பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு யோசனை

Thursday, August 31, 2023

 


பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களை விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

READ MORE | comments

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஒரு வாரத்தில்


 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாதம் முதல் சில தினங்களில் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை தாள்கள் திருத்தும் பனியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்தத் பரீட்சை, ஜனவரி 23 முதல் பெப்ரவரி 17, 2023 வரை 2,200 பரீட்சை மையங்களில் நடைபெற்றது. 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்களும், 53,513 தனியார் விண்ணப்பதாரர்களும் இதற்காக விண்ணப்பித்திருந்தனர்.

https://chat.whatsapp.com/Lb3JH83r7Ec8lBYTf3R8x6


ஆசிரியர்களின் தொழில்முறை நடவடிக்கைகளால் உயர்தர விடைத்தாள்களை சரிபார்ப்பதில் அவ்வப்போது தடங்கல் ஏற்பட்டதால் இந்த ஆண்டு நடைபெறவிருந்த உயர்தரப் பரீட்சையை பரீட்சை திணைக்களம் ஒத்திவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

கொடிய பக்டீரியா கொழும்புக்கு

Wednesday, August 30, 2023

 


காலி சிறைச்சாலையில் பல கைதிகளை கொன்ற மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நோயாளி ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 49 வயதுடையவர் எனவும், அவர் இரத்மலானை பிரதேசத்தில் உள்ள சுகாதார மற்றும் மருத்துவ நிறுவனமொன்றில் பணியாற்றுவதாகவும் தெரியவந்துள்ளது.

காய்ச்சல் காரணமாக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இரத்மலானை சுகாதார வைத்திய அதிகாரி ஜே. எம். குணதிலக்க தெரிவித்தார்.

இந்த நபர் பணிபுரிந்த இடத்தில் உள்ள சுமார் 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

READ MORE | comments

நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று மழை

 


நாட்டின் சில பகுதியில் இன்று(30) மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீட்டர் வரையான மழை பெய்யலாம் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை, வறட்சியுடனான வானிலையால் 18 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

84,681 குடும்பங்களைச் சேர்ந்த 291,804 பேர் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது

READ MORE | comments

மட்/குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் - 2023

Thursday, August 17, 2023

 மட்/குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் 2023

ஆரம்பம் - 21.08.2023. முடிவு 30.08.2023

29.08.2023 மு.ப 9.00 மணிக்கு தேரோட்டம்

தன்மன் செட்டிகுடி மக்கள் அனைவரும் வருக!!!!



READ MORE | comments

பாலர் பாடசாலையில் இருந்து பாலியல் கல்வி

 


பாலர் பாடசாலை முதல் பதின்மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதல் தொடங்க பிள்ளைகளுக்கான நாடாளுமன்ற மன்றம் முடிவு செய்துள்ளது.

பாலுறவு அறிவை வழங்குவதற்காக தேசிய கல்வி நிறுவகத்தால் பாலர் பாடசாலை குழந்தைகள் மற்றும் பிற தர மாணவர்கள் தொடர்பான 14 புத்தகங்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மருத்துவர்கள், குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஒவ்வொரு தரம் தொடர்பாகவும் தயாரிக்கப்பட்ட புத்தகங்களின் உள்ளடக்கங்கள் ஒருவருக்கொருவர் வேறுபடுகின்றன. இந்தப் புத்தகங்கள் மேலதிக வாசிப்புப் புத்தகங்களாக வழங்கப்படுகின்றன என மன்றத்தின் தலைவி, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் புத்தகம் அச்சிடுவது கடினம் என்பதால், மாணவர்கள் முதலில் ஆன்லைனில் புத்தகத்தைப் படிக்கவும், புத்தகங்களை அச்சிட அரசு சாரா நிறுவனங்களின் உதவியை வழங்கவும் வாய்ப்பளிக்கப்படும் என்று தலைவர் கூறினார்.

பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான முன்னேற்றம் குறித்து அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றும், அந்த முன்னேற்றத்தின் அடிப்படையில் திட்டத்தை தொடங்குவதற்கான குறிப்பிட்ட திகதி தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு அடிப்படைக் காரணம் பாலியல் கல்வி தொடர்பான சமூகத்தின் போதிய அறிவின்மையே எனவும் தலைவர் தெரிவித்தார்.

2019-ம் ஆண்டு ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பாலியல் கல்வியை வழங்க சிலர் எதிராக கருத்து தெரிவித்ததால் அந்த புத்தகத்தை மாணவர்களிடம் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

READ MORE | comments

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுாரிக்கு (தேசிய பாடசாலை) நிரந்தர அதிபர் நியமனம்

Wednesday, August 16, 2023

 


மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லுாரிக்கான நிரந்தர அதிபர் நியமனமானது இன்று (15.08.2023) இலங்கை கல்வி நிருவாக சேவையை சேர்ந்த திரு. அன்ரன் பெனடிக் யோசப் அவர்களுக்கு இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் வழங்கி வைக்கப்பட்டது.

ஏற்கனவே கல்லுாரி அதிபராக கடமையாற்றியிருந்த திரு. பயஸ் ஆனந்தராஜா அவர்கள் கடந்த வருடம்(2022) டிசம்பர் 30 ஆம் திகதி தனது சேவையில் இருந்து ஒய்வு பெற்றிருந்த நிலையில், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப் பணிப்பாளர் திரு.ஜோன் பிரபாகரன் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டடிருந்தார்.
இதே வேளை கல்வி அமைச்சினால் கடந்த மே மாதம் 30 ஆம் திகதியன்று இலங்கையில் உள்ள 17 தேசிய பாடசாலை அதிபர் வெற்றிடங்களுகான விண்ணப்பங்கள் கோரப்பட்டு யுலை 21 ஆம் திகதி நேர்முகப்ரீட்சை இடம்பெற்றதுடன் பொதுச்சேவை ஆணைக்குழுவின் முறையான அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பேராதனை பல்கலைக்கழக பட்டதாரியான திரு.அன்ரன் பெனடிக் யோசப் அவர்கள் இலங்கை கல்வி நிருவாக சேவையில் 2016 ஆம் இணைந்து கொண்டவர். இவர் தனது பாடசாலை, பல்கலைக்கழக காலங்களில் சிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்ததுடன் மும்மொழிச் தேர்ச்சியும் பெற்றவர் என்பதோடு பட்டப்படிப்பின் பின்னர் பல்வேறு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் நிருவாக துறையில் கடமையாற்றிய அனுபவம் கொண்டவர்.

மேலும் கல்வி நிருவாக சேவை நியமனத்தில் முதன்மை நிருவாகிய தெரிவு செய்யப்பட்டர் என்பதோடு தற்போது வடமத்திய மாகாண அனுராதபுரம் கல்வி வலயத்திற்கான நிருவாக பணிப்பாளராக கடமையாற்றி வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னணிப் பாடசாலையாக கருதப்படும் புனித மிக்கேல் கல்லுாரிக்கு நீண்ட காலம் நிரந்தர அதிபர் நியமிக்கப்படாமல் இருந்தது அதன் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுமே என மட்டக்களப்பு மக்கள் அஞ்சியிருந்த நிலையில் இன்று கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நியமனம் மகிழ்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

READ MORE | comments

அரச பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தல்

Tuesday, August 15, 2023

 


அனைத்து அரச , அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகளும் 2ம் தவணை விடுமுறைக்காக ஆகஸ்ட் 17 ஆம் திகதி மூடப்பட்டு ஆகஸ்ட் 28 ஆம் திகதி திறக்கப்படும்   - கல்வி அமைச்சு

READ MORE | comments

ஆசிரியர்,அதிபர்களின் அடுத்த கட்ட சம்பள அதிகரிப்பை வழங்க தேவையான 4,200 கோடி ரூபா நிதியை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்க கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி

 இன்று (14.08.2023)கல்வி அமைச்சருடன் ஆசிரியர்,அதிபர் தொழில் சங்க கூட்டணி சுமார் ஒன்றரை மணி நேரம் நடத்திய கலந்துரையாடலில் ஆராயப்பட்ட விடயங்களும் தீர்மானங்களும் 




1.ஆசிரியர்,அதிபர்களின் அடுத்த கட்ட சம்பள அதிகரிப்பை வழங்க தேவையான 4,200 கோடி ரூபா நிதியை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்க கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி 


2.2022.10.23 க்கு பின்னர் இதவடிவம் முடிக்காமையால் பதவி உயர்வு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்க அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி பெற்று 2023.10.23 வரை ஒருவருட காலத்துக்கு  வழங்கப்பட்டுள்ள சலுகையை நீடித்தல் 


3.இரண்டாம் மொழி சித்தி தொடர்பாக தீர்வொன்றை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்தல் 


4.51 வருட கால பழமையான 1981/13 ஆம் இலக்கச் சுற்றறிக்கையை இற்றைப்படுத்த நடவடிக்கை எடுத்தல் 


5.மாணவர் காப்புறுதி நடைமுறை அடுத்த வரவு திட்டத்தின் மூலம் தொடரப்படும்

 

6.தேசிய பாடசாலைகளில் இருந்து இடமாற்றப்பட்டு செல்லாதிருக்கும் ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அடுத்த வாரம் புதிய சுற்றறிக்கை வெளியிடப்படும் 


7.பாடசாலைகளில் மாணவர்களிடம்,பெற்றோர்களிடம் நிதி அறவிடும் செயல்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் 


8..ஆசிரியர்கள் பெற்றுள்ள கடனுக்கு அதிகரித்த வட்டியைத் தொடர்ந்து அறவிடுவதை நிறுத்த மத்திய வங்கி ஆளுனருடன் கலந்து பேசி தீர்வு காணப்படும்.


9. 40,000 க்கு மேல் ஆசிரியர் வெற்றிடம் இருப்பதால் மாணவர்களின் கல்வி வெகுவாக பாதிக்கப்படுவதாக கல்வி அமைச்சரிடம் தொழில் சங்கங்கள் சுட்டிக்காட்டின .இதற்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.


10.2009 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற அதிபர்களின் பதவி உயர்வு தடைதாண்டல் போன்ற பரீட்சை விடயங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது அவர்களுக்கு சலுகை வழங்கி இதற்கு தீர்வு காணவேண்டும் 


11.ஆசிரியர்,அதிபர்களுக்கு நிலுவைக்கு வரி விதிப்பதை நிறுத்தவேண்டும் 


12.பரீட்சை கொடுப்பனவுகள் உடன் வழங்கப்பட வேண்டும் 


13,.ஓய்வுபெறும்,வெளிநாடு செல்லும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப மாகாண சபை மட்டத்தில் நியமனங்கள்  வழங்க அனுமதி வழங்கப்பட்ட உள்ளது.


இவ்வாறு பல விடையங்கள் கலந்துரையாடி கல்வி அமைச்சரின் சம்மதம் பெறப்பட்டது.

READ MORE | comments

28 வது பொன் அணிகளின் கிரிக்கெட் சமரில் 223 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்றது மட்/சிவாநந்த வித்தியாலய அணி

Sunday, August 13, 2023

 




28 வது பொன் அணிகளின் அணிக்கு 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கட் சமர் 12.08.2023 அன்று காலை மட்/சிவாநந்த வித்தியால விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மட் /சிவாநந்த வித்தியாலய வித்தியிலய கிரிக்கட் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தனர். அந்ந வகையில் அவ்வணி 9 விக்கட்டுகளை இழந்து 297 என்ற சாதனை ஓட்டங்களைப் பெற்றது. இதில் குருவைஷ்ணவன் 107 என்ற சாதனை தனியாள் ஓட்டப் பெறுதியைப் பெற்றார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய திருகோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரி அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 73  ஓட்டங்களைப் பெற்றது. அந்தவகையில் சிவாநந்தா அணியினர் 223 என்று சாதனை வெற்றியைப் பெற்றார்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.











READ MORE | comments

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும் கலப்பு கரப்பந்தாட்ட போட்டியில் சம்பியனானது குருக்கள்மடம் இளைஞர் கழகம்.

 





சர்வதேச #இளைஞர் தினத்தை முன்னிட்டு ஆண் பெண்கள் இணைந்த #கலப்பு #கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி இன்றைய தினம் குருக்கள்மடம் கலைவாணி மகாவித்தியாலய  விளையாட்டு மைதான கரப்பந்தாட்ட திடலில் இடம்பெற்றது 


இப்போட்டியில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவினை பிரதிநிதித்துவப்படுத்திய தெரிவு செய்யப்பட்ட 03 அணிகளும் , ஆரையம்பதி பிரதேச செயலகப்பிரிவை பிரதிநிதித்துவப்படுத்திய தெரிவுசெய்யப்பட்ட  3 அணிகளும் கலந்துகொண்டன.


இப்போட்டியில் கலந்துகொண்ட 06 அணிகளுள் இறுதிப்போட்டிக்கு குருக்கள்மடம் இளைஞர் கழக அணியும் களுதாவளை இளைஞர் கழக அணியும் தெரிவாகின. இறுதிப்போட்டியில்  2 க்கு 1 எனும் கணக்கில் குருக்கள்மடம் இளைஞர் கழகம் சுவீகரித்தது.


இப்போட்டிக்கு இளைஞர் சேவைகள் அதிகாரிகள் , பிரதேச செயலக உறுப்பினர்கள் ,வீரர்கள் , பார்வையாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் 


இதன் போது வெற்றியீட்டிய மற்றும் பங்குகொண்ட அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


சோபிதன்

READ MORE | comments

எதிர்காலத்தில் சாதாரண பரீட்சை 10 ஆம் தரத்தில்?

 


எதிர்காலத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

10 ஆம் தரத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை நடத்துவதற்கான வாய்ப்பு தொடர்பில் தற்போது உரிய தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும், எதிர்காலத்தில் கல்வி மாற்றத்திலும் இந்த விடயம் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

READ MORE | comments

10 வது பாடு மீன்களின் சவால் கிண்ணத்தை சுவிகரித்தது வின்சென்ட் தேசிய பாடசாலை.

Friday, August 11, 2023

 


மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலைகளான மட்/ விச்சன்ட் மகளிர் உயர்தர  பாடசாலைக்கும் மட்/ புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலைக்கும் இடையிலான 10 வது பாடுமீன்களின் சமர் கிறிக்கட் சுற்றுப்போட்டி இன்றைய தினம் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது . 10 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட பாடுமீன்களின் சமர் என்கின்ற நாமத்துடனான இவ் கிறிக்கட் சமர் இரு அணி ரசிகர்களின் பலத்த ஆதரவின் மத்தியில் மிக பிரமாண்ட ஏற்பாடுகளுடன் இடம்பெற்றது.


20 ஓவர்கள் மட்டுப்படுத்தட்ட இவ் கிறிக்கட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மட்/ வின்சென்ட் உயர்தர பெண்கள் பாடசாலை அணித்தலைவி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்திருந்தார் அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவர்கள்  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள்  நிறைவில் 4 விக்கட்களை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர் வின்சன்ட் அணி சார்பாக தனுஜா அவர்கள் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை தனது அணிக்காக சேகரித்து கொடுத்து தனது திறமையினை நிருபித்திருந்தார்


வின்சென்ட் பாடசாலை அணி நிர்ணயித்த  156 என்கின்ற வெற்றியிலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிசிலியா பாடசாலை அணி 20 ஓவர்கள் நிறைவில் 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 3 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது.


இச் சுற்றுப்போட்டிக்கு நடுவர்களாக மட்டக்களப்பு மாவட்ட நடுவர்கள் சம்மேளனத்தினுடைய சிரஸ்ட நிலை நடுவர்கள் கடமையாற்றியிருந்தனர் அந்த வகையில் கள நடுவர்களாக கை. தெய்வேந்திர குமார் மற்றும் இ.புவனேந்திரகுமார் ஆகியோர் செயற்பட்டதோடு போட்டி நடுவராக ந. குகதாசன் அவர்களும் 3 வது நடுவராக ஜாமீன் கபூர் அவர்களும் செயற்பட்டிருந்தனர்


பரபரப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் இறுதிப்பந்துக்கு 5 ஓட்டங்களை பெற்றால் சிசிலியா பாடசாலை அணி வெற்றி வாகை சூடும் என்ற பரபரப்பான நிலைக்கு நகர்ந்திருந்த இப்போட்டியில் இறுதிப்பந்தில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 ஓட்டங்களால் திரில் வெற்றியினை பெற்றுக்கொண்டு 10 வது பாடுமீன் கிண்ணத்தை தனதாக்கி கொண்ட வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை அணி  வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் இறுதிப்பந்து வரை இப்போட்டியை விறுவிறுப்பாக கொண்டு சென்ற சிசிலியா அணி வீராங்கனைகளுக்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

READ MORE | comments

பாடசாலை கல்வியில் செயற்கை நுண்ணறிவும் சேர்க்கப்படும்

Wednesday, August 9, 2023

 


2022 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டின் பிரதான கருப்பொருள் கல்வியின் டிஜிட்டல் மயமாக்கல், அதாவது தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கல்வியை உருவாக்குவது என்றும், 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் கல்வி அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அதன்படி, பொதுக் கல்வி, உயர்கல்வி, தொழில் பயிற்சி ஆகிய மூன்று துறைகள் தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து மூன்று முறையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, தற்போது கற்பிக்கப்படும் தகவல் தொழில்நுட்ப பாடம் படிப்படியாக ஒளிபரப்பப்பட்டு, செயற்கை நுண்ணறிவு பாடம் ஒருங்கிணைக்கப்படும். பாடசாலை கல்வி, 6-9 மற்றும் 10-13 ஆகிய இரண்டு சுற்றுகளாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும், எட்டு ஆண்டு கால செயல்முறை நான்கு ஆண்டுகளில் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்திருந்தார்.

அதேநேரம், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, 85 மண்டலங்களில் உள்ள கணினி வள மையங்களில் புதிய கணினி வள மையங்கள் நிறுவப்பட்டு, மீதமுள்ள 15 மண்டலங்களுக்கு ஆசிரியர் பயிற்சி தொடங்கப்பட்டு, தேவையானவற்றை பராமரிக்க ‘ஃபைபர் ஆப்டிக்’ இணைப்புகள் பெறப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்

மஹிந்தோதய கணினி ஆய்வகங்களில் தற்போதுள்ள இணைய வசதிகள் மற்றும் கணினி உபகரணங்களை புதுப்பித்து, பல முன்னணி பாடசாலைகளுக்கு ஒளியிழை இணைய வசதிகளை வழங்குவதுடன், பிராந்திய அளவில் சிறிய பழுதுபார்க்கும் குழுக்களை உருவாக்கி, இந்த டிஜிட்டல் மயமாக்கல் கல்வி செயல்முறையை தொடங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

READ MORE | comments

மாகாண மட்ட பூப்பந்தாட்டப் போட்டியில் 17 வயதுக்குட்பட்ட பிரிவில் மட்/ குருக்கள்மடம் கலைவாணி ம.வி மாணவிகள் மூன்றாம் இடம்.

 




மட் /பட் குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தின் 18 வயதுப்பிரிவின் பெண்கள் பூப்பந்தாட்ட போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று தேசியத்திற்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியானது திருகோணமலை உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. மேலும் இம் மாணவர்கள் கடந்த வருடம் (2022) மாகாண மட்டத்தில் பூப்பந்தாட்டம் மற்றும் கூடைப்பந்தாட்ட த்தில் முதல் இடத்தை சுவீகரித்தது சிறப்பம்சம்.மேலும் இவ் விளையாட்டிகளில் பங்கு கொண்ட மாணவர்கள் மற்றும் திறம்பட பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர், பயிற்றுவிப்பாளர் போன்றோருக்கு அதிபர் , ஆசிரியர்கள் உட்பட  குருக்கள்மடம் பழைய மாணவர் சங்கம், கிராமத்தின் முக்கியஸ்தர்கள் என பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

READ MORE | comments

பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு

Monday, August 7, 2023

 


வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் பெற (Document Attestation) விண்ணப்பித்த பரீட்சை சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கு இன்று (07) முதல் ஆன்லைனில் வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

இதன்படி, இனிமேல் வெளிவிவகார அமைச்சுக்குச் சென்று சான்றிதழ்களைப் பெற வேண்டிய அவசியமில்லை எனவும், 2001ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் கல்விப் பொதுத் தராதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு இந்த முறை பொருந்தும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் சான்றிதழின் நகலுக்கு பதிலாக, வெளியுறவு அமைச்சகத்தால் சான்றளிக்கப்பட்ட பரீட்சை சான்றிதழின் டிஜிட்டல் நகல் விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்றும் விண்ணப்பதாரருக்கு குறுஞ்செய்திகள் மூலம் இந்த செயல்முறை குறித்து தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி தரப்பினருக்கு இந்த சான்றிதழை ஆன்லைனில் சரிபார்க்க முடியும் என்றும், அதற்கு, certificate.doenets.lk இன் கீழ் வழங்கப்பட்ட ஆன்லைன் சான்றிதழில் அந்த வசதியை வழங்க முடியும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் தேவையாயின் 1911, 0112788137, 0112784323 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

READ MORE | comments

தன்னைப்பற்றி #அவதூறு கூறிய நசீர் #அஹமட்டிடம் 25 கோடி நஷ்ட ஈடு கோரி நோட்டிஸ் அனுப்பிய #கிழக்கு #ஆளுநர் #செந்தில் தொண்டமான். அவ் நிதியை கிழக்கு பாடசாலை அபிவிருத்திக்கு பயன்படுத்த உத்தரவு

Thursday, August 3, 2023

 


தன்னைப்பற்றி #அவதூறு கூறிய  நசீர் #அஹமட்டிடம் 25 கோடி நஷ்ட ஈடு கோரி நோட்டிஸ் அனுப்பிய #கிழக்கு #ஆளுநர் #செந்தில் தொண்டமான். அவ் நிதியை கிழக்கு பாடசாலை அபிவிருத்திக்கு பயன்படுத்த உத்தரவு

கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர்  அமைச்சுப் பதவிப் பெற்று மொட்டுக் கட்சிக்குத் தாவிய சுற்றாடல்துறை  அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபா (250 மில்லியன்) நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடந்த மாதம் 11ம் திகதி இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நசீர் அஹமட் கிழக்கு மாகாண ஆளுநர் தொடர்பில் பொய்யான கருத்துக்களையும் அரச தொழில் இடமாற்றங்கள் குறித்து பிழையான  தகவல்களையும் வெளியிட்டு அவற்​றை கிழக்கு மாகாண ஆளுநருடன் நேரடியாகவும்  மறைமுகமாகவும் தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நோட்டிஸில் கோரியுள்ளார்.

அத்துடன் இந்த நோட்டிஸ் கிடைக்கப் பெற்று 14 நாட்களுக்குள் 25 கோடி ரூபா நஷ்டஈட்டுத் தொகையை கிழக்கு மாகாண பாடசாலை வளர்ச்சிக்கு வழங்குமாறும் இல்லையேல் நசீர் அஹமட் மீது மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் செந்தில் தொண்டமான் எச்சரித்துள்ளார்.

நசீர் அஹமட் வழங்கும் நட்டஈட்டுத் தொகை கிழக்கு மாகாணத்தில் உள்ள 10 முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அந்த பாடசாலைகளின் பெயர் பட்டியலையும் இணைத்துள்ளார்.

காத்தான்குடி வலயக் கல்வி பணிப்பாளராக தற்காலிக நியமனம் பெற்றிருந்த அதிபர் சேவை தரத்தில் இருந்த ஒருவர் அப்பதவிக்கு தகுதியான கல்வி நிர்வாக சேவை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட பின்  இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்த விடயத்தை அரசியல் ரீதியில் தூக்கிப்பிடித்த அமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண ஆளுநர் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகப்படுத்தி இந்த இடமாற்றத்தை செய்ததாக  கடும் விமர்சனங்களை முன்வைத்தார் என ஆளுநர் அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

READ MORE | comments

இன்று முதல் அமுலாகும் நீர் கட்டணத் திருத்தத்தின் முழுமையான விபரம்


நீர் கட்டணத்தை திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ளார்.

இந்த நீர்க் கட்டணத் திருத்தத்தின் மூலம் நீர்க் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், பயன்படுத்தப்படும் அலகுகளின் அளவிற்கேற்ப கட்டணமும் அதிகரிக்கிறது.

எவ்வாறாயினும், இந்த கட்டண திருத்தத்தில் சமுர்த்திப் பயனாளர்கள் மற்றும் தோட்ட வீடுகளின் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்துத் துறைகளுக்கான நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய கட்டணத் திருத்தத்தின் மூலம் உள்நாட்டு நீர்க் கட்டணமும் முதல் 05 அலகுகளுக்கு, அலகு ஒன்றுக்கு 20 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான கட்டண திருத்தத்தில் பொது குடிநீர் குழாய்கள், தோட்டத்து தண்ணீர் குழாய்கள், அரச பாடசாலைகள், மத வழிபாட்டு தலங்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரச மருத்துவமனைகளின் குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாக காணப்படுகின்றது.

ஒரு அலகுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்துவதுடன், மாதாந்திர சேவைக் கட்டணமும் இந்தத் திருத்தத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் முதல் திகதி நீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.

ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணங்களுக்கு மேலதிகமாக, நுகர்வோரின் கழிவுநீர்க் கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு நுகர்வுக்கான புதிய கட்டண உயர்வுகள் வருமாறு;

0 – 5 அலகுகள் ரூ. 60
மாத கட்டணம் ரூ. 300

6 -10 அலகுகள் ரூ. 80
மாத கட்டணம் ரூ. 300

11 -15 அலகுகள் ரூ. 100
மாதாந்திர கட்டணம் ரூ.300

16 – 20 அலகுகள் ரூ. 110
மாத கட்டணம் ரூ. 400

21 – 25 அலகுகள் ரூ. 130
மாத கட்டணம் ரூ. 500

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.


READ MORE | comments

சுகாதாரப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

Wednesday, August 2, 2023

 


நாளை (03) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சுகாதார சேவைகள் தொடர்பான பிரச்சினைகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதைத் தடைசெய்து சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருந்தன.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுகாதார செயலாளர் இன்று (02) கலந்துரையாடல் ஒன்றை வழங்கியதன் காரணமாகவே பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்ததாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

மேலும், தொழிற்சங்கங்களை நசுக்குவதற்கு தாம் செயற்படப்போவதில்லை என்றும், சுகாதாரச் செயலர் சுகாதார சேவையின் நல்வாழ்வுக்காக கருத்து வெளியிடுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார்.

READ MORE | comments

சுமார் 5,450 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

 


சுமார் 5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், இந்த ஆசிரியர்கள் மாகாணத்தின் பெயருக்கு ஏற்ப விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய முக்கிய பாடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மாகாணங்களினூடாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர்கள் கல்வி அமைச்சினால் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் எனவும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டார்.

READ MORE | comments

வவுனியாவில் நள்ளிரவில் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் ; ஐவர் கைது !

Tuesday, August 1, 2023

 


வவுனியா – தோணிக்கல் பகுதியில் நள்ளிரவில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெதவெத்தியகுளம், சிவபுரம், பாம்பேமடுவ மற்றும் நெலக்குளம் ஆகிய பகுதிகளில் வைத்து நேற்று (31) மாலை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

வவுனியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் வவுனியா பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு, குற்றச்செயல்களுக்கு உதவிய 3 மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

வவுனியாவைச் சேர்ந்த 24, 27, 31 மற்றும் 34 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

கடந்த ஜுலை மாதம் 23ஆம் திகதி பிறந்தநாள் விழா நடைபெற்ற வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கூரிய ஆயுதத்தால் அங்கிருந்தவர்களை தாக்கி வீட்டிற்கு தீவைத்துள்ளனர்.

இதன்போது 10 பேர் தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தம்பதி உயிரிழந்தனர்.

02 வயதுடைய ஆண் குழந்தையும், 07 வயது மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்களும், 42 வயதுடைய ஆண் ஒருவரும் வவுனியா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். .

முகமூடி அணிந்த குழுவொன்று வீட்டிற்கு தீ வைப்பதற்கும் குடியிருப்பாளர்களைத் தாக்குவதற்கும் வரும் சிசிடிவி காட்சிகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதுடன், விசாரணைகளின் மூலம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

READ MORE | comments

கிழக்கு மாகாணத்திற்கு உதவ முன்வந்துள்ள அவுஸ்திரேலியா!

 


கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.


இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆதரவளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறை , மீன்பிடி துறை, கனிம வளம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைதரசன் போன்ற திட்டங்களை அவுஸ்திரேலியா அரசாங்கம், இலங்கையில் முன்னெடுப்பதற்கு உதவுவதாக உறுதியளித்தது.
READ MORE | comments

ஐந்து மாவட்டங்களில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு

 


சமனலவெவ நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்காக நீர் திறந்துவிடப்படுமாயின் ஐந்து மாவட்டங்களில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே விவசாயத்திற்கு தண்ணீர் விட முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு செய்யப்படுமானால் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் 4 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கமைய, மின்வெட்டு இன்றி திறந்து விடக்கூடிய அதிகபட்ச நீரை தொடர்ந்தும் விடுவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இரண்டு மணித்தியால மின்வெட்டை தாங்கிக்கொண்டு விவசாயத்திற்கு தேவையான நீரை விடுவிப்பது தற்போது அத்தியாவசியமான விடயம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

READ MORE | comments

பிள்ளைகள் ஜாக்கிரதை – மனநல மருத்துவரின் எச்சரிக்கை

 


கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஆன்லைன் கற்றல்-கற்பித்தல் செயல்முறை வெற்றிகரமான முறையாக இல்லை என்று நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்திருந்தார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்த யுனெஸ்கோ அமைப்பின் விசேட அறிக்கையில் பாடசாலை மாணவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி தடை செய்யப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“பாடசாலைகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதால் அவர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம் என்ற எண்ணமே இதற்குக் காரணம். சமீபத்திய நாட்களில், கொவிட்-19 தொற்றுநோயால், பாடசாலைகளில் கைத்தொலைபேசிகளின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கண்டோம், அதே போல் “பாடசாலை மாணவர்களிடையே வீட்டில் கைத்தொலைபேசிகளின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

இத்துடன் இந்த பாடசாலை மாணவர்கள் கற்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால் எதிர்மறையான பல விஷயங்களும் நடந்து வருகின்றன. ஒரு விஷயம் என்னவென்றால், ஆசிரியரிடம் நேரடியாகக் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இந்த கைத்தொலைபேசி மூலமாகவோ அல்லது இணையம் மூலமாகவோ கற்றுக்கொள்வது ஆசிரியரிடம் நேரடியாகக் கற்றுக்கொள்வது போல் சிறந்த கற்றல் அல்ல என்பதை யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டியது.

இலத்திரனியல் சாதனங்களின் பாவனையினால் பாடசாலை மாணவர்கள் நடைமுறைக் கல்வியில் இருந்து ஒதுக்கப்படும் அபாயம் உள்ளது.

ஆசிரியர் ஒருவர் ஆளாளுக்கு கேள்விகள் கேட்டு உண்மைகளை நன்கு புரிந்து கொண்டு கற்பிப்பது போல் தொலைபேசியில் கற்றல் வெற்றியடையாது. அதேபோல், குழந்தைகள் தங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி கேள்விகளைக் கேட்கிறார்கள், ஆசிரியர்களுடன் தொடர்புகொண்டு நடைமுறை விஷயங்களைச் செய்கிறார்கள், மேலும் யுனெஸ்கோ இந்த கைத்தொலைபேசி மூலமாகவோ அல்லது இந்த மின்னணு சாதனத்தின் மூலமாகவோ கற்றலை ஒருபோதும் செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளது..” என அவர் தெரிவித்திருந்தார்.

READ MORE | comments

இலங்கை நேரம்/SRI LANKAN TIME & DATE

Blogger Widgets

KURUNEWS.COM UPDATE

Blog Archive

Powered by Blogger.

Search This Blog

Join My Facebook

Join My Facebook

எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்


எம்முடன் இணைந்திருப்போர்

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |