நாளை (03) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
சுகாதார சேவைகள் தொடர்பான பிரச்சினைகளை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதைத் தடைசெய்து சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு எதிராக சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருந்தன.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சுகாதார செயலாளர் இன்று (02) கலந்துரையாடல் ஒன்றை வழங்கியதன் காரணமாகவே பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்ததாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
மேலும், தொழிற்சங்கங்களை நசுக்குவதற்கு தாம் செயற்படப்போவதில்லை என்றும், சுகாதாரச் செயலர் சுகாதார சேவையின் நல்வாழ்வுக்காக கருத்து வெளியிடுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார்.
0 comments: