Home » » இன்று முதல் அமுலாகும் நீர் கட்டணத் திருத்தத்தின் முழுமையான விபரம்

இன்று முதல் அமுலாகும் நீர் கட்டணத் திருத்தத்தின் முழுமையான விபரம்


நீர் கட்டணத்தை திருத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நீர் கட்டண திருத்தம் அமுலுக்கு வரும் வர்த்தமானி அறிவித்தலை நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் வெளியிட்டுள்ளார்.

இந்த நீர்க் கட்டணத் திருத்தத்தின் மூலம் நீர்க் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதுடன், பயன்படுத்தப்படும் அலகுகளின் அளவிற்கேற்ப கட்டணமும் அதிகரிக்கிறது.

எவ்வாறாயினும், இந்த கட்டண திருத்தத்தில் சமுர்த்திப் பயனாளர்கள் மற்றும் தோட்ட வீடுகளின் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்துத் துறைகளுக்கான நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய கட்டணத் திருத்தத்தின் மூலம் உள்நாட்டு நீர்க் கட்டணமும் முதல் 05 அலகுகளுக்கு, அலகு ஒன்றுக்கு 20 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான கட்டண திருத்தத்தில் பொது குடிநீர் குழாய்கள், தோட்டத்து தண்ணீர் குழாய்கள், அரச பாடசாலைகள், மத வழிபாட்டு தலங்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் அரச மருத்துவமனைகளின் குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாக காணப்படுகின்றது.

ஒரு அலகுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்துவதுடன், மாதாந்திர சேவைக் கட்டணமும் இந்தத் திருத்தத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த செப்டம்பர் முதல் திகதி நீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.

ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணங்களுக்கு மேலதிகமாக, நுகர்வோரின் கழிவுநீர்க் கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு நுகர்வுக்கான புதிய கட்டண உயர்வுகள் வருமாறு;

0 – 5 அலகுகள் ரூ. 60
மாத கட்டணம் ரூ. 300

6 -10 அலகுகள் ரூ. 80
மாத கட்டணம் ரூ. 300

11 -15 அலகுகள் ரூ. 100
மாதாந்திர கட்டணம் ரூ.300

16 – 20 அலகுகள் ரூ. 110
மாத கட்டணம் ரூ. 400

21 – 25 அலகுகள் ரூ. 130
மாத கட்டணம் ரூ. 500

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.

No description available.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |