Home » » 10 வது பாடு மீன்களின் சவால் கிண்ணத்தை சுவிகரித்தது வின்சென்ட் தேசிய பாடசாலை.

10 வது பாடு மீன்களின் சவால் கிண்ணத்தை சுவிகரித்தது வின்சென்ட் தேசிய பாடசாலை.

 


மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலைகளான மட்/ விச்சன்ட் மகளிர் உயர்தர  பாடசாலைக்கும் மட்/ புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலைக்கும் இடையிலான 10 வது பாடுமீன்களின் சமர் கிறிக்கட் சுற்றுப்போட்டி இன்றைய தினம் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றிருந்தது . 10 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட பாடுமீன்களின் சமர் என்கின்ற நாமத்துடனான இவ் கிறிக்கட் சமர் இரு அணி ரசிகர்களின் பலத்த ஆதரவின் மத்தியில் மிக பிரமாண்ட ஏற்பாடுகளுடன் இடம்பெற்றது.


20 ஓவர்கள் மட்டுப்படுத்தட்ட இவ் கிறிக்கட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மட்/ வின்சென்ட் உயர்தர பெண்கள் பாடசாலை அணித்தலைவி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்திருந்தார் அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவர்கள்  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள்  நிறைவில் 4 விக்கட்களை இழந்து 155 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டனர் வின்சன்ட் அணி சார்பாக தனுஜா அவர்கள் ஆட்டமிழக்காமல் 42 பந்துகளுக்கு 50 ஓட்டங்களை தனது அணிக்காக சேகரித்து கொடுத்து தனது திறமையினை நிருபித்திருந்தார்


வின்சென்ட் பாடசாலை அணி நிர்ணயித்த  156 என்கின்ற வெற்றியிலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிசிலியா பாடசாலை அணி 20 ஓவர்கள் நிறைவில் 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 3 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது.


இச் சுற்றுப்போட்டிக்கு நடுவர்களாக மட்டக்களப்பு மாவட்ட நடுவர்கள் சம்மேளனத்தினுடைய சிரஸ்ட நிலை நடுவர்கள் கடமையாற்றியிருந்தனர் அந்த வகையில் கள நடுவர்களாக கை. தெய்வேந்திர குமார் மற்றும் இ.புவனேந்திரகுமார் ஆகியோர் செயற்பட்டதோடு போட்டி நடுவராக ந. குகதாசன் அவர்களும் 3 வது நடுவராக ஜாமீன் கபூர் அவர்களும் செயற்பட்டிருந்தனர்


பரபரப்பாக இடம்பெற்ற இப்போட்டியில் இறுதிப்பந்துக்கு 5 ஓட்டங்களை பெற்றால் சிசிலியா பாடசாலை அணி வெற்றி வாகை சூடும் என்ற பரபரப்பான நிலைக்கு நகர்ந்திருந்த இப்போட்டியில் இறுதிப்பந்தில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் விட்டுக்கொடுத்து 3 ஓட்டங்களால் திரில் வெற்றியினை பெற்றுக்கொண்டு 10 வது பாடுமீன் கிண்ணத்தை தனதாக்கி கொண்ட வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலை அணி  வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் இறுதிப்பந்து வரை இப்போட்டியை விறுவிறுப்பாக கொண்டு சென்ற சிசிலியா அணி வீராங்கனைகளுக்கும் இந்த வேளையில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |