Advertisement

Responsive Advertisement

சீரற்ற காலநிலையால் உயிரிழப்பு 26 ஆக உயர்வு : ஒன்றரை இலட்சம் பேர் பாதிப்பு


நாட்டில் சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட இயற்கை இடர்களில் சிக்கி நேற்றுவரையில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இடர்களில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, 45 ஆயிரத்து 680 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்ட 17 ஆயிரத்து 976 குடும்பங்களைச் சேர்ந்த 70 ஆயிரத்து 376 பேர் 265 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இதுவரையில் 121 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 5 ஆயிரத்து 205 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments