Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தற்கொலைக்கு முயற்சித்த தாய்! காப்பாற்றுவதற்காக மகன் செய்த காரியம்


திருகோணமலை - காந்திநகர் பகுதியிலுள்ள பெண்ணொருவர் தனது கணவர் மது அருந்திவிட்டு தனக்கு அநியாயம் செய்வதாக கூறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதன்போது அவர் தனது சிறிய மகனால் காப்பாற்றப்பட்டு இன்று (30) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை, காந்திநகர் பகுதியிலுள்ள நகராட்சி மன்ற விடுதியில் வசித்து வரும் கே.நாகம்மா (51 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த பெண்ணின் கணவரான கணேஷபிள்ளை ஒவ்வொரு நாளும் நகராட்சி மன்றத்திற்கு வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து சண்டைபோடுவதாகவும், இதனை தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் தெரியவருகின்றது.
இதன்போது சம்பவத்தை கண்ட மகன் தாய் தூக்கில் தொங்கிய கயிற்றை வெட்டி காப்பாற்றியுள்ளதுடன், தற்கொலை செய்ய முயற்சித்த பெண் தற்பொழுது திருகோணமலை விபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments