மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு இருதயபுரம்,கிழக்கு எல்லை வீதியில் வசிக்கும் துஸ்யந்தன்(36வயது)என்ற ஆசிரியரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸார் தெரிவித்தனர். இவர் தனது அறையில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தபோது அதனை கண்ணுற்ற மனைவி கூக்குரலிட்டபோது அவர் தூக்கில் இருந்து மீட்கப்பட்டு உடனடியாக மட்டக்களப் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதும் இடை நடுவில் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
0 Comments