Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கண்டியில் தனது இரண்டரை வயது மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்த தந்தை

கண்டியில் தனது இரண்டரை வயது மகளுடன் தந்தையொருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  
கண்டி - பன்வில் நகரில் தபால் நிலையத்திற்கு அருகில் இருக்கும் கிணறு ஒன்றில் இருந்து தந்தை மற்றும் இரண்டரை வயதான மகளின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பன்வில் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த தந்தையின் வயது 52 என தெரிவிக்கும் பொலிஸார் இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறினர்.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகிறார். இவர்கள் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

பன்வில, உடகொட - குருந்துகொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு தற்கொலை செய்துள்ளனர்.

உயிரிழந்த நபருக்கு 16 வயதான மகளும் 12 வயதான மகனும் உள்ளதுடன் அவர்கள் சிறுவர் காப்பகம் ஒன்றில் வசித்து வருகின்றனர் என பொலிஸார் கூறினர்.

Post a Comment

0 Comments