மட்டக்களப்பு சித்தாண்டி – மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் கேதார கெளரி விரத நிகழ்வுகளை முன்னிட்டு நேற்று பாற்குட பவனி நிகழ்வு வெகுசிறப்பாக இடம்பெற்றது.
ஆலய பரிபாலன சபையினரின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு சித்தாண்டி சித்திரவேலாயுதர் பெருமான் ஆலயத்தில் காலை 8.00 மணியளவில் ஆரம்பித்து, பிரதான வீதியை அடைந்து அங்கிருந்து காளிகோவில் வீதியூடாக ஆலயத்தை அடைந்தது.
ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள திருக்கேதார கெளரி அம்பாள் விக்கிரகத்துக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
0 Comments