20 ஆயிரம் பட்டதாரிகளை எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி முதல் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது.
|
ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரை 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றன. அதில் சுமார் 57 ஆயிரம் பட்டதாரிகள் சமுகமளித்தனர். இதன் இறுதி பெறுபேறுகள் அமைச்சுக்குக் கிடைத்தன. கோரப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் 20 ஆயிரம் பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று அமைச்சின் மேலதிக செயலாளர் அசங்க தயாரத்ன கூறினார்.
|
0 Comments