அர்ஜூன் அலோசியசிடம் பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய விபரங்களை மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
|
அர்ஜூன் அலோசியசிடம் பணம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மறைத்துக் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இந்தப் பட்டியலை நான் மறைத்து வைத்திருப்பதாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியதனை ஊடகங்களில் பார்த்தேன்.இது குறித்து தயாசிறி ஜயசேகரவிடம் நான் வினவினேன்.
இவ்வாறான ஓர் பட்டியல் ஜனாதிபதி செயலகத்தில் இருப்பதாக கூறும் வகையில் தாம் கருத்து வெளியிட்டதாக தயாசிறி பதிலளித்தார். இவ்வாறான ஓர் பட்டியல் பற்றி எனக்குத் தெரியாது. ஜனாதிபதி செலயகத்திலிருந்து விலகிச் சென்றவர்களும் இருக்கின்றார்கள். இந்த பட்டியல் ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஓர் உரையாடலில் இருக்கக் கூடும். இந்த விடயம் பற்றிய உண்மைகளை கண்டறிய வேண்டும். உண்மைகளை கண்டறிந்ததன் பின்னர் அது குறித்து ஊடகங்களின் மூலம் தெளிவூட்டப்படும் என ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
|
0 Comments