தேனை இயற்கையே தரும் சத்தும் சுவையும் உள்ள உணவாகும். தேனில் வைட்டமின் B2, B6, H(Biotin), K மற்றும் சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், அக்ஸாலிக அமிலம் , குளுகோஸ், பாஸ்பரஸ், கந்தகம், இரும்புச்சத்து, உப்புசத்து, மக்னீசியம், கால்சியம், அயோடின், பொட்டாசியம், குளோரின் போன்ற அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன.
தேன் வெளிப்படையாக இனிப்புச் சுவை உடையதாயினும், உடலுக்கு அது கசப்பு சுவையைத் தருகிறது. கசப்புச்சுவை நரம்புகளுக்கு பலம் தருபவை எனவே தேனை உண்டால் நரம்புகள் பலம்பெறுகின்றன.
தேனின் பயன் அறிந்தே, நமது ஆயுர்வேத வைத்தியத்திலும் சித்த வைத்தியத்திலும் பல சூரணங்களைத் தேனில் குழைத்து உண்ணத் மருத்துவர்கள் தருகிறார்கள். குடலிலுள்ள புண்கள், மற்றும் அழுகலை அகற்றுவதில் பயன்படுகிறது. தேனை உண்டால் பசியும் ருசியும் உண்டாவதோடு. நல்ல உறக்கமும் ஏற்படுகிறது.
உடல் பருத்தவருக்கும், உடல் இளைத்தவருக்கும் தேனே சிறந்த மருந்தாக உள்ளது. உடல் பருமனானவர்கள் தினமும் வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி விட்டு அருந்திவர, உடலிலுள்ள ஊளைச்சதை குறையும் பலம் அதிகரிக்கும்.
உடல் மெலிந்தவர்கள் இரவு உணவிற்குப் பின், ஒரு கப் பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி தேனை விட்டு அருந்திவர, உடல் பருமன் கிட்டும், ஆயுளும் நீடிக்கும்.
தேனை புண்களுக்கு மருந்தாகவும் பூசலாம். தீப்பட்ட காயங்களுக்கு தேன் ஒரு சிறந்த மருந்தாகும். வெந்நீரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து ஒரு தேக்கரண்டி தேனும் கலந்து, தினமும் பருகி வர நல்ல குரல் வளம் கிட்டும், தொண்டைக் கட்டும் நீங்கும். தேன் பருகுவதன் மூலம் பல தொற்று நோய்கள், மலேரியா, அம்மை போன்ற நோய்களை வரமால் தடுக்கலாம்.
பேரீச்சம்பழத்தைக் தேனில் ஊற வைத்து உண்பதால் நல்ல இரும்புச்சத்தோடு. தேனிலுள்ள சத்துக்களும் கிடைக்கும் அதுபோல், ரோஜா மலரிலுள்ள இதழ்களை தேனில் ஊறவைத்து உண்பதால், உடலுக்குபலமும், குளிர்ச்சியும், தாதுவிருத்தியும் உண்டாகும். இதுவே குல்கந்து என்று அழைக்கப்படுகிறது.
இன்று சுத்தமான தேன் நகர்புறங்களில் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை. பெரும்பாலும் போலிகளே புழக்கத்தில் உள்ளது. நீங்கள் வாங்கிய தேன் சுத்தமானதுதானா என்று கண்டறிய கீழ் காணும் சில முறைகளை பின்பற்றலாம்.
ஒரு கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும் தேன் தண்ணீரில் கரையாமல் அப்படியே அடியில் சென்றால் அது சுத்தமான தேனாம்.
ஒரு செய்தித்தாளை எடுத்து அதில் ஒரு சொட்டு தேனை விட அது பின்பக்கம் கசியாமல் இருந்தால் அது சுத்தமான தேனாம்.
ஒரு துளி தேனை நாவில் தடவியதும் இனிப்பு சுவை நாவில் நீண்ட நேரம் இருக்க கூடாது மற்றும் நாவில் மஞ்சள் கலந்த எந்த வண்ணமும் தங்க கூடாது
என் அனுபவத்தில் அறிந்த முறை. சர்கரையில் எடுத்து பாகு அல்லது எந்த ஒரு இனிப்புபண்டங்களை ஒரு பாட்டிலில் மூடி வைத்தாலும் அந்த பாட்டிலின் மூடியை சுற்றிலும் எறும்புகள் வந்துவிடும் ஆனால். ஒரு சுத்தமான தேனை அப்படி வைத்தாலும் எறும்புகள் அண்டவே அண்டாது.
0 Comments