம்.
களுதாவளையில் கொம்புமுறி விழையாட்டு நடாத்துவது பற்றி 1812ம் ஆன்டு ஆவணிமாதம் 1ம் திகதி எழுதப்பட்ட ஆவணம் இப்பொழுதும் இருக்கின்றன. களுதாவளை ஊர் மக்களின் நன்மை கருதி கொம்புமுறி விழையாட்டு நடாத்துவதற்கு ஊர்க்கடுக்கண்டவர்கள் தென்சேரி வடசேரிவாரத்திற்கு தெரிபட்டு குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய நடநடது கொள்வோம் என்று கையொப்பமிட்டுள்ளனர். அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பதை பொலிஸ் தலமை உத்தியோகம் பார்த்த அந்நாளைய விதானைமார் வன்னிமை முன்னிலையில் கையொப்பம் வைத்து உத்தரவாதம் அளித்துள்ளனர்.
கொம்பு முறிபற்றி இவ்வாறு எழுதப்பட்ட பல வருடங்களுக்குரிய ஆவணங்கள் உண்டு ஆவணங்களில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளில் அநேகமானவை ஒரே விதமானவை. ஒருசில விசேட நிபந்தனைகள் சில ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

1894ம் ஆண்டு ஆனிமாதம் 16ம் திகதி மட்டக்களப்பு எருவில் பற்று களுதாவளையில் ஊர் நன்மை கருதி கொம்புமுறி விழையாட்டு நடாத்துவது பற்றிய உடன்படிக்கை எழுதப்பட்டுள்ளது. தென்சேரி வாரக்கடுக்கண்டவர்களும் வடசேரி வாரக் கடுக்கண்டவர்களும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
உடன்படிக்கை விபரமாக எழுதப்பட்டுள்ளது. 5 நிபந்தனைகள் பற்றிய சுருக்கம் பின்வருமாறு அமைந்துள்ளன.
01. இப்போது நடந்தேறிவரும் தேங்காய் அடிப்பதை 15 நாட்களுக்கு நடாத்தவும். இந்த நாட்களிலே தேர் வேலை புரைவேலைகளை முன்னீடு பின்னீடாக முடித்துக் கொள்ளவும்.
02. 11 நாளைக்குள் கொம்புத் தட்டெடுத்து குத்துக்கால் நாட்டி தேர் வரிந்து கப்பல் கேடகம் முதலிய கட்டு வேலைகளையும் முன்னீடு பின்னீடாய் செய்து முடிக்கவும். கொம்புத்தட்டு வழமைப்படி சதங்கை கட்டி வழக்கமான இடங்களிலே அவரவர் வசந்தனாடிக் கொள்ளவும்.
03. கொம்புத் தட்டெடுத்து அடுத்த நாளில் இருவாரத்துக்காரர்களும் பேசி இணங்கியபடிக்கு தங்களாலியன்ற வெடி வாணம் முடி பிறவாடை முதலிய சகல தளபாடங்களும் செய்து தேர் கல்யாணம் முடித்து தேருக்கு தண்ணீர் சொரிந்து சீலை போட்டு முடிகவிழ்த்து வழமைப்படி முடிக்கவும்.
04. தங்களால் இயன்றளவு இரண்டு நாளைக்கு தேர்களைச் சோடித்து ஏழு நாளைக்குள் தேர் இழுக்கவும் நேருக்கு இரண்டே முக்கால் விரக்கடையில் சரி கொம்புக்குத் தோடு இரண்டு விரக்கடை குச்சித் தோடும் பிடித்து அவ்அவ் இடத்தில் பில்லி வைத்து கொம்பு கட்டிக் கொள்ளவும். கொம்பு இரண்டு வாரக் காரர்களும் ஏற்க எடுத்துக் கொள்ளவும். நியாயமாய் கட்டிப்பிடித்து முறித்துக் கொள்ளவும்.
05. முற் சொல்லியபடி தேரிழுத்து முடிந்த அடுத்த நாளில் அம்மனைக் கொண்டு வந்து பொங்கிப் போடவும்.
இவ்வாறு இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன.
READ MORE | comments

தொடர்ச்சியாக சிறுமிகளை துஸ்பிரயோகம்: ஜெயிலும் துஸ்பிரயோகமுமாக திரியும் கிளிநொச்சி இளைஞன்

கிளிநொச்சி, கிரமந்தன் ஆறு பகுதியில் 7 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்தேகநபரை நவம்பர் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி, கிரமந்தன் பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் கடந்தவாரம் கடைக்கு சென்ற வேளை மேற்படி நபர் ஏமாற்றி சைக்கிளில் கூட்டிச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (28) சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்தனர்.
மேற்படி சந்தேக நபரை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) ஆஜர்படுத்திய போது, நீதிபதி எம்.ஐ.வகாத்தீன் சந்தேகநபரை நவம்பர் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியையும் சந்தேகநபரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டார்.
இதேவேளை, மேற்படி சந்தேக நபர் 2011ஆம் ஆண்டு வாய்பேசாத யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் ஒரு வருட காலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
விடுதலையாகிய பின்னர் 2012ஆம் ஆண்டு 12 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கடந்த மே மாதம் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த வாரம் மூன்றாவது தடவையாக மேற்படி 7 வயதுச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட குற்றத்திற்காக மீண்டும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
READ MORE | comments

பத்தே நிமிடங்களில் உங்கள் எந்த பாஸ் வோர்ட்டையும் திருடலாமா?

ஒரு சில எழுத்துக்களும் எண்களும்தான் நம்முடைய பாதுகாப்பை தீர்மானிப்பவையாக இருக்கின்றன. ஏடிஎம் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் உபயோகிக்கும் போதும், இணையத்தில் பொருள்களை வாங்கும்போதும், இணைய வங்கிக் கணக்கு,மின்னஞ்சல்களைத் திறக்கும் போதும் பாஸ்வேர்டு அல்லது பின் நெம்பர்களைப் பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள் நமக்கு மட்டும் உரியதாக இருக்கவேண்டும். அப்படியில்லாமல் போனால் நம்முடைய பாதுகாப்பு கேள்விக்குரியதாகிவிடும்.

நீங்கள் பயன்படுத்தும் எழுத்துகள் எளிமையானதாக இருந்துவிட்டால் ஹேக்கர்கள் எனப்படும் இணையத் திருடர்களுக்கு கொண்டாட்டம்தான். உங்கள் வங்கிக் கணக்கும், மின்னஞ்சலும் அவர்களுக்கு ஒரு சில நிமிடங்களில் சொந்தமாகிவிடும்.
பொதுவாக உலகம் முழுவதுமே பாஸ்வேர்டுகளை/பின் எண்களைப் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் சிறிய எழுத்துக்களையே (Small Case) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அதுவும் ஆறு எழுத்துக்கள் என்ற அளவில் என்று கடந்த டிசம்பர் 2010ல் புளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் நடத்திய பாஸ்வேர்டு பயன்பாடு குறித்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எழுத்துக்களில் abc யும், எண்களில்123456ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகில் 50 சதவீதம் பேர் பாஸ்வேர்ட்களாகபயன்படுத்துகின்றனர் என்றும், இது போன்ற 6இலக்க பாஸ்வேர்டை ஹேக்கர்கள் கண்டறிய பத்து நிமிடங்கள் போதுமானது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.இதற்கு மாற்றாக ஆங்கிலப் பெரிய எழுத்துக்களுடன் (Upper Case) சிறப்புக் குறியீடுகளைச் சேர்த்துப் பயன்படுத்தினால் அதனைக் கண்டுபிடிக்க அதிகபட்சமாக44,530 வருடங்கள் பிடிக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.
மேலும் இந்த ஆய்வு பாஸ்வேர்டுகளை எப்படி அமைக்கலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.அதன்படி பாஸ்வேர்டுகளை ஆறு இலக்கமாக வைக்க வேண்டாம் என்றும் அதனை குறைந்தபட்சம் ஒன்பது இலக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.அந்த எழுத்துக்கள் ஆங்கிலப் பெரிய எழுத்தில் இருப்பதும், அதில் எண்களுடன் கலந்திருக்கும்படியும் அமைக்க வேண்டும். அத்துடன் சிறப்புக் குறியீடுகள் (Special Symbols) கலந்து அமைப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தகைய பாஸ்வேர்டு அமைத்தால் பாதுகாப்பு?
இதோ இந்தப் பட்டியலைப் பாருங்கள், உங்கள் பாஸ்வேர்ட் எத்தகையது என்பதை முடிவு செய்யுங்கள்.
6 எழுத்துக்கள்
:
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 10மணி நேரம்+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்
7 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்+ பெரிய எழுத்துடன்(Upper Case) : 23 நாட்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்
8 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்

9 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்.
READ MORE | comments

தேனில் உள்ள மகத்துவம்

தேனை இயற்கையே தரும் சத்தும் சுவையும் உள்ள உணவாகும். தேனில் வைட்டமின் B2, B6, H(Biotin), K மற்றும் சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், அக்ஸாலிக அமிலம் , குளுகோஸ், பாஸ்பரஸ், கந்தகம், இரும்புச்சத்து, உப்புசத்து, மக்னீசியம், கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.
தேன் வெளிப்படையாக இனிப்புச் சுவை உடையதாயினும், உடலுக்கு அது கசப்பு சுவையைத் தருகிறது. கசப்புச்சுவை நரம்புகளுக்கு பலம் தருபவை எனவே தேனை உண்டால் நரம்புகள் பலம்பெறுகின்றன.

தேனின் பயன் அறிந்தே, நமது ஆயுர்வேத வைத்தியத்திலும் சித்த வைத்தியத்திலும் பல சூரணங்களைத் தேனில் குழைத்து உண்ணத் மருத்துவர்கள் தருகிறார்கள். குடலிலுள்ள புண்கள், மற்றும் அழுகலை அகற்றுவதில் பயன்படுகிறது. தேனை உண்டால் பசியும் ருசியும் உண்டாவதோடு. நல்ல உறக்கமும் ஏற்படுகிறது.
உடல் பருத்தவருக்கும், உடல் இளைத்தவருக்கும் தேனே சிறந்த மருந்தாக உள்ளது. உடல் பருமனானவர்கள் தினமும் வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி விட்டு அருந்திவர, உடலிலுள்ள ஊளைச்சதை குறையும் பலம் அதிகரிக்கும்.
உடல் மெலிந்தவர்கள் இரவு உணவிற்குப் பின், ஒரு கப் பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி தேனை விட்டு அருந்திவர,  உடல் பருமன் கிட்டும், ஆயுளும் நீடிக்கும்.
தேனை புண்களுக்கு மருந்தாகவும் பூசலாம். தீப்பட்ட காயங்களுக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாகும். வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஒரு தேக்கரண்டி தேனும் கலந்து, தினமும் பருகி வர நல்ல குரல் வளம் கிட்டும், தொண்டைக் கட்டும் நீங்கும். தேன் பருகுவதன் மூலம் பல தொற்று நோய்கள், மலேரியா, அம்மை போன்ற நோய்களை வரமால் தடுக்கலாம்.
பேரீச்சம்பழத்தைக் தேனில் ஊற வைத்து உண்பதால் நல்ல இரும்புச்சத்தோடு. தேனிலுள்ள சத்துக்களும் கிடைக்கும் அதுபோல், ரோஜா மலரிலுள்ள இதழ்களை தேனில் ஊறவைத்து உண்பதால், உடலுக்குபலமும், குளிர்ச்சியும், தாதுவிருத்தியும் உண்டாகும்.  இதுவே குல்கந்து என்று அழைக்கப்படுகிறது.
இன்று சுத்தமான தேன் நகர்புறங்களில் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. பெரும்பாலும் போலிகளே புழக்கத்தில் உள்ளது. நீங்கள் வாங்கிய தேன் சுத்தமானதுதானா என்று கண்டறிய கீழ் காணும் சில முறைகளை பின்பற்றலாம்.
ஒரு கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும் தேன் தண்ணீரில் கரையாமல் அப்படியே அடியில் சென்றால் அது சுத்தமான தேனாம்.
ஒரு செய்தித்தாளை எடுத்து அதில் ஒரு சொட்டு தேனை விட அது பின்பக்கம் கசியாமல் இருந்தால் அது சுத்தமான தேனாம்.
ஒரு துளி தேனை நாவில் தடவியதும் இனிப்பு சுவை நாவில் நீண்ட நேரம் இருக்க கூடாது மற்றும் நாவில் மஞ்சள் கலந்த எந்த வண்ணமும் தங்க கூடாது
என் அனுபவத்தில் அறிந்த முறை. சர்கரையில் எடுத்து பாகு அல்லது எந்த ஒரு இனிப்புபண்டங்களை ஒரு பாட்டிலில் மூடி வைத்தாலும் அந்த பாட்டிலின் மூடியை சுற்றிலும் எறும்புகள் வந்துவிடும் ஆனால். ஒரு சுத்தமான தேனை அப்படி வைத்தாலும் எறும்புகள் அண்டவே அண்டாது.

READ MORE | comments

கண்டியில் தனது இரண்டரை வயது மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்த தந்தை

கண்டியில் தனது இரண்டரை வயது மகளுடன் தந்தையொருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  
கண்டி - பன்வில் நகரில் தபால் நிலையத்திற்கு அருகில் இருக்கும் கிணறு ஒன்றில் இருந்து தந்தை மற்றும் இரண்டரை வயதான மகளின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பன்வில் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த தந்தையின் வயது 52 என தெரிவிக்கும் பொலிஸார் இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறினர்.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார். இவர்கள் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

பன்வில, உடகொட - குருந்துகொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு தற்கொலை செய்துள்ளனர்.

உயிரிழந்த நபருக்கு 16 வயதான மகளும் 12 வயதான மகனும் உள்ளதுடன் அவர்கள் சிறுவர் காப்பகம் ஒன்றில் வசித்து வருகின்றனர் என பொலிஸார் கூறினர்.

READ MORE | comments

எங்கள் மீது ஜெயலலிதா அம்மையார் கொண்டுள்ள அன்பினை வரவேற்றுள்ளார் - அனந்தி சசிதரன்!

சிறீலங்காவில் நடைபெறுகின்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியகலந்துகொள்ள கூடாது என்று தமிழக சட்டமன்றில் கொண்டுவந்த தீர்மானத்திற்கு தமிழ்மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துள்ளார்(காணொளி)

போர்குற்றசாட்டிற்கும் இனப்படுகொலை குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கின்ற சிறீலங்காவில் காமன் வெல்த் மநாட்டை நடத்த கூடாது என்று கொண்டுவந்த தீர்மானத்தை நாங்கள் வரவேற்கின்றோம்பெண்கள் ரீயில் அம்மா கொண்டுள்ள அக்கறையினை நான் அன்புடன் பற்றிக்கொள்கின்றேன்.
இனப்படுகொலையாளிகளை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டிக்கும் வரை புரட்சிதலைவி ஜெயலலிதா தொடர்ந்தும் குரல்கொடுக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அவர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேர் யாழ்ப்பாண சிறையிலிருந்து விடுதலை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் சிறையில் இருந்த 19 பேரையும் விடுவித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 19 பேரை கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இம் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
READ MORE | comments

மட்டக்களப்பு இருதயபுரத்தில் ஆசிரியர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இருதயபுரம்,கிழக்கு எல்லை வீதியில் வசிக்கும் துஸ்யந்தன்(36வயது)என்ற ஆசிரியரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸார் தெரிவித்தனர். இவர் தனது அறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தபோது அதனை கண்ணுற்ற மனைவி கூக்குரலிட்டபோது அவர் தூக்கில் இருந்து மீட்கப்பட்டு உடனடியாக மட்டக்களப் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் இடை நடுவில் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

READ MORE | comments

கிழக்கின் மைந்தனுக்கு சர்வதேச குறும் திரைப்பட விழாவில் முதன்மை விருதுகள்

இன்றைய குறும்திரைப்படங்கள் நாளைய பிரமாண்டமான சினிமா உலகில் படிகற்களாகி விட்டன. ஒரு தனிமனிதன் சினிமாவில் கால்த்தடம் பதிப்பதென்பது பல சவால்கள் நிறைந்ததொன்றாகவே அன்றும் இன்றும் காணப்படுகின்றது.

ஆனால் இன்றைய குறும் திரைப்படங்கள் இன்று உலகையே தன் வசப்படுத்தி சினிமாவின் ஒரு நுழைவாயிலாகி விட்டதென்றே கூறலாம். அதற்கு பல கலைஞர்கள் உதாரணங்களாகி விட்டனர் என்பது யாவரும் அறிந்ததே அதற்கு  கலைஞர்களின் முயற்சியும் தொழிநுட்ப சாதனங்களின் முன்னேற்றமுமே காரணம் எனலாம். 


அந்தவகையிலே தான் நம் நாட்டின் திருகோணமலை மண்ணின் படைப்பாக sky Creation நிறுவனத்தின் தயாரிப்பில் அண்மையில் வெளியான 'அடிவானம்' குறும் திரைப்படம் உலக குறும் திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. விம்பத்தின் 7வது சர்வதேச குறும்திரைப்பட விழாவில் பல நூற்றுக்கணக்கான இந்திய, இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு இடையில் எடுக்கப்பட்ட குறும்திரைப்படங்களோடு கடுமையாக போட்டியிட்டு 2012ம் ஆண்டுக்குரிய முதலாவது சிறந்த குறும்திரைப்படத்திறக்;கான சாதனை விருதுகளையும் [The Best Short Film Award- 2012  Adivaanam  Sri Lanka]     வென்றது.



அக் குறும்திரைப்படத்திலேயே முதன்மை பாத்திரமாக நடித்த தம்பலகமத்தைச் சேர்ந்த  ஐகன் ஹரிஸ் அவர்களுக்கு சிறந்த குழந்தை நடிகர் Best Child Artist  2012 விருதும் கிடைத்தது. இக் குறும் திரைப்படத்தினை தயாரித்து கதை, திரைக்கதை, வசனமமைத்து இயக்கியவர் திருகோணமலை தம்பலகமத்தைச் சேர்ந்த இயக்குநர் யோ.சுஜீதன்ஜவந்தாறுமூலை கிழக்குப்பல்கலைகழகம் - 4ம் வருட கலைகலாச்சாரபீட மாணவன்ஸ ஆவார்.



உலகின் பல பாகங்களிலிருந்து எடுக்கப்பட்டு சர்வதேச ரீதியில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு போட்டியின் விருது வழங்கும் விழா (விம்பம் சர்வதேச 7வது குறும்திரைப்பட விழா 2012 )லண்டனில் 2011 நவம்பர் 11 ஆம் திகதி மாலை 05.00 முதல் 09.30 வரை ஒழுங்கு செய்யப்பட்டது.



முதல்முறையாக ஒரு இலங்கைத் தமிழன் போட்டியின் முதன்மையான விருதுகளை வென்று முதலிடத்துக்கு  தெரிவாகி இருப்பது நம் நாட்டிற்கு மிகவும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.  போட்டியின் 2வது பரிசினை இந்தியாவிலிருந்து வெளியான “தமில்” குறும்திரைப்படமும் 3வது பரிசினை பிரான்சிலிருந்து வெளியான “நகல்” குறும்திரைப்படமும   பிடித்தது. 



அத்தோடு இறுதி போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்ட  சிறந்த ஏழு குறும் திரைப்படங்கள் லண்டனில் “சட்டன்”; நகரில் உள்ள “SECOMBE”  ”  திரையரங்கில் திரையிடப்பட்டது.



அவற்றில் அடிவானம்  குறும் திரைப்படம் மக்களது மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.



(YouTube:- Short Film Adivaanam(Horizon) with English Subtitles)  போட்டியின் நடுவர்களாக தென்னிந்தியாவின்; வழக்குஎண் 18/9 , (2012ம் ஆண்டின் சிறந்த தென்னிந்திய திரைப்படம்) சாமுராய்,காதல் இகல்லூரி ஆகிய  திரைப்படங்களின் இயக்குநரான பாலாஜி சக்திவேல் அவர்களுடன் ஆய்வாளர்,அரங்கியலாளர்,நாடகவிமசகர் Dr.A.ராமசுவாமி உட்பட பலர் போட்டியின் மத்தியஸ்தம் வகித்தனர்.




விருதுவழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த முதன்மை விருந்தினர் இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவர்கள் அடிவானம் இயக்குநர் யோ.சுஐPதன் அவர்களை பாராட்டியதோடு அவர் மனதிலும் தென்னிந்தியசினிமா உலகிலும் அடிவானம் இயக்குநருக்கும் அதில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய nஐகன் ஹரிஸ் அவர்களுக்கும்  இடமுண்டு என பாராட்டியதோடு இயக்குநர் யோ.சுஜிதன் தென்னிந்தியாவில் மிகப் பெரும் இயக்குநராவதற்கு சகல வகையிலும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் எனவும் அனைவர் முன்னிலையிலும் உறுதியாக கூறினார். 



அத்தோடு அடிவானம் குறும் திரைப்படத்தை பார்த்தவர் மனமும் உருகிவிட எல்லோருடனும் தானும் கண்ணீர் விட்டு அழுததாகவும் கூறினார். அக் கதை இன்றைய சமுகத்திற்கு எப்போதும் அவசியமானது எனவும் அதன் படப்பிடிப்பு பற்றி கூறுகையில் குறுகிய வசதி கொண்ட இன்றைய வாழ்வில் இதற்கென்று பணம் ஒதுக்கி இப்படி ஒரு படம் பண்ணுவது என்பது மிகப் பெரிய சாதனை தான் என பாராட்டினார்.



எந்தவொரு திரைப்பட அனுபவம் இல்லாமல் தன் அறிவுக்கு எட்டியது போல் இப்படி ஒரு சிறப்பான படத்தை எடுத்திருப்பது என்பது சாதாரணமான ஒரு விடயமல்ல என கூறினார்.



இதில் பயன்படுத்தப்படும்  கணமான விடயங்களை தெளிவுபடுத்த சில நுணக்கமான உத்திகளை பயன்படுத்தியிருக்கின்றார் எனவும் “தன் மனதுக்க பிடிச்ச படம் என்னா  அது அடிவானமே..” அதில் நடித்த சிறுவனின் நடிப்பு மிகவும் யதார்த்தமானதாகவும் மெய்சிலிர்க்கவும் வைத்துள்ளது. சிறுவர்களை நடிக்க வைப்பது ரொம்ப கடினமான செயலாகும் அதை சிறப்பாக அவர் நெறிப்படுத்தியுள்ளார்” என அனைவர் முன்னிலையிலும் கூறினார். 
(Youtube  : International Tamil Short film Festival-2012 (Landon) & "அடிவானம்"(Horizon) )



அடிவானம் குறும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றம் படத்தொகுப்பினை சி.தர்சன் (தர்சன் வீடியோ ) அவர்கள்  மிகவும் திறன்பட செய்துள்ளார். அத்துடன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சிறுவன் ஹரிஸ் அவர்களும் மற்றைய கலைஞர்களும் பின்னணியில் உதவிய னுச.எஸ். சிவச்செல்வன்  அவர்களும் தனது நன்பர்களுமே தன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனா.; என அடிவானம் இயக்குநர் தெரிவித்திருந்தார். அவரிற்கு கிடைத்த வெற்றிகள் யாவும் அவருக்கு பக்கபலமாக இருந்து ஆதரவளித்து ஊக்குவித்த பெற்றோரையே சாரும்.


அதுமட்டுமன்றி கடந்த 2012ம் ஆண்டு உயர்கல்வி அமைச்சினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே “கவிதா” , “ஆற்றல்”; நிகழ்வுகள் கொழும்பில் நேத்ரா தொலைக்காட்சியின் ஊடக அனுசரணையில் ஒழுங்கு செய்யப்பட்டது.



இதில் குறும் திரைப்பட பிரிவில் அடிவானம் குறும்திரைப்படம்  முதலிடத்திற்கான விருதினையும் வென்றது.



அடிவானம்; குறும்திரைப்படம் முதல்முதலில் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரிலே திரையிடப்பட்டது. அத்தோடு சுஐதனுடைய 2வது வெளியீடான “மாங்கா” குறும்திரைப்படத்தினுடைய முன்னோட்ட காட்சிகளும்  அவருடைய இசையில் உருவான Music Album Trailer காட்சிகளும் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பையும் பெற்றது.



“மாங்கா” குறும்திரைப்படத்தினுடைய தயாரிப்பு, கதை ,திரைக்கதை, வசனம,இயக்கம்  மற்றும் ;ஒளிப்பதிவு ,ஒலிப்பதிவு படத்தொகுப்பு
, உடை- ஒப்பனை என்பவற்றை இயக்குநர் சுஐதனே செய்து அதில் ஒரு பாத்திரத்தில் நடித்தும் இருக்கின்றார்.



(Youtube  :- Maanga Official Short Film Trailer) 

 


பின்னர்; திருகோணமலையின் மூத்த கலைஞர்களை கௌரவிக்கும் “தமிழ் விழா-2013; நிகழ்வில்” அடிவானம் குறும்திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனாலும் மிகுந்த மனவருத்தமான விடயம் யாதெனில் பல முக்கிய விருதுகளை வென்று பலரது மனங்களில் நின்ற இக் குறும்திரைப்படம் இன்னும் தகுந்த முறையில் வெளியிடப்படவில்லை என்பதே.



அடிவானம் முழுக்க முழுக்க ஒரு கலை சினிமாவாகும். ஏழை மக்களுடைய 


வறுமையினையும், பசியினையும், பொருளாதார நிலையினையும், அதன் எதிர்பார்ப்பினையும் பேசியது. நாட்டில் ஒரு ரூபாயிக்கு கிடைக்கும் மதிப்பு என்னவென்பதையும் சதங்களுக்கு ஏற்ப்பட்ட நிலையும்  ஒரு ரூபாய்க்கு ஏற்படுமா? என “5ரூபாய்க்கு சில்லைறை இல்லை” என கடைக்காரன் சொல்லும் வசனம் சிந்திக்க வைக்கின்றது. அன்று அதிகம் பெறுமதியிலிருந்த சில்லறைகள் எல்லாம் இன்று பிச்சைககாரனின் கைகளில் தானா?  வசதியுள்ளவர்கள் சிறுவர்கள் முன்பு சிறு உணவையேனும் சாப்பிடும் பொழுது ஒரு சிறுவனின் உணர்வுகள் ,ஏக்கங்கள்; என்பன படமாக்கப்பட்டள்ளது. அடிவானம் குறும்திரைப்படம்;  13 நிமிடங்களை மட்டும் உள்ளடக்கியதாகும்.



இப்படத்தில் பிச்சைகாரனாக வரும் பாத்திரம் அமரர்- தில்லையம்பலம்  அவர்கள் இன்று இறைபாதம் அடைந்தாலும் அடிவானத்தில்; உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் இன்றும். அக் கலைஞனுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.



அவர் தொடர்ந்தும்; ஆதரவற்ற, பாதிக்கப்பட்ட, வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேலோங்க செய்வதற்கு அவரால் 2009ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இதயக்கரம் ஊடாக தொடர்ந்தும் உதவி செய்து வருகின்றார். அதுவே தனது வாழ்வில் உண்மையான சந்தோசம் என்றும் மேலும் ஆதரவற்ற கல்வியில் ஆர்வம் உள்ள ஆயிரம் மாணவர்களை இனங்கண்டு உதவும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளார். இந்நிலையினை மேம்படுத்துவதற்காக தன்னை இயக்குநராக பரிணமித்துள்ளதாக கூறினார்.



சிறுவயதிலிருந்து ஓவியம் வரையும் ஆர்வமும் பாடசாலைகளில் விசேட ஓவிய ஆசிரியனாகவும் பின்னர் பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்டார். சிற்பம் இகைவினைப்பொருட்கள் செய்வதிலும் மற்றும் கதை, சிறுகதை, கவிதைகள் எழுதுவதிலும் தேர்ச்சியுடையவராகவும், உள்ளுர் இசைக்குழுக்களில் ஒரு பாடகனாகவும், இசையமைப்பாளனாகவும் (2011-சூரியன் குஆக்கான நிலையகுறியிசை – புலரும் காலைப்பொழுதில்….),புகைப்படக்கலைஞராகவும், படப்பிடிப்பு, படத்தொகுப்பு துறையிலும் பிரவேசித்து இன்று சிறந்த ஒரு இயக்குநராகவும் தன்னை பல்துறை கலைஞனாக பரிணமித்திருக்கின்றார்;.



எனவே அவரின் முயற்சிகள் யாவும் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள். நடிப்பிலும் இசைத்துறையிலும் ஆர்வம் உள்ளவர்கள்  உடன் தொடர்பு கொள்ளுங்கள்.



                            
                                    
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |