Home » » கிழக்கின் மைந்தனுக்கு சர்வதேச குறும் திரைப்பட விழாவில் முதன்மை விருதுகள்

கிழக்கின் மைந்தனுக்கு சர்வதேச குறும் திரைப்பட விழாவில் முதன்மை விருதுகள்

இன்றைய குறும்திரைப்படங்கள் நாளைய பிரமாண்டமான சினிமா உலகில் படிகற்களாகி விட்டன. ஒரு தனிமனிதன் சினிமாவில் கால்த்தடம் பதிப்பதென்பது பல சவால்கள் நிறைந்ததொன்றாகவே அன்றும் இன்றும் காணப்படுகின்றது.

ஆனால் இன்றைய குறும் திரைப்படங்கள் இன்று உலகையே தன் வசப்படுத்தி சினிமாவின் ஒரு நுழைவாயிலாகி விட்டதென்றே கூறலாம். அதற்கு பல கலைஞர்கள் உதாரணங்களாகி விட்டனர் என்பது யாவரும் அறிந்ததே அதற்கு  கலைஞர்களின் முயற்சியும் தொழிநுட்ப சாதனங்களின் முன்னேற்றமுமே காரணம் எனலாம். 


அந்தவகையிலே தான் நம் நாட்டின் திருகோணமலை மண்ணின் படைப்பாக sky Creation நிறுவனத்தின் தயாரிப்பில் அண்மையில் வெளியான 'அடிவானம்' குறும் திரைப்படம் உலக குறும் திரைப்பட வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. விம்பத்தின் 7வது சர்வதேச குறும்திரைப்பட விழாவில் பல நூற்றுக்கணக்கான இந்திய, இலங்கை மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு இடையில் எடுக்கப்பட்ட குறும்திரைப்படங்களோடு கடுமையாக போட்டியிட்டு 2012ம் ஆண்டுக்குரிய முதலாவது சிறந்த குறும்திரைப்படத்திறக்;கான சாதனை விருதுகளையும் [The Best Short Film Award- 2012  Adivaanam  Sri Lanka]     வென்றது.



அக் குறும்திரைப்படத்திலேயே முதன்மை பாத்திரமாக நடித்த தம்பலகமத்தைச் சேர்ந்த  ஐகன் ஹரிஸ் அவர்களுக்கு சிறந்த குழந்தை நடிகர் Best Child Artist  2012 விருதும் கிடைத்தது. இக் குறும் திரைப்படத்தினை தயாரித்து கதை, திரைக்கதை, வசனமமைத்து இயக்கியவர் திருகோணமலை தம்பலகமத்தைச் சேர்ந்த இயக்குநர் யோ.சுஜீதன்ஜவந்தாறுமூலை கிழக்குப்பல்கலைகழகம் - 4ம் வருட கலைகலாச்சாரபீட மாணவன்ஸ ஆவார்.



உலகின் பல பாகங்களிலிருந்து எடுக்கப்பட்டு சர்வதேச ரீதியில் கடுமையான சவால்களை எதிர்கொண்டு போட்டியின் விருது வழங்கும் விழா (விம்பம் சர்வதேச 7வது குறும்திரைப்பட விழா 2012 )லண்டனில் 2011 நவம்பர் 11 ஆம் திகதி மாலை 05.00 முதல் 09.30 வரை ஒழுங்கு செய்யப்பட்டது.



முதல்முறையாக ஒரு இலங்கைத் தமிழன் போட்டியின் முதன்மையான விருதுகளை வென்று முதலிடத்துக்கு  தெரிவாகி இருப்பது நம் நாட்டிற்கு மிகவும் பெருமை சேர்க்கும் விடயமாகும்.  போட்டியின் 2வது பரிசினை இந்தியாவிலிருந்து வெளியான “தமில்” குறும்திரைப்படமும் 3வது பரிசினை பிரான்சிலிருந்து வெளியான “நகல்” குறும்திரைப்படமும   பிடித்தது. 



அத்தோடு இறுதி போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்ட  சிறந்த ஏழு குறும் திரைப்படங்கள் லண்டனில் “சட்டன்”; நகரில் உள்ள “SECOMBE”  ”  திரையரங்கில் திரையிடப்பட்டது.



அவற்றில் அடிவானம்  குறும் திரைப்படம் மக்களது மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது.



(YouTube:- Short Film Adivaanam(Horizon) with English Subtitles)  போட்டியின் நடுவர்களாக தென்னிந்தியாவின்; வழக்குஎண் 18/9 , (2012ம் ஆண்டின் சிறந்த தென்னிந்திய திரைப்படம்) சாமுராய்,காதல் இகல்லூரி ஆகிய  திரைப்படங்களின் இயக்குநரான பாலாஜி சக்திவேல் அவர்களுடன் ஆய்வாளர்,அரங்கியலாளர்,நாடகவிமசகர் Dr.A.ராமசுவாமி உட்பட பலர் போட்டியின் மத்தியஸ்தம் வகித்தனர்.




விருதுவழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த முதன்மை விருந்தினர் இயக்குநர் பாலாஜி சக்திவேல் அவர்கள் அடிவானம் இயக்குநர் யோ.சுஐPதன் அவர்களை பாராட்டியதோடு அவர் மனதிலும் தென்னிந்தியசினிமா உலகிலும் அடிவானம் இயக்குநருக்கும் அதில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்திய nஐகன் ஹரிஸ் அவர்களுக்கும்  இடமுண்டு என பாராட்டியதோடு இயக்குநர் யோ.சுஜிதன் தென்னிந்தியாவில் மிகப் பெரும் இயக்குநராவதற்கு சகல வகையிலும் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் எனவும் அனைவர் முன்னிலையிலும் உறுதியாக கூறினார். 



அத்தோடு அடிவானம் குறும் திரைப்படத்தை பார்த்தவர் மனமும் உருகிவிட எல்லோருடனும் தானும் கண்ணீர் விட்டு அழுததாகவும் கூறினார். அக் கதை இன்றைய சமுகத்திற்கு எப்போதும் அவசியமானது எனவும் அதன் படப்பிடிப்பு பற்றி கூறுகையில் குறுகிய வசதி கொண்ட இன்றைய வாழ்வில் இதற்கென்று பணம் ஒதுக்கி இப்படி ஒரு படம் பண்ணுவது என்பது மிகப் பெரிய சாதனை தான் என பாராட்டினார்.



எந்தவொரு திரைப்பட அனுபவம் இல்லாமல் தன் அறிவுக்கு எட்டியது போல் இப்படி ஒரு சிறப்பான படத்தை எடுத்திருப்பது என்பது சாதாரணமான ஒரு விடயமல்ல என கூறினார்.



இதில் பயன்படுத்தப்படும்  கணமான விடயங்களை தெளிவுபடுத்த சில நுணக்கமான உத்திகளை பயன்படுத்தியிருக்கின்றார் எனவும் “தன் மனதுக்க பிடிச்ச படம் என்னா  அது அடிவானமே..” அதில் நடித்த சிறுவனின் நடிப்பு மிகவும் யதார்த்தமானதாகவும் மெய்சிலிர்க்கவும் வைத்துள்ளது. சிறுவர்களை நடிக்க வைப்பது ரொம்ப கடினமான செயலாகும் அதை சிறப்பாக அவர் நெறிப்படுத்தியுள்ளார்” என அனைவர் முன்னிலையிலும் கூறினார். 
(Youtube  : International Tamil Short film Festival-2012 (Landon) & "அடிவானம்"(Horizon) )



அடிவானம் குறும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றம் படத்தொகுப்பினை சி.தர்சன் (தர்சன் வீடியோ ) அவர்கள்  மிகவும் திறன்பட செய்துள்ளார். அத்துடன் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சிறுவன் ஹரிஸ் அவர்களும் மற்றைய கலைஞர்களும் பின்னணியில் உதவிய னுச.எஸ். சிவச்செல்வன்  அவர்களும் தனது நன்பர்களுமே தன் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தனா.; என அடிவானம் இயக்குநர் தெரிவித்திருந்தார். அவரிற்கு கிடைத்த வெற்றிகள் யாவும் அவருக்கு பக்கபலமாக இருந்து ஆதரவளித்து ஊக்குவித்த பெற்றோரையே சாரும்.


அதுமட்டுமன்றி கடந்த 2012ம் ஆண்டு உயர்கல்வி அமைச்சினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே “கவிதா” , “ஆற்றல்”; நிகழ்வுகள் கொழும்பில் நேத்ரா தொலைக்காட்சியின் ஊடக அனுசரணையில் ஒழுங்கு செய்யப்பட்டது.



இதில் குறும் திரைப்பட பிரிவில் அடிவானம் குறும்திரைப்படம்  முதலிடத்திற்கான விருதினையும் வென்றது.



அடிவானம்; குறும்திரைப்படம் முதல்முதலில் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரிலே திரையிடப்பட்டது. அத்தோடு சுஐதனுடைய 2வது வெளியீடான “மாங்கா” குறும்திரைப்படத்தினுடைய முன்னோட்ட காட்சிகளும்  அவருடைய இசையில் உருவான Music Album Trailer காட்சிகளும் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பையும் பெற்றது.



“மாங்கா” குறும்திரைப்படத்தினுடைய தயாரிப்பு, கதை ,திரைக்கதை, வசனம,இயக்கம்  மற்றும் ;ஒளிப்பதிவு ,ஒலிப்பதிவு படத்தொகுப்பு
, உடை- ஒப்பனை என்பவற்றை இயக்குநர் சுஐதனே செய்து அதில் ஒரு பாத்திரத்தில் நடித்தும் இருக்கின்றார்.



(Youtube  :- Maanga Official Short Film Trailer) 

 


பின்னர்; திருகோணமலையின் மூத்த கலைஞர்களை கௌரவிக்கும் “தமிழ் விழா-2013; நிகழ்வில்” அடிவானம் குறும்திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனாலும் மிகுந்த மனவருத்தமான விடயம் யாதெனில் பல முக்கிய விருதுகளை வென்று பலரது மனங்களில் நின்ற இக் குறும்திரைப்படம் இன்னும் தகுந்த முறையில் வெளியிடப்படவில்லை என்பதே.



அடிவானம் முழுக்க முழுக்க ஒரு கலை சினிமாவாகும். ஏழை மக்களுடைய 


வறுமையினையும், பசியினையும், பொருளாதார நிலையினையும், அதன் எதிர்பார்ப்பினையும் பேசியது. நாட்டில் ஒரு ரூபாயிக்கு கிடைக்கும் மதிப்பு என்னவென்பதையும் சதங்களுக்கு ஏற்ப்பட்ட நிலையும்  ஒரு ரூபாய்க்கு ஏற்படுமா? என “5ரூபாய்க்கு சில்லைறை இல்லை” என கடைக்காரன் சொல்லும் வசனம் சிந்திக்க வைக்கின்றது. அன்று அதிகம் பெறுமதியிலிருந்த சில்லறைகள் எல்லாம் இன்று பிச்சைககாரனின் கைகளில் தானா?  வசதியுள்ளவர்கள் சிறுவர்கள் முன்பு சிறு உணவையேனும் சாப்பிடும் பொழுது ஒரு சிறுவனின் உணர்வுகள் ,ஏக்கங்கள்; என்பன படமாக்கப்பட்டள்ளது. அடிவானம் குறும்திரைப்படம்;  13 நிமிடங்களை மட்டும் உள்ளடக்கியதாகும்.



இப்படத்தில் பிச்சைகாரனாக வரும் பாத்திரம் அமரர்- தில்லையம்பலம்  அவர்கள் இன்று இறைபாதம் அடைந்தாலும் அடிவானத்தில்; உயிர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் இன்றும். அக் கலைஞனுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.



அவர் தொடர்ந்தும்; ஆதரவற்ற, பாதிக்கப்பட்ட, வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேலோங்க செய்வதற்கு அவரால் 2009ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இதயக்கரம் ஊடாக தொடர்ந்தும் உதவி செய்து வருகின்றார். அதுவே தனது வாழ்வில் உண்மையான சந்தோசம் என்றும் மேலும் ஆதரவற்ற கல்வியில் ஆர்வம் உள்ள ஆயிரம் மாணவர்களை இனங்கண்டு உதவும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளார். இந்நிலையினை மேம்படுத்துவதற்காக தன்னை இயக்குநராக பரிணமித்துள்ளதாக கூறினார்.



சிறுவயதிலிருந்து ஓவியம் வரையும் ஆர்வமும் பாடசாலைகளில் விசேட ஓவிய ஆசிரியனாகவும் பின்னர் பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்டார். சிற்பம் இகைவினைப்பொருட்கள் செய்வதிலும் மற்றும் கதை, சிறுகதை, கவிதைகள் எழுதுவதிலும் தேர்ச்சியுடையவராகவும், உள்ளுர் இசைக்குழுக்களில் ஒரு பாடகனாகவும், இசையமைப்பாளனாகவும் (2011-சூரியன் குஆக்கான நிலையகுறியிசை – புலரும் காலைப்பொழுதில்….),புகைப்படக்கலைஞராகவும், படப்பிடிப்பு, படத்தொகுப்பு துறையிலும் பிரவேசித்து இன்று சிறந்த ஒரு இயக்குநராகவும் தன்னை பல்துறை கலைஞனாக பரிணமித்திருக்கின்றார்;.



எனவே அவரின் முயற்சிகள் யாவும் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள். நடிப்பிலும் இசைத்துறையிலும் ஆர்வம் உள்ளவர்கள்  உடன் தொடர்பு கொள்ளுங்கள்.



                            
                                    
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |