Advertisement

Responsive Advertisement

சவூதியில் மட்டக்களப்பு நாவிதன்வெளியைச் சேர்ந்த இளைஞன் குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை !!!!


சவூதி அரேபியாவில்  நாவிதன்வெளியை சேர்ந்த 24 வயதுடைய  சசிகுமார் எனும்  இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .

இவர் திக்கோடையில் அண்மையில் திருமணம் முடித்து மீண்டும் சவூதிக்கு வேலைக்கு சென்றுள்ளார்

சவூதி அரேபியாவில் ஜீஸான்  எனும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்த அன்று நண்பர்கள் வேலைக்கு சென்றுள்ளனர் .

குறித்த இளைஞர்  அன்றைய தினம் காலையில் தொலைபேசியில் கதைத்து கொண்டிருந்துள்ளார்  குடும்ப தகராறு காரணமாகவே  இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிய வருகிறது

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக  ரியாத்  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள்  வெளிநாடுகளில் வேலை செய்பவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் . அவர்கள் தனிமையில் இருக்கும் சூழ்நிலைகளில் இப்படியான தவறான முடிவுகளை எடுக்க நேரிடலாம் .

வெளிநாட்டிலுள் வேலை செய்பவர்கள் உங்களது அறையில் தங்குபவர் அல்லது நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.   அவர்களது நடவடிக்கையில் மாற்றங்கள் இருந்தால். அல்லது சோகமாக காணப்பட்டால் அவர்களிடம் பிரச்சனையை கேட்டறிந்து கொள்ளுங்கள்.







Post a Comment

0 Comments