சவூதியில் மட்டக்களப்பு நாவிதன்வெளியைச் சேர்ந்த இளைஞன் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை !!!!

Thursday, May 31, 2018


சவூதி அரேபியாவில்  நாவிதன்வெளியை சேர்ந்த 24 வயதுடைய  சசிகுமார் எனும்  இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

இவர் திக்கோடையில் அண்மையில் திருமணம் முடித்து மீண்டும் சவூதிக்கு வேலைக்கு சென்றுள்ளார்

சவூதி அரேபியாவில் ஜீஸான்  எனும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்த அன்று நண்பர்கள் வேலைக்கு சென்றுள்ளனர் .

குறித்த இளைஞர்  அன்றைய தினம் காலையில் தொலைபேசியில் கதைத்து கொண்டிருந்துள்ளார்  குடும்ப தகராறு காரணமாகவே  இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிய வருகிறது

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக  ரியாத்  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள்  வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் . அவர்கள் தனிமையில் இருக்கும் சூழ்நிலைகளில் இப்படியான தவறான முடிவுகளை எடுக்க நேரிடலாம் .

வெளிநாட்டிலுள் வேலை செய்பவர்கள் உங்களது அறையில் தங்குபவர் அல்லது நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.   அவர்களது நடவடிக்கையில் மாற்றங்கள் இருந்தால். அல்லது சோகமாக காணப்பட்டால் அவர்களிடம் பிரச்சனையை கேட்டறிந்து கொள்ளுங்கள்.READ MORE | comments

கனடாவில் திட்டமிட்டு கொல்லப்பட்ட தமிழ் இளைஞன் - பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்


கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞனின் மரணம் தொடர்பில் டொரண்டோ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்காபுரோ பகுதியில் வைத்து 21 வயதான வினோஜன் சுதேசன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் தீவிரமாக இலக்கு வைத்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுதேசனுக்காக காத்திருந்த சந்தேகநபரை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்ததாக கொலை தொடர்பாக புலனாய்வு செய்யும் Andy Singh தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் சுதேசன் மீது பல முறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் எனவும் அந்த இடத்திலேயே சுதேசன் கீழே விழுந்துள்ளார்.
ஸ்காபுரோ Lester B. Pearson கல்லூரிக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் சுதேசன் மீட்கப்பட்டார். பின்னர் அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
ரொரண்டோ மாவட்ட கல்லூரியில் வழங்கப்பட்ட கண்காணிப்பு வீடியோ மூலம், பொலிஸார் சந்தேகநபர் தொடர்பான விபரங்களை பெற்றுள்ளனர். துப்பாக்கி தாங்கிய நபர் ஒருவர் பாடசாலையின் தென் பகுதிக்கு ஓடியுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கறுப்பினத்தவர் எனவும், சுமார் 5 அடி 10 அங்குலமுடையவர் எனவும், அவர் காக்கி நிற காற்சட்டை அணிந்து வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார் எனவும் புலனாய்வாளர் Andy Singh குறிப்பிட்டுள்ளார்.
கொலை இடம்பெறுவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னர் கறுப்பு நிற கார் ஒன்று கல்லூரியின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதியிலேயே நீண்ட நேரமாக கார் வட்டமிட்டுள்ளது. எனினும் சம்பவம் இடம்பெறும் போது அந்த காரினை குறித்த பகுதியில் காணவில்லை என அவர் கூறியுள்ளார்.
சுதேசன் இலக்கு வைக்கப்பட்டார் என பொலிஸார் நம்புகின்ற போதிலும், அது சந்தேகநபரின் தவறான அடையாளமாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
“சுதேசன் யாருடனும் பிரச்சினைக்கு செல்லாத ஒரு நல்ல மாணவர். ஏன் இப்படி நடந்ததென தெரியவில்லை. நான் நினைக்கின்றேன் அவரது கையடக்க தொலைபேசியை திருடுவதற்காகவும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கலாம். எனினும் விசாரணைகள் முடியும் வரை உண்மையான காரணம் தெரியவில்லை.. என சுதேசனின் உறவினர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்


அடுத்த வருடத்தில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களுடன் கூடிய தகவல்கள் அடங்கிய சுற்றுநிருபம் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விண்ணப்பங்களையும் சுற்றுநிருபத்தையும் கல்வி அமைச்சின் www.moe.gov.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடலாம். -(3)
READ MORE | comments

யாழில் பதட்டம் பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு பொலிஸார் தீவிர விசாரணை


யாழ்ப்பாணம், புல்லுக்குளத்துக்கு அருகில் பாடசாலை மாணவி ஒருவரின் பாடசாலை சீருடை மற்றும் கழுத்தப்பட்டி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது என்று யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.மாணவி ஒருவரது சீருடை, கழுத்து பட்டி, செருப்பு, உள்ளாடை போன்றன யாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகாமையில் இன்று காலை மீட்கப்பட்டன.இதனை தொடர்ந்து அந்த பகுதியில் சற்று பதட்ட நிலை காணப்பட்டது.
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி ஒன்றில் தமது பாடசாலை மாணவிகளும் பங்கேற்றதாகவும் அதற்காக மாணவிகள் அங்கு தங்கியிருந்ததாகவும் அதிபர் குறிப்பிட்டார். அந்தவேளையில் தவறவிடப்பட்டதாக இந்த சீருடை அடங்கிய பொதி இருக்கலாம் எனவும் அதிபர் சந்தேகம் வெளியிட்டார்.இந்த நிலையில்இந்த சம்பவம் குறித்து யாழ் பொலிஸ் நிலைய தடயவியல்பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .(15)3-15
READ MORE | comments

பௌத்த பிக்குகளை குற்றவாளிக் கூண்டில் இருந்து இறக்கி விட்ட நீதிபதி இளஞ்செழியன்!

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்ட இரண்டு பௌத்த துறவிகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.குறித்த இரண்டு பௌத்த துறவிகளுக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கிற்காக நீதிமன்றுக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட பௌத்த துறவிகள் அவர்களின் வழக்கு விசாரணைக்கு வந்த போது, குற்றவாளிக் கூண்டில் ஏறியுள்ளனர், எனினும் அவ்விருவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்தார். மதத்தலைவர்கள் யாராகவிருந்தாலும், அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது சாலச் சிறந்ததும் அல்ல, அது மரபும் அல்ல என்ற அடிப்படையில் நீதிபதி அவர்களை குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்கச் செய்துள்ளார்.
எனினும், இவர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் முறையாக நடைபெறும் எனவும், அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்குரிய நடவடிக்கைகள் நீதிமன்றத்தினால் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
READ MORE | comments

எட்டு மாதக் குழந்தை வெள்ளை வானில் மர்ம கும்பலால் கடத்தல்!

வவுனியாவில் வெள்ளை வேனில் 8 மாத குழந்தை ஒன்று கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் பிள்ளையை கடத்தியுள்ளது. வவுனியா குட்செட் வீதி ஒழுங்கையில் உள்ள வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது
தாயின் அரவணைப்பிலிருந்த 8 மாத ஆண் குழந்தையான வானிஷன் ஆறு பேர் கொண்ட குழுவினரால் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த குழந்தையின் தந்தை வெளிநாடு ஒன்றில் வசித்து வருகிறார். தாய்க்கும் தந்தைக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் இருப்பதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தந்தை குழந்தையை கடத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார் என குழந்தையின் தாயார் குறிப்பிட்டிருந்தார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தேடுதல் நடவடிக்கைகளையும் விரைவாக மேற்கொண்டு வருகின்றனர்.
READ MORE | comments

மண்ணெண்ணை விலையை குறைப்பதற்கு ஐ.தே.க யோசனை


மண்ணெண்ணை விலையை குறைப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதுடன் அதன்போது அந்த விடயம் தொடர்பாக நிதி அமைச்சுக்கு தெளிவுப்படுத்தி விலையை குறைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மண்ணெண்ணை விலையேற்றத்தால் மண்ணெண்ணையை அதிகமாக பயன்படுத்தும் மீனவர்கள் , தோட்டப்புற மக்கள் உள்ளிட்ட தரப்பினரின் பாதிப்புக்களை கருத்திற்கொண்டே விலையை குறைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. -(3)
READ MORE | comments

எண்ணெய், எரிவாயு வளங்கள் குறித்த ஆய்வு - அமெரிக்காவுடன ஒப்பந்தம்!

இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்கு, அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கை அரசு சார்பாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளார். இந்நிகழ்வு பெற்றோலிய வளங்கள்அபிவிருத்தி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இவ் ஒப்பந்தமானது உலகின் மிகப்பெரிய எரிபொருள் சேவை வழங்கும் நிறுவனமான ஸ்க்லம்பர் நிறுவனத்தின் உபநிறுவனமான ஈஸ்டன் எக்கோ டி.எப்.சீசீ நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, 'இந்த உடன்படிக்கையானது எதிர்காலத்தில் எமது நாட்டுக்கு அதிக நன்மையை ஏற்படுத்தி கொடுக்கும். இந்த திட்டத்தை மேற்கொள்ள நீண்டகாலம் தேவைப்பட்டது. இன்று சாத்தியமானதால் எமக்கு இது மிகப்பெரிய வெற்றியாகும். இந்த ஒப்பந்தம் பத்து வருடங்களுக்கு உட்பட்டதாகும். பல பேச்சுவார்த்தைகளின் பின்பே ஒப்பந்தம் செய்ய தீர்மானித்தோம்.
இந்த ஒப்பந்தத்தின் மூலமாக நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். இந்நிறுவனம் ஆய்வுப் பணிகளுக்காக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட எதிர் பார்த்துள்ளனர். ஆய்வுப்பணிகள் மூலம் பெறப்படும் அனைத்து தரவுகளும் அரசுக்கே சொந்தமாகும். எமது அமைச்சும் அரசும் ஒவ்வொரு தகவல்களுக்கும் வருமானத்தை பெற்றுக்கொள்ளும். என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
READ MORE | comments

'20' ஐ தோற்டிக்க கூட்டு எதிர்க்கட்சி கங்கணம்!

ஜேவிபியினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிக்க கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற, கூட்டு எதிர்க்கட்சியின், கட்சி தலைவர்களின் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் - 2018

Wednesday, May 30, 2018

குருக்கள்மடம் ஸ்ரீ கிருஸ்ணன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் - 2018READ MORE | comments

சீரற்ற காலநிலையால் உயிரிழப்பு 26 ஆக உயர்வு : ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு


நாட்டில் சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட இயற்கை இடர்களில் சிக்கி நேற்றுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடர்களில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, 45 ஆயிரத்து 680 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்ட 17 ஆயிரத்து 976 குடும்பங்களைச் சேர்ந்த 70 ஆயிரத்து 376 பேர் 265 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இதுவரையில் 121 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 5 ஆயிரத்து 205 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
READ MORE | comments

தற்கொலைக்கு முயற்சித்த தாய்! காப்பாற்றுவதற்காக மகன் செய்த காரியம்


திருகோணமலை - காந்திநகர் பகுதியிலுள்ள பெண்ணொருவர் தனது கணவர் மது அருந்திவிட்டு தனக்கு அநியாயம் செய்வதாக கூறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது அவர் தனது சிறிய மகனால் காப்பாற்றப்பட்டு இன்று (30) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை, காந்திநகர் பகுதியிலுள்ள நகராட்சி மன்ற விடுதியில் வசித்து வரும் கே.நாகம்மா (51 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த பெண்ணின் கணவரான கணேஷபிள்ளை ஒவ்வொரு நாளும் நகராட்சி மன்றத்திற்கு வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து சண்டைபோடுவதாகவும், இதனை தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் தெரியவருகின்றது.
இதன்போது சம்பவத்தை கண்ட மகன் தாய் தூக்கில் தொங்கிய கயிற்றை வெட்டி காப்பாற்றியுள்ளதுடன், தற்கொலை செய்ய முயற்சித்த பெண் தற்பொழுது திருகோணமலை விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
READ MORE | comments

கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்து விட்டது’ என்ற கோசத்துடன் நீதிபதி மா.இளஞ்செழியன் திருமலையில் வரவேற்கப்பட்டார்


யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடம் மாற்றம் பெற்றுச் செல்லும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.இதே வேளை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலை மேல் நீதிமன்றத்தை சற்று முன்னர் வந்தடைந்துள்ளார்.இதன்போது ‘கிழக்கில் இன்று மீண்டும் சூரியன் உதித்து விட்டது’ என்ற கோசத்துடன் நீதிபதி வரவேற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து திருகோணமலை மேல் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வருடாந்த இடமாற்றத்தின் கீ்ழ் மூன்று ஆண்டுகள் ஒரே மாகாண மேல் நீதிமன்ற அமர்வில் கடமையாற்றியதன் அடிப்படையில் நாடு முழுவதும் மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படுகிறது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் பெற்றுள்ளார்.யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக மா. இளஞ்செழியன் இருந்த காலப்பகுதியில் பல வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன்இ குற்றவாளிகளுக்கு சரியான தண்டனையும் வழங்கியிருந்தார்.
இதனால் வடக்கில் மட்டுமல்லாது தெற்கிலும் நீதிபதி இளஞ்செழியனின் புகழ் கொடிகட்டிப் பறந்தது.இந்த நிலையில், தற்போது தமிழர் தலைநகரம் என்று அழைக்கப்படும் திருகோணமலையில் தமது பணிகளை தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(15)
READ MORE | comments

பணம் பெற்ற 118 எம்.பிக்களின் விபரங்களை மறைக்க வேண்டிய அவசியமில்லை! - ஒஸ்டின் பெர்னாண்டோ

அர்ஜூன் அலோசியசிடம் பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் அலோசியசிடம் பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மறைத்துக் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்தப் பட்டியலை நான் மறைத்து வைத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியதனை ஊடகங்களில் பார்த்தேன்.இது குறித்து தயாசிறி ஜயசேகரவிடம் நான் வினவினேன்.
இவ்வாறான ஓர் பட்டியல் ஜனாதிபதி செயலகத்தில் இருப்பதாக கூறும் வகையில் தாம் கருத்து வெளியிட்டதாக தயாசிறி பதிலளித்தார். இவ்வாறான ஓர் பட்டியல் பற்றி எனக்குத் தெரியாது. ஜனாதிபதி செலயகத்திலிருந்து விலகிச் சென்றவர்களும் இருக்கின்றார்கள். இந்த பட்டியல் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓர் உரையாடலில் இருக்கக் கூடும். இந்த விடயம் பற்றிய உண்மைகளை கண்டறிய வேண்டும். உண்மைகளை கண்டறிந்ததன் பின்னர் அது குறித்து ஊடகங்களின் மூலம் தெளிவூட்டப்படும் என ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
READ MORE | comments

ஜூலையில் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்!

20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­களை எதிர்­வ­ரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர் சேவைக்­குள் இணைத்­துக்­ கொள்­ளும் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் என தேசிய கொள்­கை­கள் மற்­றும் பொரு­ளா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.
ஏப்­ரல் மாதம் 16ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரை 25 மாவட்­டங்­களை உள்­ள­டக்­கும் வகை­யில் நேர்­மு­கப் பரீட்­சை­கள் நடை­பெற்­றன. அதில் சுமார் 57 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­கள் சமு­க­ம­ளித்­த­னர். இதன் இறுதி பெறு­பே­று­கள் அமைச்­சுக்குக் கிடைத்­தன. கோரப்­பட்ட தகு­தி­க­ளின் அடிப்­ப­டை­யில் 20 ஆயி­ரம் பட்­ட­தா­ரி­கள் அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர் சேவைக்­குள் இணைத்­துக்­ கொள்­ளப்­ப­ட­வுள்­ள­னர் என்று அமைச்­சின் மேல­திக செய­லா­ளர் அசங்க தயா­ரத்ன கூறி­னார்.
READ MORE | comments

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் காலவரை இன்றி மூடப்பட்டுள்ளதாக பீடாதிபதி தெரிவித்தார்


கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மறு அறிவித்தல் வரும் வரைக்கும் மூடப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் திருமதி  ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்தார்


கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட பகிடிவதை வதை காரணமாக கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் மூடப்பட்டுள்ளதாக  பீடாதிபதி தெரிவித்தார் . 

மருத்துவ பீட மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக ஐந்து மாணவர்கள் தற்காலியமாக கல்வி நடவடிக்கையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .

குறித்த சம்பவம் தொடர்பாக  மருத்துவ பீட மாணவர்களுக்கு , மருத்துவ பீட பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் இடையில் (28) பிற்பகல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்  முடிவுகள் எடுக்கப்படாத நிலையில்  தொடர்ந்து மறு அறிவித்தல் வரும் வரைக்கும் மூடப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி  வைத்தியர் திருமதி  ஏஞ்சலா அருள்பிரகாசம் தெரிவித்தார். 

இடம்பெற்ற கலந்துரையாடலின் போது  பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களினால்  முன்வைக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மாணவர்களினால் முன்னெடுக்கப்படுகின்ற பகிடிவதை வதை தொடர்பான செயல்  திட்ட  அறிக்கைகள் உத்தரவாதத்துடன்  சமர்பிக்கும் பட்சத்தில் அதனை பரிசீலனை செய்து  மீண்டும் மருத்துவ பீடம் திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பீடாதிபதி  தெரிவித்தார். 

READ MORE | comments

மின்மாற்றி தாக்கத்தினால் பற்றி எரிந்த இலத்திரணியல் உபகரணங்கள் -காலை இருதயபுரத்தில் சோகம்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மின்மாற்றியில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக வீடுகளில் உள்ள மின்சார பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும் இருவர் மின்சார தாக்குதலுக்கு உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை இருயதபுரம்04ஆம் குறுக்கில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாகவே இந்த நிலையேற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக வீடுகளில் இருந்த இலத்திரணியல் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதுடன் இருவர் மின்தாக்கத்திற்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலமை காரணமாக குறித்த பகுதியில் பதற்ற நிலையேற்பட்டதுடன் குறித்த பகுதிக்கு வந்த மின்சாரசபை ஊழியர்கள் மற்றும் பொறியியலாளர்கள் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தன் காரணமாக அங்கு பதற்ற நிலமையேற்பட்டதுடன் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இன்று காலை மின்மாற்றியில் ஏற்பட்ட பாரிய சத்ததினை தொடர்ந்து வீடுகளில் இருந்த மின்விசிறிகள் வெடித்து சிதறியுள்ளதுடன் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளனர்.

தற்போது அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதன் காரணமாக என்னன்ன இலத்திரணியில் பொருட்கள் சேதமடைந்துள்ளன என்பது தொடர்பில் அறியமுடியாத நிலையுள்ளதாகவும் ஆனால் இலத்திரனியல் பொருட்களில் இருந்து எரிந்த வாசைன வருவதன் காரணமாக சேதமடைந்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த மின்தாக்கம் காரணமாக இருதயபுரம் 04,05,06ஆம் குறுக்கு வீதிகளிலும இருதயபுரம் பிரதான வீதிகளில் உள்ள வீடுகள் வர்த்தக நிலையங்களிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிக்குவந்த இலங்கை மின்சாரசபையின் பொறியியலாளர் அஜித்துகுமார்,மட்டக்களப்பு பிராந்திய மின் அத்;தியட்சகர் பிரசாந்தன் ஆகியோர் மின்மாற்றி தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டதுடன் மின்மாற்றியினை மீள இயங்க செய்து மின்விநியோகத்தினை சீர்செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

அத்துடன் குறித்த மின்மாற்றி கீழ் நோக்கி இருப்பதனால் குறித்த மின்மாற்றியுள்ள பகுதி மக்கள் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளவதாக சுட்டிக்காட்டப்பட்டதை தொடர்ந்து குறித்த மின்மாற்றியை உயரமாக பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

READ MORE | comments

இலங்கை இந்து சம்மேளனம் தமிழ் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு கடும் எச்சரிக்கையில் அறிக்கை


சிவசேனையின் தலைவர், மறவன்புலவு க.சச்சிதானந்தனுக்கெதிராக கருத்து வெளியிடும் அனைத்து அரசியல் பிரமுகர்களும் கட்சி வேறுபாடின்றி எதிர்வரும் தேர்தல்களில் தோற்கடிக்கப்படுவர் என்று இலங்கை இந்து சம்மேளனம் கடுமையாக எச்சரித்துள்ளது.
மேலும் இவ்வாறான அரசியல்வாதிகளைத் தோற்கடிக்க இந்து மத வாக்கு வங்கி பயன்படுத்தப்படும் என்று அதற்காக பயிற்சிபெற்ற தொண்டர்கள் களமிறக்கப்படுவர் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பில் இலங்கை இந்து சம்மேளனம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகின்றோம்.
கடந்த சில தினங்களுக்கு முன் யாழ் மண்ணில் மறவன்புலவு க.சச்சிதானந்தந்தின் தலைமையில் நடைபெற்ற பசுவதைக்கு எதிரான உண்ணாவிரதமும் அதனைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள கடும் எதிர்மறையான விமர்சனக்களம் தொடர்பாகவும் இந்து சம்மேளனத்தின் தேசிய சபை கூடி ஆராய்ந்து பின்வரும் கருத்துக்களை ஆழமாக பதிவுசெய்கின்றது.

இலங்கை வரலாறு முழுவம் இந்துக்களும் பௌத்தர்களும் தத்தமது உண்மையான பாரம்பரிய வரலாற்று மரபுவழிவந்த சுவடுகளையும் பெருமைகளையும் பதிவுசெய்து வந்துள்ளனர். அந்த வகையில் பௌத்தர்கள் இலங்கையை பௌத்த பூமியென்றும் இந்துக்கள் இலங்கையை சிவபூமியென்றும் தங்களுக்கே உரிய ஆதாரங்களுடன் நிறுவி வந்துள்ளனர். எனினும் இந்த நாட்டில் மற்றைய மதத்தினரும் இந்த நாட்டின் மரபுவழிவந்த கலாச்சாரங்களை அனுசரித்து தமது சமயங்களையும் சம்பிரதாயங்களையும் அனுஷ்டிக்கவோ பின்பற்றவோ பூரண சுதந்திரம் உண்டு.

அந்த வகையில் மறவன்புலவு க.சச்சிதானந்தனின் ‘பசுக்களை பாதுகாப்போம்’, ‘இலங்கை மண் பௌத்த, சைவ புண்ணிய பூமி’ என்ற கோசங்கள் இலங்கையானது மற்றைய சமயத்தவர்களுக்கானது அல்ல என்ற பொருள்பட கூறப்பட்டது அல்ல. இந்த மண்ணில் இரண்டாயிரம் வருடங்கள் பழமையான இருபெரும் கீழைத்தேய கலாச்சாரங்கள் உண்டு. அவை பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மேற்குலக நாடுகளாலும் பல்வேறு உளவு அமைப்புக்களாலும் மோதவிடப்பட்டு அழிவுக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் நாம் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். ‘இந்த நாட்டின் கலாச்சாரத்தை அனுசரித்து வாழ விருப்பமில்லாதவர்கள் எமது நாட்டைவிட்டு வெளியேறலாம்’ என்று ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடின் அவர்களும் இஸ்ரேல் பிரதமர் பென்ஞமின் நெடன்யாஹு அவர்களும் கூறியபோது மொத்த உலகமும் வாய்மூடி மௌனியாக இருந்தது ஏன்? காரணம் உண்மைகள் என்றுமே உண்மைகளாகத்தான்தொடரும்..

அந்தவகையில் சச்சிதானந்தன் அவர்களுடைய கருத்துக்கள் ஒரு சமுதாய பண்பாட்டு கலாச்சாரத்தின் அக்கறையுடன் தொடர்புபட்டது. அவரது கருத்துக்களை கண்ணியமாகவும் கருத்தியல் ரீதியாகவும் அனுகுவதைவிடுத்து கடும் அச்சுறுத்தும் வகையிலான விமர்சனங்களை சில தமிழ் அரசியல்வாதிகள் அடங்களாக வெவ்வேறு தனிநபர்களும் அமைப்புக்களும் வெளியிட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது. எனவே நாம் பின்வரும் தீர்மானங்களை எமது உயர்பீடத்தின் அனுமதியுடன் நிறைவேற்றி வெளியிடுகின்றோம்.

தீர்மானம் -01

ஆறுமுகநாவலரின் அடிச்சுவட்டில் யாழ்பாண இந்துக்களின் அடையாளமாகவும் ஆன்மீகப் போராளியாகவும் உருவெடுத்துவரும் மறவன்புலவு க.சச்சிதானந்தத்தின் கொள்கைகளுக்கு ஆதரவு வழங்குதல்.

தீர்மானம் -02

வடக்கில் மட்டும் எமது அமைப்பைச்சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற தன்னார்வதொண்டர்கள் இதுவரை எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாதவர்களாகவுள்ளனர். மறவன் புலவு க.சச்சிதானந்திற்கு எதிராக எந்தெந்த கட்சிகளைச்சேர்ந்த அரசியல் வாதிகள் பேசிவருகின்றனரோ அவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு அவர்கள் ஒட்டுமொத்த இந்துக்களிற்கும் எதிரானவர்களாகக் கருதி அவர்களுக்கெதிராக எதிர்வரும் அனைத்துத் தேர்தல்களிலும் அவர்களைத் தோற்கடித்து இந்து வாக்குவங்கியின் சக்தியை வெளிப்படுத்துவதென்றும் அதற்கு எமது பயிற்சிபெற்ற தொண்டர்களை பயன்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தீர்மானம்-03

மறவன் புலவு க.சச்சிதானந்தத்திற்கு எதிரான மிகமோசமாகவும் நாகரீகத்திற்கு ஒவ்வாத வகையிலும் விமர்சனங்களை வெளியிடும் தனிநபர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு அவர்களது பின்னணி பற்றி ஆராயுமாறு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவிற்கும் நாசகார செயற்பாடுகள் தடுப்பு பிரிவிற்கும் உத்தியோகபூர்வமாக வேண்டுகோள் விடுப்பது என்றும் தீர்மானிக்கப்படுகின்றது.

தீர்மானம் -04

மறவன் புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கோ அவர் சார்ந்தவர்களுக்கோ ஏதேனும் தீங்கிழைக்கப்படுமானால் அவ்வாறானதொரு விடயத்திற்கு தூண்டியவர்களாக அல்லது அமைதியான சமூகச்சூழலில் நாசகார சக்திகளை தூண்டிவிட்டவர்களாகவோ மற்றும் தேவையற்ற வகையில் வன்முறையான சொற்களை பயன்படுத்தியவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டு சந்தேக வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டு வழக்கு பதியப்படும் என்பதுவும் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டு இவற்றை அமுல்படுத்துவதற்கு இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் அவர்களுக்கு முழுமையான அதிகாரத்தை தேசிய செயற்குழு வழங்குகின்றது.

தேசிய அமைப்பாளர், கௌரவ.பொன் சந்திரபோஸ்.

தேசிய ஆலோசகர், கௌரவ .இராசையா செல்லையா

பொதுச்செயலாளர், கௌரவ.எஸ்.பாலசுப்ரமணியம்

தலைவர், கௌரவ.நாரா.அருண்காந்த்

ஊடகப் பிரிவு, இந்து சம்மேளனம், இலங்கை.

என்று மேற்படி இலங்கை இந்து சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)
READ MORE | comments

மலையகத்தில் பல பிரதேசங்களில் கடும் காற்று வீசும் : அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு!

Tuesday, May 29, 2018


எதிர்வரும் 2 நாட்களுக்கு மலையகத்தில் பல பிரதேசங்களில் கடும் காற்றுடன் கூடிய கால நிலை நிலவுமென வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் காற்று வீசும் போது மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அந்த பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -(3)
READ MORE | comments

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து !!

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த கார் ஒன்று களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்கு உட்பட்ட குருக்கள்மடத்தில் மின்கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. எவ்வித உயிர் சேதங்களும் இல்லை. மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றர்.
READ MORE | comments

மதுபாதையில் தாயும் மகளையும் இடித்து தள்ளிய சிறைச்சாலை உத்தியோகத்தர்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னஊறணியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது விபத்தினை ஏற்படுத்திவிட்டு தப்பிச்செல்ல முயன்ற வானை மக்கள் மடக்கிப்பிடித்த வேளையில் அங்கு பதற்ற நிலையேற்பட்டது.குறித்த வான் சாரதி சிறைச்சாலை உத்தியோகத்தராக கடமையாற்றுவதாகவும் குறித்த நேரம் மதுபோதையில் இருந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.

தனியார் வகுப்புக்கு மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றுகொண்டிருந்த தாயும் மகளையும் வான் ஒன்று மோதி தள்ளியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த தாயும் மகளும் அங்கிருந்தவர்களினால் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விபத்தினை ஏற்படுத்திய வான் குறித்த பகுதியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற நிலையில் அப்பகுதி மக்களினால் குறித்த வான் துரத்தி பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நீண்ட நேரத்திற்கு பின்னர் வந்தே சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்தனர்.

READ MORE | comments

வற்றாப்பளைக்கு சென்ற பக்தர்களை வழிமறித்து தாக்கி கொள்ளை இருவர் மடக்கிப் பிடிப்புவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கலிற்கு நேற்று மாலை சென்ற பக்தர்களின் வாகனத்தை வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வழிமறித்த பத்துப்பேர் கொண்ட கொள்ளையர்கள் வாகனத்திலிருந்தவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு பெண்கள் அணிந்திருந்த தாலிக்கொடி, சங்கிலி உட்பட சுமார் 20 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
இதனை அவதானித்த தருமபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் துணிகரமாக கொள்ளையர்களை விரட்டிச் சென்று, அவர்களுடன் கடுமையாக போராடி இரண்டு கொள்ளையர்களை மடக்கிப்பிடித்தனர். ஏனையவர்கள் தப்பியோடி விட்டனர்.பிடிபட்ட கொள்ளையர்களின் இரு மோட்டார்சைக்கிள்கைளயும் கைப்பற்றிய இளைஞர்கள் அவற்றையும் தர்மபுரம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழாவிற்கு கொடிகாமத்தில் இருந்து 02 ஆண்கள், 05 பெண்கள், 02 சிறுவர்கள் என மொத்தம் 09 பேர் மகேந்திரா பிக்கப் வாகனத்தில் பரந்தன்-முல்லைத்தீவு வீதி ஊடாக வற்றாப்பளை ஆலயம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக பயங்கர ஆயுதங்களுடன் நின்ற கொள்ளையர்கள் இவர்களை வழிமறித்து, சரமாரியாக தாக்கத் தொடங்கினார்கள். திடீர் தாக்குதலால் வாகனத்தில் இருந்தவர்கள் நிலைகுலைந்தார்கள். வாகனமும் சேதமாக்கப்பட்டது.
இதையடுத்து பெண்கள் அணிந்திருந்த 20 பவுண் நிறையுடைய தாலிக்கொடி, சங்கிலி உள்ளிட்ட நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பியோடினர். பக்தர்களின் வாகனம் தம்மை பின்தொடராதிருக்க, வாகனத்தின் திறப்பையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
சுண்டிக்குளம், கட்டைக்காடு பக்கமாக கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். கொள்ளையர்களின் செயற்பாட்டால் அச்சமடைந்து வாகனத்தில் இருந்தவர்கள் பெரிதாக கத்தி சத்தமிட்டனர். அவர்களின் அவலக்குரலை கேட்டு, தர்மபுர பகுதி இளைஞர்கள் அந்த பகுதியில் ஒன்று கூடினர். விடயத்தை அறிந்து, தமது மோட்டார்சைக்கிள்களில் கொள்ளையர்களை விரட்டி சென்றனர். இதன்போது கொள்ளையர்களிற்கும் இளைஞர்களிற்குமிடையில் நடுவீதியில் பயங்கர மோதல் நடந்தது.
இச் சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் தர்மபுரம் பகுதி இளைஞர்களும் அப்பகுதி பிரதேசசபை உறுப்பினர் ஜீவராசா ஆகியோரும் இணைந்து குறித்த குழுவினரை துரத்திச் சென்று சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் இரண்டு பேரையும் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இளைஞர்களின் துணிச்சலான செயற்பாட்டை காவல்துறையினர் பாராட்டினார்கள்.(15)
READ MORE | comments

மாலை 4 மணிக்கு பின் ரயில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 48 மணி நேரத்திற்கு தொடரும்!


சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இன்று மாலை 4 மணி முதல் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இன்று மாலை 4 மணி முதல் 48 மணி நேரத்திற்கு இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த போராட்டம் தொடருமாக இருந்தால் ரயில் சேவைகள் ஸ்தம்பிதமடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)
READ MORE | comments

மட்டக்களப்பின் செங்கலடி பகுதியில் இருதமிழ் பெண்கள் ஒரே நாளில் தற்கொலை ! பெற்றோரின் கண்டிப்பு காரணமா?

Monday, May 28, 2018

மட்டக்களப்பின்  செங்கலடி பகுதியில் இருதமிழ் பெண்கள் ஒரே நாளில் தற்கொலை !

#அதிகரிக்கும் #தற்கொலைகள்.

மட்டக்களப்பு மாவட்ட, ஏறாவூர், கரடியனாறு ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இரு தற்கொலை சம்பவங்கள்.

குமாரவேலியார் கிராமம், செங்கலடியை சேர்ந்த "கஜேந்திரன் நிஸாந்தினி "என்ற 19 வயதுடைய யுவதி, தாயின் கண்டிப்பை பொறுத்துக்கொள்ளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவமும்,

கனித்தீவு, இலுப்படிச்சேனை, பங்குடாவெளியை சேர்ந்த "சௌந்தர்ராஜன் வினோதினி "என்ற 19 வயது யுவதி,

 தான் விரும்பியிருந்த காதலனின் பெற்றோரிடம், தன்னைப்பற்றி பிறர் மோஷமாக கதை சொல்லிக்கொடுப்பதால், தன்னோடு பேசுவதை அவர் நிறுத்தியதால் மனஉளைச்சலுக்குள்ளாகி "அலரி விதை "உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் இன்று பதிவாகியுள்ளது.
READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |