Home » » வற்றாப்பளைக்கு சென்ற பக்தர்களை வழிமறித்து தாக்கி கொள்ளை இருவர் மடக்கிப் பிடிப்பு

வற்றாப்பளைக்கு சென்ற பக்தர்களை வழிமறித்து தாக்கி கொள்ளை இருவர் மடக்கிப் பிடிப்பு



வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கலிற்கு நேற்று மாலை சென்ற பக்தர்களின் வாகனத்தை வாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வழிமறித்த பத்துப்பேர் கொண்ட கொள்ளையர்கள் வாகனத்திலிருந்தவர்களை சரமாரியாக தாக்கிவிட்டு பெண்கள் அணிந்திருந்த தாலிக்கொடி, சங்கிலி உட்பட சுமார் 20 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
இதனை அவதானித்த தருமபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் துணிகரமாக கொள்ளையர்களை விரட்டிச் சென்று, அவர்களுடன் கடுமையாக போராடி இரண்டு கொள்ளையர்களை மடக்கிப்பிடித்தனர். ஏனையவர்கள் தப்பியோடி விட்டனர்.பிடிபட்ட கொள்ளையர்களின் இரு மோட்டார்சைக்கிள்கைளயும் கைப்பற்றிய இளைஞர்கள் அவற்றையும் தர்மபுரம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழாவிற்கு கொடிகாமத்தில் இருந்து 02 ஆண்கள், 05 பெண்கள், 02 சிறுவர்கள் என மொத்தம் 09 பேர் மகேந்திரா பிக்கப் வாகனத்தில் பரந்தன்-முல்லைத்தீவு வீதி ஊடாக வற்றாப்பளை ஆலயம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.
தர்மபுரம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக பயங்கர ஆயுதங்களுடன் நின்ற கொள்ளையர்கள் இவர்களை வழிமறித்து, சரமாரியாக தாக்கத் தொடங்கினார்கள். திடீர் தாக்குதலால் வாகனத்தில் இருந்தவர்கள் நிலைகுலைந்தார்கள். வாகனமும் சேதமாக்கப்பட்டது.
இதையடுத்து பெண்கள் அணிந்திருந்த 20 பவுண் நிறையுடைய தாலிக்கொடி, சங்கிலி உள்ளிட்ட நகைகளை அபகரித்துக் கொண்டு தப்பியோடினர். பக்தர்களின் வாகனம் தம்மை பின்தொடராதிருக்க, வாகனத்தின் திறப்பையும் எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
சுண்டிக்குளம், கட்டைக்காடு பக்கமாக கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர். கொள்ளையர்களின் செயற்பாட்டால் அச்சமடைந்து வாகனத்தில் இருந்தவர்கள் பெரிதாக கத்தி சத்தமிட்டனர். அவர்களின் அவலக்குரலை கேட்டு, தர்மபுர பகுதி இளைஞர்கள் அந்த பகுதியில் ஒன்று கூடினர். விடயத்தை அறிந்து, தமது மோட்டார்சைக்கிள்களில் கொள்ளையர்களை விரட்டி சென்றனர். இதன்போது கொள்ளையர்களிற்கும் இளைஞர்களிற்குமிடையில் நடுவீதியில் பயங்கர மோதல் நடந்தது.
இச் சம்பவம் தொடர்பில் தருமபுரம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் தர்மபுரம் பகுதி இளைஞர்களும் அப்பகுதி பிரதேசசபை உறுப்பினர் ஜீவராசா ஆகியோரும் இணைந்து குறித்த குழுவினரை துரத்திச் சென்று சம்பவத்துடன் தொடர்புபட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் இரண்டு பேரையும் மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.இளைஞர்களின் துணிச்சலான செயற்பாட்டை காவல்துறையினர் பாராட்டினார்கள்.(15)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |